Icon to view photos in full screen

"உங்கள் இதயம் உணர்த்துவதை பின்பற்றுங்கள். அப்போது கனவுகளெல்லாம் நினைவாகும்."

2006ம் ஆண்டு, மூன்று பெண்மணிகள் பெங்களூரில் தங்கள் அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மூவரும் சைகை மொழியில் (Sign Language (SL)) அளவளாவிக் கொண்டிருப்பதை பேருந்தின் நடத்துனர் கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார். அந்த மூவரில் ஒருவர் திடீர் என்று நடத்துனருடன் பேசத் தொடங்கினார். திடுக்கிட்டு, அந்த நடத்துனர், "நீங்கள் மூவரும் காது கேளாதவர்கள் என்று எண்ணினேன்!" என்றார்.
 
பேசியவர் பெயர் பவித்ரா Y.S. அப்போதுதான் அவர் சைகை மொழி கற்றுக் கொள்ள தொடங்கி இருந்தார். அவர் பணி புரிந்திருந்தது கொண்டு இருக்கும் யசோதா N தான் அவருக்கு சைகை மொழி கற்று கொடுத்து கொண்டிருந்தார். யசோதா பிறவியிலேயே காது கேளாதவர். அவருடன் தினமும் பேருந்தில் பயணம் செய்யும் பவித்ரா ஊனமுற்றோர்கள் பணி புரியும் Vindhya E-Infomedia நிறுவனத்தை தொடங்கி இருந்தார். அவர் அலுவலகத்திற்கு முன் மாட்டப் பட்டிருந்த அறிவிப்பு பலகையில் "open for the physically handicapped” (ஊனமுற்றோர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்) என்று எழுதி இருந்தது. ஊனங்களைப் பற்றி  அவ்வளவாக தெரியாது இருந்த பவித்ராவுக்கு யசோதாதான் காது கேளாதவர்களைப் பற்றி உணர்த்தினார். இதனால் சைகை மொழியே எங்கள் நிறுவனத்தின் அதிகார பூர்வமான மொழி என்று பவித்ரா கூறுகிறார். இதற்கு பின்னர் ஊனமுற்றோர் பற்றி நன்கு கற்றறிந்தார். இன்று Vindhya E-Infomedia நிறுவனத்தில்1800 பேர் பணி புரிகின்றனர்.  இதில் 60% ஊனமுற்றவர்கள். இந்த பயணத்தில் 49 வயதான யசோதா உறுதுணையாக இருந்து வருகிறார்.
 
EGSல் உள்ள எங்களுக்கு சைகை மொழி தெரியாது. அதனால் வீடியோவில் பேச முடியவில்லை. email மூலம்தான் தொடர்பு கொண்டோம். மைசூரில் N நாராயணாவிற்கும், R புட்டம்மாவிற்கும் பிறந்தவர் யசோதா. நாலு வயது இருக்கும்போது இவர் தந்தை பெங்களூரில் HMT கடிகார நிறுவனத்தில் பணி புரிய வந்ததால், அப்போது முதல் பெங்களூரிலேயே வசித்து வருகிறார். புகழ் பெற்ற Sheila Kothavala Institute for the Deaf நிறுவனத்தில் கணினி பயன் படுத்துவதில் இரண்டு வருட டிப்ளமோ படிப்பு முடித்தார். அதற்கு பிறகு tailoring, packing, printing, watch repair, dental போன்ற பல வேலைகளை செய்தார். ஒரூ நாள், வேலையை இழந்து தெருவில் நடந்து செல்லும்போது Vindhya வின் அறிவிப்பு பலகையை பார்த்தார்.
 
முதலில் பவித்ராவும், இவரும் காகிதங்களில் எழுதியே தங்கள் எண்ணங்களை பரிமாற்றம் செய்து கொண்டனர். "எனக்கு ஏதாவது வேலை உள்ளதா" என்று யசோதா (எழுதி) கேட்க, பவித்ரா "data entry வேலைதான் உள்ளது" என்று எழுதி காட்டினார். அன்று யசோதா கூறிய வார்த்தைகள் இன்னமும் பவித்ராவின் காதுகளின் ஒளித்து கொண்டே இருக்கின்றன: "நீங்கள் என்னை விட மிகுந்த தகுதி படைத்தவர். நீங்கள் எனக்கு பணியை கற்றுத் தாருங்கள். நான் உங்களுக்கு சைகை மொழி கற்று தருகிறேன்."
 
யசோதா முதலில் data entry வேலையே செய்தார். "முதலில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் அலுவலகத்திற்கு சென்று அங்கேயே data entry புரிவோம். அப்போது யசோதா எங்களுடன் வருவார். எல்லோருடனும் நன்கு பழகுவார். அவருடைய ஊக்கமும், குதூகலமும் அனைவருக்கும் களிப்பூட்டும்." காது கேளாத மற்ற ஊழியர்களுக்கு யசோதா நிறுவனத்தை பற்றியும், எப்படி வேலை செய்வது என்பதை பற்றியும் பயிற்சி அளிக்கிறார்.
 
தற்போது, காது கேளாத ஒருவரை மணம் புரிந்து, தன்னுடைய மாமனார்-மாமியார் அவர்களுடன் வாழ்கிறார். குழந்தைகள் என்றால் மிக விருப்பம். தன் சகோதரரின் 4 வயது குழந்தையான ஆர்யா கிஷோருடன் விளையாடுவது மிகவும் விருப்பம்! நேரம் கிடைக்கும்போது தொலைக்காட்சி காண்பது, விளையாடுவது, சமைப்பது போன்றவைகளை பொழுதுபோக்குக்காக செய்கிறார். அடுத்த வருடம்  மூத்த ஊழியரான இவருடைய 50வது பிறந்த நாளை விந்தியாவின் தடபுடலகா கொண்டாடப் போகிறார்கள்!


புகைப்படங்கள்:

விக்கி ராய்