Icon to view photos in full screen

"எனக்கு பாலிவுட் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இரண்டு ஆண்டுகளாக கீ போர்டு வாசிக்க பழகிக் கொண்டு இருக்கிறேன்."

கோவிட் - 19 தொற்று பலர் வாழ்க்கையை பாதித்து இருந்தாலும், சிலருக்கு எதிர்பாராத நன்மைகளையும் ஈன்றது. உதாரணமாக, திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா நகரில் வாழும் துஷார் காந்தி, ரத்னபாலி ரே சென்குப்தா ஆட்டிசம் உள்ள தங்கள் மகனுக்கு ஊரடங்கின் போது ஓவியம் வரையவும், கீ போர்டு வாசிக்கவும் கற்று தந்தார்கள்.
 
தங்கள் மகன் சிறு குழந்தையாக இருந்தபோதே அவன் தன் உடன்பிறந்தவர்களை காட்டிலும் மாறு பட்டவனாக இருந்ததை உணர்ந்தார்கள். அவனுக்கு பேச வரா விட்டாலும், இசையில் ஆர்வம் இருந்தது, பாடவும் செய்தான். பேசினாலும், ஓரிரு வார்த்தைகளே மட்டுமே பேச முடிந்தது, முழு வாக்கியங்கள் பேசவே இயல இல்லை. அகர்தலாவில் உள்ள மருத்துவர்கள் இது என்ன பாதிப்பு என்று கண்டறிய முடியாததால், கல்கத்தா நகருக்கு சென்று ஒரு மருத்துவரை பார்த்தனர். குழந்தைக்கு ADHD (attention deficit/hyperactivity disorder) - கவனக் குறைவு, மற்றும் உயர் செயல் திறன் - இருப்பது கண்டறிய பட்டது. மருத்துவரின் பரிந்துரையின் மேல் ஒரு பெரிய பள்ளியில் சேர்த்தாலும், குழந்தை இடையூறு விளைவித்ததால் வெகு விரைவிலேயே அந்த பள்ளியிலிருந்து விலக வேண்டி இருந்தது.   அதே மாதிரி புதிதாக தொடங்கிய SSRVM பள்ளியிலும் இதே கதிதான். ட்ரிபிட்யாவை சமாளிக்க எந்த பள்ளியாலும் முடியவில்லை.
 
சென்குப்தா தன் 3 1/2 வயது குழந்தையை பெங்களூரில் உள்ள Nimhans (National Institute of Mental Health and Neurosciences) க்கு அழைத்து சென்றனர். அங்கேதான் குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பது உறுதி செய்யப் பட்டது.
குழந்தையை சிறப்பு பள்ளிக்கு கூடத்தில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்க பட்டது. த்ரிபுராவில் சிறப்பு பள்ளிக்கு கூடங்கள் ஏதும் இல்லாததால் 5 வயதில் கல்கத்தாவில் ஒரு சிறப்பு பள்ளி கூடத்தில் சேர்ந்தார். அங்கு உட்கார்ந்து பாடம் பயில கற்றுக் கொண்டார். ஆனால் இவர்கள் இல்லம் கல்கட்டாவில் இல்லாததால் இது வெகு நாட்கள் தொடர முடியவில்லை. இதனால் குடும்பத்தினரே அவர்கள் ஊரில் ஒரு சிறப்பு பள்ளிக்கூடம் தொடங்கலாம் என்று பரிந்துரைக்க பட்டது.
 
தங்கள் குழந்தையின் பாதிப்பை பற்றி அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தாலும், இதை எதிர் கொள்ள வேண்டும் என்று உறுதியுடன் செயல் பட்டனர். ட்ரிபிட்யாவிற்கு கல்வி கற்பிக்க ரத்னபாலி முறையாக பயிற்சி பெற்றார். தற்போது 26 வயதான இவர் இப்போதும் கூட பேச இவருக்கு உதவி தேவை படுகிறது. இவரை பலரும் "பைத்தியம்" என்று நக்கல் செய்வது பழக்கமானாலும், மனம் நோகத்தான் செயகிறது.
 
இந்த பெற்றோர்களும், மற்றும் சில மாற்று திறனாளிகளின் பெற்றோர்களும் சேர்ந்து அகர்தலாவில் Vidya Welfare Society என்னும் நிறுவனத்தை நிறுவி, வித்யா என்ற பள்ளியையும் 2004ம் ஆண்டு தொடங்கினார்கள். இங்கே மூன்று சிறப்பு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். குழந்தைகளுக்கு முழுமையான வளர்ச்சி வேண்டும் என்பதற்காக வாழ்க்கைக்கு தேவை படும் திறமைகளை நடனம், சங்கீதம், கலை, கை தொழில் போன்றவைகள் மூலம் சொல்லி கொடுத்தனர். இந்த நிறுவனம் முழுவதும் பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் நன்கொடை மூலமே செயல் படுகிறது. அரசாங்க உதவி ஏதும் கிடைக்கவில்லை. அங்கு பயிலும் 22 மாணவர்களில் ஆண்களே அதிகம். 18 வயது வரையில் பள்ளி பாடங்களும், அதற்கு பின்னர் தொழிற்கல்வியும் கற்று தருகின்றனர். 
 
ரத்னபாலி தற்போது பெண்கள் கல்லூரியில் சரித்திர பாடத்தில் உதவி பேராசிரியராக பணி புரிகிறார். ட்ரிபிட்யாவிற்கு ஆறு மாதம் ஆனா முதல் தான் இங்கு பணி புரிவதாகவும், தன்னுடைய சக ஊழியர்களும் தலைமை ஆசிரியரும் தனக்கு பேராதரவு அளிப்பதாகவும் ரத்னபாலி கூறினார். தன் மகனின் தேவைக்காக நேரம் எடுத்து கொண்டாலும், தன் பணியில் மிகுந்த கவனமாக இருக்கிறார். மதியம் 3 மணி வரை கல்லூரியில் பணி புரிந்து, பின்னர் வித்யா பள்ளிக்கூடம் சென்று அங்கு 5 மணி வரை பணி புரிகிறார். துஷார் காந்தி வங்கி வேலையிலிருந்து ஒய்வு பெற்று தற்போது Vidya Welfare Societyஇன் செயலாளராக முழு நேரம் பனி புரிகிறார். ட்ரிபிட்யாவின் நிலைமை கண்டு உந்துவிக்கப் பட்டு கதக்களி என்னும் உறவினரும் கல்கட்டாவில் உள்ள National Institute of Mental Healthல் சிறப்பு கல்வியில் பயிர்சி பெற்று தற்போது Indian Institute of Cerebral Palsyல் பணி புரிகிறார்.
 
பெற்றோர்கள் அளித்த பராமரிப்பில் ட்ரிபிட்யா நன்கு மிளிர்ந்து இருக்கிறார். அவரகளுடன் பயணங்கள் செய்ய மிகவும் விரும்புகிறார். இசையிலும், குறிப்பாக பாலிவுட் பாடல்களிலும் மிகுந்த நாட்டம் உண்டு. அதிலும் “Main koi aisa geet gaoon aur aarzoo agar tum kaho” என்ற பாட்டு மிகவும் பிடிக்கும். வெளியில் தரம் நன்குள்ள உணவு சாப்பிட பிடிக்கும், முக்கியமாக வறுத்த உருளை (aloo bhajaa) மிகவும் விருப்பம். அனைத்து நாட்களும், கிட்டத்தட்ட ஒரே அட்டவணைதான்: காலை 7:30 மணிக்கு எழுந்து, சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, தந்தையுடன் படித்து, குளித்து, தந்தையுடன் பள்ளிக்கு சென்று வருதல். எழுதவும், நேரம் பார்க்கவும் கற்றுக் கொண்டுள்ளார். மதிய உணவு சாப்பிட்டு, சற்று நேரம் உறங்கி, பின்னர் மாலை நேரங்களில் synthesizer வைத்து இசை பயில்வது, ஓவியம் தீட்டுவது போன்றவைகளை பயிற்சி செய்வது என்று அவர் நாட்கள் ஓடுகோன்றன. கடைசி இரண்டும், கண்-கைகள் ஒருங்கிணைந்து செயல் பட ரத்னபாலி இவருக்கு கற்று தந்துள்ளார்.
 
பெற்றோர்கள் இவருக்கு பேராதரவு அளித்தாலும், அவ்வப்போது இவரின் கோபத்திற்கும் வன்முறைக்கும் ஆளாக வேண்டி இருக்கிறது. சில தடவை இது மிகவும் காய படுத்தும். வயதாக ஆக, இந்த கோபமும் அதிகமாகி உள்ளதை எண்ணும் பொது ரத்னபாலிக்கு நெஞ்சே வெடித்திடும் போல உள்ளது. ட்ரிபிட்யாவின் எதிர் காலத்தை பற்றி பெற்றோர்கள் மிகவும் கவலை கொண்டுள்ளனர். தங்களுக்கு பிறகு ட்ரிபிட்யாவை ஒரு பாதுகாப்பு அளிக்கும் இல்லத்தில் சேர்க்க விழைகின்றனர்.
 
ரத்னபாலி கூறுகிறார்: "ஆட்டிசம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவரையும் சமூகம் சமமாக நடத்தி, ஒருங்கிணைக்க வேண்டும். மக்களிடத்தில் ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்."


புகைப்படங்கள்:

விக்கி ராய்