Logo of Everyone is good at something

எவ்ரிஒன்
ஈஸ்
குட்
அட்
சம்திங்

India Inclusion Summit (IIS) எனப்படும் மாற்றுத் திர்நாளிகளை சமூகத்தில் ஒருங்கிணைப்பதைப் பற்றி பெங்களூரில் நடக்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு “Everyone is Good at Something" என்கிற “அனைவரும் எதோ ஒரு விதத்தில் திறமை சாலிகளே” என்கிற கோஷம் அனைவர் காதிலும் அமுத கானமாக ஒலித்து கொண்டே இருக்கும். அதே போல பல வண்ணப் பறவைகள் ஒரு மரத்தில் கூடி இருக்கும் Inclusion Tree எனப்படும் “ஒருங்கிணைப்பு மரத்தின்” வண்ண ஓவியமும் அனைவர் கண்களிலும் நிழலாடும். இந்த கோஷம் ஊனமுற்றோர்களின் தனித்தன்மையான திறன்களை அனைவரும் நன்கு அறியும்படி வெளிச்சம் காட்டி பிரபலப் படுத்தும் IIS இன் நோக்கத்தை நன்கு பிரதிபலிக்கிறது. ஒருங்கிணைப்பு மரம் ஒருங்கிணைப்பின் ஆழமான தத்துவத்தை ஓவிய வடிவில் உருவகப்படுத்துகிறது. முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டர்காளாலேயே நடத்தப்படும் “India Inclusion Foundation (IIF)” என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயல்பாட்டுகளில் ஒன்றே IIS. ஒருவரையும் விட்டுவிடாமல், எல்லோரையும் ஒருங்கிணைத்து இருக்கும் “ஒருங்கிணைந்த இந்தியா” உருவாக்குவதே IIFஇன் குறிக்கோள்.

ஆண்டுதோறும் IIS அரங்கத்தில் முன்னிலை படுத்தி மேடை ஏற்றப்படும் சாதனையாளர்களைப் பற்றி பலருக்கும் முன்னமேயே தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் நாட்டில் ஊனமுற்ற பற்பல மக்களில் ஒரு மிகச்சிறிய பகுதியே இவர்கள். அம்மாதிரி யாருக்கும் தெரியாமல் இருக்கும் பற்பலரின் சாதனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அதன் மூலம் சமூகத்தில் ஊனமுற்றோர்களை பற்றி விழிப்புணர்ச்சியை அதிகரிக்க , IIF மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியே இந்த “Everyone is Good at Something” இணைய தளம் வழியாக நாங்கள் நடுத்தும் பிரசாரம். இதில் மிகவும் பிரபலமான விக்கி ராய் போன்ற புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோ எடுப்பவர்கள் மிகக் கடினமான, சவாலான சூழ்நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊனமுற்றோர்களின் வாழ்க்கைகளை சித்தரிப்பார்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று ஊனமுற்றோர்கள் உரிமை சட்டத்தில் உள்ள 21 ஊனங்களையும் வெளிச்சம் போட்டு காட்டுவார்கள். ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தம்புதிய வரலாற்றை வெளியிட உள்ளோம். ஒவ்வொரு வரலாறும் ஆண்-பெண் வேறுபாடின்றி ஒரு புத்தம் புது வண்ணப் பறவை போல, வெவ்வேறு மாதிரியான ஊனங்களையும், வெவ்வேறு திறமைகளையும், நன்கு விளக்குகின்றன. இந்த எல்லா வண்ணப்பறவைகளுக்கும் உள்ள ஒற்றுமை – இவர்கள் அனைவரும் வானமே எல்லை என்று நம்பிக்கையுடன் வாழ்வில் சிறகை விரித்து பறக்கிறார்கள்!