Icon to view photos in full screen

“மக்களை சந்திக்கவும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பொம்மைகள் வாங்கவும் எனக்கு மிகவும் பிடிக்கும்!”

31 வயதான சோஹ்கோடின்லென் ஹாகிப் மக்களுடன் கலந்து உறவாட மிகவும் விரும்புவார். சந்தால் மாகாணத்தில் உள்ள திங்கான்க்பை கிராமத்து வீதிகளில் தவழ்ந்து செல்லும் போது அந்த கிராம மக்கள் அவரை ஏளனமாக “ஹே சோங்கோ யார் உந்தன் காதலி?” கேட்பார்கள். அவர்கள் நக்கலாகத்தான் கேட்கிறார்கள் என்று கூட அவருக்கு புரியாது. ஏனென்றால் அவருக்கு Down Syndrome என்னும் பாதிப்பால் மன வளர்ச்சி குன்றியவர். அவருடைய மருத்துவச் சான்றிதழ்படி இவர் Down’s Syndrome என்னும் பாதிப்பும், 90 சதவிகிதம் மனநல குறைபாடும் உள்ளவர். அப்படி இருந்தும், அவர் எல்லோருடனும் கலகலப்புடனும், துடிப்புடனும் புன்னகையுடனும்   பழகுகிறார்.  

சோஹ்கோடின்லெநால்  “தண்ணீர்”, “பசு”, “பூனை”, “சர்ச்” போன்ற ஒரு சில வார்த்தைகளையே உச்சரிக்க முடியும். தன் அன்றாட வாழ்க்கை தேவைகளை கூட கவனித்துக் கொள்ள முடியாது. இன்று வரை அவரின் தாயும், மூத்த சகோதரருமே அவரை குளிப்பாட்டியும், அவர் கழிப்பறை செல்வதற்கு உதவவும் உணவு ஊட்டவும் செய்கிறார்கள். சிஷு சரோத்தி என்னும் நிறுவனத்தில் பணி புரியும் லுநோலால் குக்கி என்னும் ஆராய்ச்சியாளர் மூலம் சோங்கோ பற்றிய சோஹ்கோடின்லெநால் பற்றிய விவரங்களை சேகரித்தோம். அந்த ஆராய்ச்சியாளரின் பெற்றோர்கள் சோஹ்கோடின்லெநாவலின் வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருந்தார்கள். சோஹ்கோடின்லெநாவலின் பெற்றோர்கள் “தாடோ குக்கி” என்னும் மொழியை எங்களுக்காக மொழி பெயர்த்தார். இதை தவிர, அவரே சோஹ்கோடின்லெநாவுடன்  நெருங்க பழகியதால் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

சோஹ்கோடின்லெநாவலின் குடும்பத்தினர் “குக்கி” என்னும் பழங்குடியினர். அவர்கள் 2018 ம் ஆண்டு “Y Thingkangphai”  என்னும் இடத்திற்கு குடி புகுந்தனர். அந்த கிராமத்தின் பழங்குடியினர் தலைவர் அவர்களுக்கு ஒரு நிலப்பகுதியை ஒதுக்கினார். சோங்கோவின் பெற்றோர்கள் தங்கள் 64 வயது வரை அந்த நிலத்திலேயே உழவு தொழில் செய்தும், நெல் பயிரிட்டும், அரசாங்கத்தின் MNREGA பொது நல துறை திட்டத்தின் மூலம் வரும் பணத்திலும் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். விவசாயம் செய்யாத மாதங்களில் சோஹ்கோடின்லெநாவலின் தந்தை அவ்வப்போது ஆடு மேய்த்து 500 ரூபாய் ஈட்டுவார். Center for Community Initiative (CCI) என்னும் நிறுவனம் எங்களுக்கு இந்த குக்ராமத்தை காட்ட, சுமார் 70 கிலோமீட்டர் காரில் அழைத்து சென்றனர்.
 
சோஹ்கோடின்லெநாவலின் வாழ்க்கை இதை விட பிரகாசமாக அமைந்திருக்க முடியுமா? அவரின் நோயை முதலிலேயே நிர்ணயம் செய்து அதற்கு தகுந்த சிகிச்சை அளித்திருந்தால் அவர் இப்படி கஷ்டப்பட்டிருப்பாரா? Down’s Syndrome குணப்படுத்தக் கூடிய ஒன்றே! ஆனால் குழந்தைப் பருவத்திலேயே நிர்ணயிக்கப்பட்டு, நல்ல வசதிகளுள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றால்தான் குணமடைய முடியும். ஆனால் அவர் வாழ்ந்த குக்க்ராமாத்தில் அதற்கெல்லாம் வசதி இல்லை. தன் ஐந்தாம் வயது முதல்  அவர் நடக்கவே இல்லை. யாரோ ஒருவர் அவருக்கு தானே இயங்க கூடிய சக்கர வண்டியை அளித்தார். ஆனால் குண்டும் குழியும், மேடும் பள்ளமுமாக இருந்த சாலைகள் கொண்டிருந்த அந்த கிராமத்தில் அதை இயக்க முடியாது. இன்று வரை அவர் தன்  இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் நிலத்தில் வைத்து தவழ்ந்தே செல்கிறார்.

அவர் இருந்த மாகாணத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ, சிறப்பு பள்ளிகூடங்களோ, எதுவும் இல்லை. காங்க்போகி மாகாணத்தில் உள்ள Mangwa School for Handicapped என்னும் பள்ளியில் இரண்டு வருடம் தங்கினார். ஆனால் உடல் நிலை சரியாக இல்லாததாலும், பண வசதி இல்லாததாலும் அதை தொடர முடியாமல் அங்கிருந்தும் வெளியேறினார்.
 
சோஹ்கோடின்லென் தன் குடும்பத்தின் அரவணைப்பில் வெளி உலக எதிர்ப்புகளை மறந்து மற்றவர் இல்லங்களில் டெலிவிஷனில் கார்டூன்கள் பார்த்து இன்பமாக காலத்தை கழிக்கிறார். ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமசுக்கும், புத்தாண்டிற்கும் சர்ச்சிற்கு சென்று, அங்கு வருபவர்கள் கொடுக்கும் பரிசுகளிலும், பொம்மைகளிலும் இன்பம் காண்கிறார். அவர் மனத்தில் என்னென்ன எண்ணங்கள் ஓடுகின்றன? எது அவரை மகிழ்ச்சி ஊட்டுகிறது? எது அவரை சோகத்தில் ஆழ்த்துகிறது? எது அவருக்கு கோபம் விளைவிக்கிறது? எதைக் கண்டு அவர் பயப்படுகிறார்? இந்த கேள்விகள் எல்லாம் பதிலற்ற மர்மபுதிர்களாகவே என்றென்றும் இருக்கும்!

புகைப்படங்கள்:

விக்கி ராய்

வீடியோ:

சந்தன் கோமேஸ்