Icon to view photos in full screen

"உடல் ஊனம் இருந்தாலும், மனம் த்ருடமாக இருந்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம்."

சக்கர நாற்காலியில் இருக்கும் நீங்கள் ஊனமில்லாத ஒரு நண்பருடன் கடைக்கு போகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். ஒரு விற்பனையாளரை அணுகி, நீங்கள் வாங்க விரும்பும் ஒரு பொருளை பற்றி விவரங்களை விசாரிக்கிறீர்கள். ஆனால் அந்த விற்பனையாளர் நீங்கள் கேட்பதை சற்றும் பொருட்படுத்தாமல் உங்கள் (ஊனமில்லாத) நண்பரிடமே அனைத்து பதிலையும் அளிக்கிறார்! இம்மாதிரியான அநாகரீகமான நடத்தையை ஐஸாவல் நகரை சேர்ந்த 28 வயதான R. வணரமாவி பல முறை சந்தித்து இருக்கிறார். மேலும் இம்மாதிரி நடத்தை தன் மாநிலமான மிசோரம் வெளியேதான் நடக்கிறது என்றும் கூறுகிறார். "எங்கள் மாநிலத்தில் நாங்கள் யார் மனத்தையும் புண் படுத்தவோ பாரபட்சமாக நடத்தவோ மாட்டோம். நாங்கள் அனைவருக்கும் உதவி புரியும் மனப்பாங்கு உடையவர்கள். இதைப்பற்றி நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்."
 
R. லால்ஹுலியானா (56), C. லால்ரிணிபிலி (49) இவர்களின் மூத்த மகள் வணரமாவி. இவருக்கு 9 மாதம் ஆனபோது, போலியோ நோய் தாக்கியது. "என் குடும்பமே எனக்கு உறுதுணையாக இருந்தது." என்று கூறுகிறார். உடம்பை அசைக்க முடியாமல் இருந்தாலும், சமூக பணிகளில் சளைக்காமல் பங்கேற்றார். சிறு வயதில் மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது, இவர் பாதுகாப்பிற்கு இவரின் மூன்று ஒன்று விட்ட சகோதரர்கள் மிகவும் அக்கறை காட்டினார்கள். ஆறாம் வகுப்பு வரை Gilead Special School என்னும் மாற்று திறனாளிகளுக்கான பள்ளியில் படித்தார். அங்கு உடற்பயிற்சியும் (physical therapy) கற்றுத் தந்தனர். ஏழாம் வகுப்பில் எல்லோருக்குமான (mainstream) Muma Middle Schoolஎன்னும் அரசுப் பள்ளியில் சேர்ந்தார். அங்கே ஒவ்வொரு பரிட்சையிலும் முதல் மாணவியாக விளங்கினார். பிறகு, Govt. Aizawl East High School பள்ளியில் மிகக் சிறந்த மாணவியாக திகழ்ந்ததால் 9ம் வகுப்பு படிக்காமலேயே அடுத்த வகுப்பிற்கு சேர்த்து கொள்ள பட்டார்.
 
11ம் வகுப்பில் பள்ளியில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்வதற்கும், படி ஏறி செல்லவும் மிகவும் கஷ்டப் பட்டார். அதுவரை படித்து வந்த பள்ளிகள் எல்லாம் Armed Veng என்னும் அவருடைய வட்டாரத்திலேயே இருந்ததது. ஆனால் தற்போது செல்ல வேண்டிய Govt. Republic Higher Secondary School பள்ளி Ramthar Veng என்னும் இடத்தில இருந்தது. அந்த பள்ளிக்கு பள்ளி பேருந்தும் இல்லை. டாக்ஸியில் செல்ல செலவு நூற்றுக்கணக்கில் ஆகும். அவ்வளவு செலவு செய்ய பண வசதி இவரிடம் இல்லை. இவர் மீது மிகுந்த இரக்கத்துடனும், அக்கறையுடனும், தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் இவர் வாரம் இரண்டு நாள் வந்தால் போதும் என்ற சலுகை அளித்தனர். சமூகவியல் துறையில் B.A. பட்டம் பெற நுழைந்த Pachhunga University College என்னும் கல்லூரி இன்னும் தொலைவில் இருந்தது. அங்கும் கல்லூரி பேருந்து கிடையாது. அதனால் கல்லூரிக்கு வாரம் ஒரு முறை வந்தால் போதும் என்ற சலுகை இவருக்கு அளிக்கப் பட்டது.
 
இந்த கல்லூரி வாழ்வை மிக உவகையுடன் இவர் நினைவு கூர்ந்தார். கல்லூரியின் இலக்கிய குழுவின் தலைவராக ஐந்தாம் மற்றும் ஆறாம் அரை ஆண்டில் பொறுப்பேற்றார். பரிட்சையிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அந்த கல்லூரி ஊனமுற்றோருக்கு சக்கர நாற்காலியில் செல்ல ஏதுவாக இருந்தது. ஆனால் LLB பட்டம் பெற Govt. Mizoram Law College என்னும் கல்லூரியில் இம்மாதிரி வசதிகள் இல்லை. 2021ம் ஆண்டு இந்த பட்டம் பெற்று கவுஹாத்தி உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞ்சராக பதிவு செய்து உள்ளார். ஆனால் இன்னும் தொழில் புரிய தொடங்கவில்லை.
 
LLB படிக்கும்போது Aizawl District Legal Service Authorityவில் சட்டபூர்வ தன்னார்வலராக (Para-Legal Volunteer) தொண்டு புரிந்தார். ஊனமுற்றோர்களுக்காக பற்பல சேவைகள் புரிந்துள்ளார். ஊனமுற்றோர் உரிமைகளை பறை சாற்ற , பொது கூட்டங்களில் பேசுவது, பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்வி நிலயங்களில் பரிந்துரைப்பது, தொலை காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற பலவற்றில் பங்கேற்கிறார். தேர்தல்களில் ஊனமுற்றோர் ஓட்டு போட ஏதுவாக இருக்கும்படி District Commissioner of Aizawlல் District Icon ஆக சேவை புரிந்தார்.
 
இவருக்கு வாங்லால்கைஹாமி மற்றும் மலஸவ்ம்லுங்கி என்று இரு சகோதரிகள், மற்றும் லால்பேகுலா என்ற இளைய சகோதரரும் உள்ளனர். முதல் சகோதரி nursing படித்து கொண்டிருக்கிறார். மற்றொரு சகோதரி B.A. படித்துவிட்டு, அரசு வேலைக்கான பரீட்சைக்கு படித்து கொண்டிருக்கிறார். கடைசி சகோதரர் 12ம் வகுப்பு விஞ்ஞான துறையில் படித்து கொண்டிருக்கிறார். தந்தை தீ அணைக்கும் துறையில் பனி புரிகிறார். "தாய் வீட்டையும் என்னையும் பார்த்துக் கொள்கிறார்" என்று கூறுகிறார்.
 
பைபிள் படிப்பது, மற்றும் கட்டுரைகள் எழுதுவது போன்றவைகளில் காலம் செல்கிறது. உலகில் இம்மாதிரி மாற்றத்தை காண விரும்புகிறீர் என்று கேட்டபோது, பைபிளில் Luke 6:31ல் எழுதியதை கூறுகிறார்: "Do to others as you would have them do to you.” அதாவது "மற்றவர்கள் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதே மாதிரி நீங்கள் மற்றவர்களை நடத்த வேண்டும்." மேலும் இவர் கூறுவது, "எல்லோரும் இந்த அறிவுரையை பின்பற்றினால் யாருக்கும் எந்த ஒரு நஷ்டமோ அல்லது கஷ்டமோ இருக்காது. நாங்களும் சாதாரண மனிதர்களே என்று எங்களை அனைவரும் பாசத்துடன் நடத்தவேண்டும்." என்று கேட்டுக் கொள்கிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்