Icon to view photos in full screen

“தெலுங்கானா மாநிலத்தில் காது கேட்காதவர்களுக்காக பட்டப் படிப்பு படிக்க கல்லூரி ஒன்றை நிறுவ விரும்புகிறேன்”.

பிரபலமான கல்வி நிறுவனங்களில் படித்த  மாணவர்கள், பிற்காலத்தில் அந்த நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதும், நிதி சேர்ப்பதும் சகஜமானவையே! ஆனால் அரசு பள்ளிக்கூடத்தில் படித்து, அந்த பள்ளிக்கூடத்தின் மேம்பாட்டிற்கு நிதி அழிப்பது நாம் அவ்வளவாகள் கேள்விப்படாத ஒன்று.

59 வயதான வல்லபாநேனிவேங்கட சத்ய லக்ஷ்மி கிருஷ்ண முரளி (VVSLKM) பிரசாத் காது கேட்காதவர்களின் முன்னேற்ற நிறுவனம் - Development Society for the Deaf (DSD) - என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தை நிறுவினார். . இந்த நிறுவனம் மூலம் நிதி திரட்டி மலக்பெட், ஹைதராபாத் நகரில் உள்ள தான் படித்த காது கேட்காதவர்கள் மற்றும் பேச வராதவர்களுக்கான அரசாங்க பள்ளியை விரிவு படுத்தவும், முன்னேற்றவும் பதினாறு ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக கொடுத்தார்.

முன்னாள் ஆந்திர பிரதேசத்தில் உள்ள மஹாபுப்நகர் ஊரில் இருந்த ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த இருவரில் ஒருவர். அந்த குடும்பம் நெல், பருத்தி, பழம்,காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். நாங்கள் சந்தித்தபோது, தான் பிறக்கும் போதே காது கேளாமல் பிறக்க வில்லை என்று தன் மகன் மூலம் தெரிவித்தார். அவருக்கு மூன்று வயதான போது கடும் காய்ச்சல் வந்ததால், கர்னூல் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அவர் பெற்றோர்கள் அழைத்து சென்றனர். அங்கே அவருக்கு ஒரு ஊசி மருந்து போடப்பட்டது. அந்த மருந்து அவருடைய நரம்பு மண்டலத்தை பாதித்து காது கேளாமல் போய் விட்டது. அவர் பெற்றோர் அவரை விஜயவாடா மற்றும் மும்பை நகரங்களுக்கு அழைத்து போய் இதற்கு எதாவது தீர்வு கிடைக்குமா என்று முயன்று பார்த்தனர். ஆனால் இதனால் ஒரு பயனும் கிட்டவில்லை. பின் தங்கள் நிலைமையை ஏற்றுக்கொண்டு, அவருக்கு பேச்சு பயிற்சி (speech therapy) அளிப்பதில் முயன்றனர்.

அவருக்கு ஒன்பது வயதான போது ஹைதராபாத் நகரில் காது கேளாதவர்கள் மற்றும் பேச வராதவர்களுக்காக நடத்தப்படும் பள்ளி ஒன்று உள்ளது என கண்டறிந்தனர். அவர் அப்பள்ளியில் சேர்ந்து பத்தாம் வகுப்பு முடித்து, Industrial Training Institute (ITI) என்னும் தொழிபயிர்ச்சி நிறுவனத்தில் கடைசல் போன்ற வேலைகளில் தேர்ச்சி பெற்று கருவிகள் மற்றும் இயந்திரங்கள் செய்வதில் திறமை பெற்றார்.
இந்த படிப்பை முடித்த பின்னர் அரசு நிறுவனங்கள், மற்றும் வங்கிகளிடமிருந்து வேலை வாய்ப்பு கிடைத்தது. அனால், அவர் இவைகளை நிராகரித்துவிட்டு குலுக்கல்  சீட்டு வணிகத்தில் நுழைந்தார். மாநில அளவில் குலுக்கல்  சீட்டு விற்க உரிமம் பெற்றார். இரண்டு வருடங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் அரசாங்கம் மாறியதால் குலுக்கல் சீட்டுகள் தடை செய்யப்பட்டு விட்டன.

ஊனமுற்றோர்களுக்கு மிக குறைவான  வாய்ப்புகளே உள்ளன என்பதை உணர்ந்த பிரசாத், அவர்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க தீர்மானித்தார். 1987ம் ஆண்டு DSD நிறுவனத்தை தொடங்கினார். அதன் பின்னர் ஊனமுற்றோர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார். இதனால் அந்த நிறுவனத்திற்கு தெலிங்கானா மாநிலத்தின் சிறந்த தொண்டு நிறுவனம் என்ற விருதும், பிரசாடிற்கு சிறந்த சமூக சேவகர் என்ற பட்டமும் கிடைத்தன.

1980களில் ஊனமுற்றோர்களுக்கான மாதாந்திர மானியம் வெறும் ரூபாய் 200 ஆகா மட்டுமே இருந்தது. பிரசாத் நீதி மன்றங்களில் போராடி இதை படிப்படியாக உயர வழி செய்தார். 2010ம் ஆண்டு 500 ரூபாயாகவும், 2014ம் ஆண்டு 1500 ரூபாயாகவும், 2019ம் ஆண்டு 3000 ரூபாயாகவும் உயர காரணமாக இருந்தார். இப்போதும், இந்த தொகையை 5,000 ரூபாயாக உயர்த்த அயராது உழைத்து வருகிறார். 2018-19 ம் ஆண்டு முதல் காது கேளாதவர்களுக்கு 3G, 4G  கைப் பேசிகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று அரசுடன் மன்றாடி வருகிறார். UDID அட்டை என்னும் ஊனமுற்றோர்களுக்கான அடையாள அட்டை அவர்களுக்கு விரைவில் கிட்டவும் முயற்சி எடுத்து வருகிறார். இதை தவிர அரசாங்க வேளைகளில் ஊனமுற்றோருக்கு இட ஒதுக்கீடுக்ககவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். காது கேளாதவர்களுக்காக பாட படிப்புக்கு அரசாங்க உதவியுடன் ஒரு கல்லூரியை துவக்கவும் முனைந்து கொண்டிருக்கிறார்.

விளையாட்டில் பிரசாதுக்கு எப்போதுமே ஒரு நாட்டம் உண்டு. கடந்த ஆண்டுகளில் காது கேட்காதவர்களுக்காகக் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் பத்து தங்க பதக்கங்களை வென்று இருக்கிறார். உயர குதிப்பது ( high-jump)  கால் பந்து, கிரிக்கெட் போட்டிகளில் தேர்ச்சி பெற்று உள்ளார். DSD மற்றும் பிரசாத் தலைவராக இருக்கும் தெலுங்கானா மாநில காது கேளாதவர்களுக்காக கிரிக்கெட் சங்கம்  சேர்ந்து நடத்திய பிராந்திய மற்றும் தேசிய போட்டிகளை நடத்தினார்கள். இதன் பின்பு 2018ம் ஆண்டு இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் பங்கேற்ற சர்வ தேச போட்டியில் இந்தியா வென்றி வாகை சூடியது.

கொரோனா தொற்றின் போது DSD மூலம் ஊனமுற்றோகளுக்கு துணி மற்றும் உணவு வழங்க ஏற்பாடு செய்தார். 2015ம் ஆண்டு காது கேலாதவர்களுக்காக ஒரு திருமண இணைய தளத்தை உருவாக்கினார். அவரே எப்படி மணம் புரிந்தார்? 1989 முதலே அவர் குடும்பத்தினர் அவருக்கு ஒரு வாழ்க்கை துணை அமைய முயன்று கொண்டு இருந்தனர். இந்த முயற்சியில், பாரதியின் புகைப்படத்தை பார்த்து “இவளையே நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன்!” என உறுதி கொண்டார். அப்போது பாரதிக்கு பதினேழு வயதே நிரம்பியிருந்தது.அவளுக்கு  18 வயது ஆகும் வரை காத்திருந்து 1990 ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

வயதான பாரதி நிறுவனத்தின் பொது கார்யதரிசியாக பிரசாதுக்கு உறு துணையாக இருக்கிறார். இவர்கள் குழந்தைகள் ஹர்ஷவர்தன் (31)  மற்றும் அமலா (25)  சிறு வயதிலேயே சைகை மொழி பயின்றனர். குடும்பமே சைகை மொழியில் வல்லுனர்களாக, தொடர்பு கொள்கின்றனர்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்