Icon to view photos in full screen

“நான் பள்ளியில் பந்து விளையாடுவேன். அவ்வப்போது என் தாய் எனக்கு பிடித்தமான முருங்கைக்காய் கோழி குழம்பையும், ஆலூ பராட்டவையும் செய்வார்”

அந்தி மாலை பொழுதில் 14 வயதான அமன் குமார் மஹதோ சிறப்புப் பள்ளிகூடத்திலிருந்து வீடு திரும்புகிறான். மன நலம் குன்றிய அவர் ராஞ்சியில் உள்ள Deepshikha Institute of Child Development and Mental Health என்னும் பள்ளியில்  ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறான். இந்தப் பள்ளி  National Trust எனப்படும் மன நலம் குன்றியோருக்கு உதவி புரிய இந்திய அரசாங்கத்தின் அமைப்பின் மாநில தலைமை மையத்தில் உள்ளது. 33 வயதான அவர் தாய் சானு தேவி வீட்டு வேலைகளை செய்பவர். பிதோரியா என்னும் ஊரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து பள்ளி 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தன் பணிகளை முடித்து, அதனிடையே தன் மகன் அமனுக்கு மதிய உணவு செய்து கட்டிக் கொடுத்து, காலை ஏழு மணிக்கு கிளம்பி, 9.30 மணிக்கு பள்ளி பேருந்து வரும் இடத்தில் வந்து அவனை  பள்ளி பேருந்தில் ஏற்றி வைத்து, பின்னர் தன் பணிகளை தொடர்ந்து, மீண்டும் மாலை அதே இடத்திற்கு வந்து அவனை  பேருந்தில் இருந்து இறக்கி, ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து செல்வார்.

“எனக்கு பள்ளி பிடித்திருக்கிறது. அங்கே பந்து விளையாடலாம்!” என்கிறான் அமன். பேச்சு குளறுவதால் ஒரு சில வார்த்தைகள் சரியாக புரியும்படி இல்லை. அவன்  தாயே அந்த பேச்சினை விளக்குகிறார். “உனக்கு பிடித்த ஆசிரியர் யார்?” என்ற கேள்விக்கு “Jhuma ma’am” என்று கூறுகிறான். (ஜும்மா குப்தா என்னும் உதவி ஆசிரியரை குறிக்கிறார் என்று நினைக்கிறோம்)

“இன்று சிற்றுண்டி சாப்பிட்டாயா?” என்று நாங்கள் கேட்க, “மஹி அதை திருடி உண்டு விட்டான்!” என்று பதில் அளித்தா.ன் “அப்போ, நீ என்ன செய்தாய்?” என்று நாங்கள் கேட்க, “நான் அவனை அடித்து விட்டேன்!” என்று சொன்னான்!

நாங்கள் அவர்களை சந்திக்கும் முந்தின நாள் சானு சாதமும் வெண்டைக்காய் கறியையும் சமைத்து இருந்தார். சமைத்த அனைத்தையுமே அமன் சாப்பிட்டுவிட்டு 12 வயதான தன் தம்பி அன்கித்திற்கு கொஞ்சம் கூட விட்டு வைக்கவில்லை! அண்ணன் தம்பி இருவரும் எப்போதுமே சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அமனுக்கு கோழிக் கால்களும், “திடீர்” நூடுல்சும் (instant noodles) மிகவும் பிடிக்கும். அதிலும் ஆலு பராட்டா என்றால் மிக மிக விருப்பம்!

இவ்வளவு கலகலப்பாக தோன்றும் காட்சிக்கு பின்னால் ஒரு சோகக் கதை மறைந்துள்ளது. சானு 24 வயதாக இருக்கும் போது விதவை ஆனார். அதன் பிறகு, இரண்டு குழந்தைகளையும் பிறர் தயவு இல்லாமல், சொந்த முயற்சியாலேயே வளர்த்து காட்டி உள்ளார். வறுமையான குடும்பத்தில் பிறந்த சானு, மகேஷ் மஹதோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மகேஷ் தன்  தந்தைக்கு சொந்தமான நிலங்களில் உழவுத்தொழில் செய்து பணம் ஈட்டினார். சானுவின் புகுந்த வீட்டினர் அவரை மிகவும் துன்புறுத்தினார்கள். சொந்த நிலம் இல்லாத பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக மகேஷை அடிக்கவும் செய்தார்கள்! திருமணம் முடிந்து இரண்டே மாதங்களில் சானு கருவுற்றார். 2007ம் வருடம் ஆகஸ்ட் மாதம் அமன் பிறந்தான். அமனுக்கு ஒரு வருடம் ஆன போது மீண்டும் சானு கரு தரித்தார்.

அமனுக்கு ஒரு வயது ஆனா போது கடும் ஜுரத்தால் தாக்கப்பட்டு, உடல் விறைத்து போய், மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பேச்சும், அசைவும் பெற மிகுந்த நாட்கள் ஆகின. மூன்று வருடங்கள் காத்திருந்தே “அம்மா” என்ற சொல்லை கேட்க முடிந்தது. அதன் பின்னரே தள்ளாடி நிலை இல்லாமல் நடக்கத்  தொண்டங்கினான் அமன்.

இதனிடையே புகுந்த வீட்டில் சண்டை சச்சரவுகளும், துன்புறுத்துதலும் தொடர்ந்து அதிகரித்து கொண்டேதான் இருந்தது. கடைசியில் சானு, மகேஷ் ஜோடியை வீட்டை விட்டே வெளியேற்றி விட்டனர். தினக் கூலிக்கு வேலை செய்து, தினம் உணவு உண்ணக் கூட மிகவும் கஷ்டப் பட்டே பணம் ஈட்டினார்கள் இந்த ஜோடி. இது போதாதென்று மகேஷ் filariasis என்ற நோயால் தாக்கப் பட்டார். இதனால் கால்கள் யானை கால்கள் போல வீங்கியதால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அவர் உடல் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து, 2012ம் ஆண்டு காலமானார்.

சானுவின் சகோதரரும், இரு சகோதரிகளும் அவருக்கு இந்த காலகட்டத்தில் பேருதவி புரிந்தனர். பல நாட்கள் சானு நாளுக்கு ஒரு முறையே உணவு உண்ண முடிந்தது. சில நாட்கள் அதுவும் கூட கிடைக்காது. 2019ம் ஆண்டு அவருடைய மண் வீடு வெள்ளத்தால் சரிந்தது. அப்போதும் அவர் சகோதரே அவருக்கு உறுதுணையாக இருந்தார். இப்போது இருக்கும் வீடு அரசாங்கத்திலிருந்து பெற்ற கடன், மேலும் தனியாரிடமிருந்து வட்டிக்கு பெற்ற கடனாலும் கட்ட முடிந்தது. இந்த வட்டி மாதா மாதம் செலுத்தி வருகிறார்.. அமனுக்கு ஊனத்திர்காக வழங்கப்படும் தொகையான ரூபாய் ஆயிரம் சானுவின் நிதி நிலைமையை சமாளிக்க சற்று உதவுகிறது. Deepshikha பள்ளியும், அமனுக்கு கட்டணம் இல்லாமலேயே பள்ளியில் தொடர அனுமதித்து உள்ளனர்.

அமனுக்கு TVயில் கார்ட்டூன்கள் பார்ப்பதிலும், கைப்பேசியில் விளையாட்டுகள் விளையாடுவததிலும் மிகவும் விருப்பம். தானே கடைக்கு சென்று தனக்கு வேண்டியதை காசு கொடுத்து வாங்கி வர பழகி உள்ளான். ஆனால் இதற்கும், வீட்டில் அவருக்கு பிடித்த கோழி கரி செய்யவும் தன் தாய் படும் இன்னல்கள் என்னவென்று அவனுக்கு முழுவதும் புரிந்திருக்கமா என்று தெரியாது!

புகைப்படங்கள்:

விக்கி ராய்