Icon to view photos in full screen

“ஒருவருக்கு வாழப் பிடிக்காமல் போனால், அதற்கப்புறம் ஒரு அற்புதமான திருப்புமுனை அவர் வாழ்வில் நிகழும் என நான் திடமாக நம்புகிறேன்!”

ஃபாதிமா பீ. வீ..யின் பிறந்த நாள் டிசம்பர் மூன்றாம் தேதி. இது சர்வதேச ஊனமுற்றோர்களுக்கான நாள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுகின்றன என்பதாலோ என்னவோ, அவர் ஊனமுற்ற ஒருவரை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார்!
ஃபாதிமாவின் கணவர் பெயர் ஜெஸ்ஃபர்  பி.கோட்டக்குன்னு. 35 வயதான இவர் பரிசுகளை வென்ற ஓவியர். கழுத்துக்கு கீழ் அசைவே இல்லாமல் பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டவர். ஆனாலும், அவருக்கென்றே பிரத்யேகமாக செய்யப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் சக்கரநாற்காலியை தன் கன்னங்களின் மூலமே இயக்கி ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்கிறார். முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களின் உருவப்படத்தை தானே வரைந்து அவரிடம் தானே கொடுக்கவும் செய்தார். ஜெஸ்ஃபர் தீட்டிய 15 சதுர அடி அளவுள்ள ஓவியத்தில் மிக அருமையாக துபாய் மன்னரையும், இளவரசரையும் வரைந்துள்ளார். இது துபாய் அரசரின் அரண்மனையில் எல்லோர் பார்வைக்கும் புலப்படும்படி பிரதானமாக வைக்கப் பட்டுள்ளது. இவருடைய ஓவியங்கள் மும்பை, பெங்களூர், சிங்கப்பூர் போன்ற இடங்களில் நன்கு காட்டப்பட்டுள்ளன. 2021ம் வருடம் ஏப்ரல் மாதம் துபாய் நகரில் நடந்த உலக கலை கண்காட்சியில், இவருடைய பதினைந்து ஓவியங்கள் இடம்பெற்றன.
  
ஜெஸ்ஃபருக்கு ஐந்து வயது ஆகும் போது, muscular atrophy என்னும் தசை சிதைவுக்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கின. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர் உடலின் மேல் பாகத்தில் இருக்கும் தசைகளும் வலுவிழக்க தொடங்கின. பதினைந்து வயது ஆகும்போது அவருடைய டயரியில் எழுதுவதற்கோ, அல்லது, அவருக்கு பிடித்த “Jungle Book” படத்தின் கார்டூன் கதாபாத்திரங்களை வரைவதற்கோ முற்றிலும் இயலாமல் போயிற்று. ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற சிகிச்சைகள், முதலில் உதவுவது போல இருப்பினும், இவரின் உபாதைகளை குணப் படுத்த முடியவில்லை. இதனால் மனமொடிந்து போன இவர், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, அதற்கு ஒரு நாளையும் குறித்து விட்டார்!

அந்த நாளும் வந்தது; வந்து செல்லவும் சென்றது! இவர் நெகிழ்வுடன் நினவு கூர்ந்தார்: “ஏமாற்றமும், வெறுப்பும் மிக தாங்க முடியாமல், உச்சிக்கு செல்லும் போது, இறைவன் கண் திறந்து, அவனருளால் திடீர் என்று எதிர்பாராத விதமாக ஏதாவது நிகழ்கிறது!”. ஒரு அழிப்பி (eraser) பின்பாகத்தில் பொருத்திய ஒரு பென்சிலை தன் இதழ்களின் நடுவே பிடித்து ஓவியம் வரைய துவங்கினார்! வரைந்ததை சற்று அழிக்க eraser பக்கத்தை  ஓவியத்தின் பக்கம் திருப்பும்போது பென்சில் நுணி இவரின் வாயில் வைத்து கொள்வதால் கூரான பகுதி இவரின் வாயின் உட்பகுதியையும், கன்னத்தையும் காயப்படுத்தி, இரத்தம் கசியும்! மேலும், ஓவியத்துக்கு மிக அருகே (பென்சில் தூரத்தில்) முகத்தை வைக்க வேண்டி இருந்ததால், கண்கள் வலிக்க தொடங்கின. இத்தனை இன்னல்களையும் பொறுத்துக்கொண்டு, விடாமுயற்சியுடன் பழகிப் பழகி, தன் திறனை மேம்படுத்தினார். காலப் போக்கில் தண்ணீர் வண்ணங்களையும் (watercolours), அக்ரிலிக் (acrylic) வண்ணங்களையும், பெரும் உருவப்படங்களை வரையும் oil paint முதலியவற்றையும் பயன் படுத்த தொடங்கினார்.
 
ஓவியம், கலை இவைகளில் மட்டும் ஜெச்ஃபர்  தன்னை கட்டுபடுத்திக் கொள்ளவில்லை. தன்னார்வு தொண்டர் ரயீஸ் ஹிடயா, மற்றும் சில நண்பர்களுடன் “Green Palliative” என்னும் தன்னார்வு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம், இவர்கள்  ஊனமுற்றோர் மற்றும் சுற்றுச்சுழல் சார்ந்து உள்ள பிரச்சனைகளை பறை சாற்றி, விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்கள். இந்த நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் ஜெச்ஃபரால் போடப்பட்ட செய்திகளை ரசித்து , ஓமான் நகரில் இருக்கும் மலையாள பெண்மணி ஃபாதிமா என்பவர் இவருடன் தொடர்பு கொண்டார். இப்படி தொடங்கிய நட்பு, கலை, கவிதை, வாழ்க்கை அனுபவங்கள் என்பவை பற்றி நீண்ட நேரம் தொலைபேசியில் அளவளாக தொடங்கினார்கள். இதுவே காதலாக மலர்ந்ததால் ஜெச்ஃபர் தன்னை திருமணம் புரிந்து கொள்ளுமாறு ஃபாத்திமாவை வேண்டிக்கொண்டார். இதற்காகவே காத்துக்கொண்டு இருந்தது போல, ஃபாதிமவும் உடனே சம்மதித்தார்! வீடியோவில் பேசும்போது தன் ஊனத்தின் தீவிரத்தையும் அளவையும் ஜெச்ஃபர் மறைக்காமல் வெளிப்படுத்தியும் ஃபாதிமா தன் முடிவை மாற்றிக் கொள்ளவே இல்லை!
2015ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்தியா வர விமான டிக்கெட் எடுத்தார். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கும்போது தன் பெற்றோர்களிடம் தன்னுடைய முடிவை தெரியப் படுத்தினார். ஜெச்ஃபர் தன் காதலியை – மனைவியாக போகிறவரை – முதன்முதலாக காலிகட் விமான நிலையத்தில் சந்தித்தார். “எங்கள் திருமணம் நவம்பர் 30ம் தேதி நடைபெற்றது. டிசம்பர் மூன்றாம் தேதி சர்வதேச ஊனமுற்றோர் தின நிகழ்சிகளில் ஆர்வமுடன் இருவரும் பங்கேற்றனர்.

2018ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கேன்ஜால் ரூமி என்று இந்த குழந்தைக்கு பெயர் சூட்டினார்கள். இந்த குழந்தை பிற்காலத்தில் தன்னுடைய சிறப்பு மிக்க பெற்றோர்களின் சாதனைகளை கவிதையாக புனைந்து தன் நண்பர்களை வியப்பில் ஆழ்த்துவார் என எதிர்பார்க்கலாம்!

புகைப்படங்கள்:

விக்கி ராய்