Icon to view photos in full screen

“எனக்கு என் கிராமத்தில் எனக்கு நிறைய நண்பர்கள். என்னை தங்கள் உடன் பிறந்தவனாகவே நினைத்து எனக்கு அவர்கள் அனைவரும் பேருதவி புரிகின்றார்கள்.”

நீங்கள் நுப்ரா பள்ளத் தாக்கிலோ பாங்காங் ஏரி உள்ள இடத்திலோ சுற்றுலா
மேற்கொண்டு வழியில் லடாக் அல்லது சீன மதிய உணவு உட்கொள்ள வேண்டும்
என்றால் “ஷயோக் பைகர் கஃபே” என்னும் இடத்தில நிறுத்தி இருப்பீர்கள். அங்கே
அந்த உணவகத்தின் இளம் முதலாளியை பார்த்து இருப்பீர்கள். அவர்தான் 30
வயதான தின்லே முடுப். லடாக்கில் உள்ள ஷயோக் கிராமத்தை சேர்ந்தவர். சிறு
வயது முதலேயே -- locomotor disability பாதிப்பு ஏற்படும் முன்னரேயே – உணவகம் அமைப்பதையே வாழ்நாள் கனவாக கொண்டிருந்தார்.

தின்லே டேராடூன் நகரில் பள்ளிக்கு செல்ல தொடங்கினார். எட்டாம் வகுப்பில் கடும் தலைவலியால் பாதிக்கப் பட்டார். லே நகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதனைகளை செய்து அவருக்கு (tuberculosis – TB) காச நோய் வந்திருப்பதை கண்டறிந்தனர். அவர் கால்களும் பக்க வாதத்தால் தாக்க பட்டு அவரால் நடக்க இயலாமல் போயிற்று. அவர் ஷவோக்கில் படித்த பள்ளி ஊனமுற்றோர்கள் செல்ல ஏதுவாக இல்லாததால், பள்ளி படிப்பை அப்போது நிறுத்த வேண்டியதாயிற்று. லே நகரில் உள்ள REWA தொண்டு நிறுவனம் அவருக்கு உடற்பயிற்சி சிகிச்சைகளை அளித்து, ஒரு சக்கர நாற்காலியையும் அளித்தனர். இவற்றால் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் நடக்க தொடங்கினார். இப்போது கூட அவ்வப்போது 30 நாட்கள் லே நகரில் தன் மாமா செரிங் நான்க்சுக்குடன் தங்கி உடற்பயிற்சி சிகிச்சைகளை எடுத்து கொள்கிறார். இப்போது தன்னுடைய சொந்தமான ஸ்கூட்டர் ஒன்றை தானே ஓட்டுகிறார். இதில் கால்கள் சரியாக விளங்காமல் இருப்பவர்களுக்கு ஏதுவாக எல்லா இயக்கங்களையும் கையிலேயே செயல்படுத்துமாறு மாற்றி அமைத்து உள்ளார்.

இவர் தன்னுடைய “ஷயோக் பைகர் கஃபே” உணவகத்தை தொடங்கின கதை மிகவும் சுவையானது. ஒரு முறை ஒரு வெளி நாட்டு நபர் லே நகரில் ஒரு தன்னார்வு
தொண்டு நிறுவனத்தில் பணி புரிய வந்திருந்தார். அபோது தின்லேவிற்கு அவரின்
பரிச்சயம் ஏற்பட்டது. பின்னர் மூலம் இருவரும் தொடர்பாய் தொடர்ந்தனர். ஒரு
முறை அந்த வெளிநாட்டவர் இவரிடம் தான் ஏதாவது உதவி செய்ய முடியுமா
என்று வினவினார். அப்போது தின்லே ஒரு உணவகம் தொடங்க தனக்கு இருக்கும்
கனவினை பகிர்ந்து கொண்டார். உடனே அந்த வெளிநாட்டவர் அதற்கு தேவையான தொகையை அனுப்பி வைத்தார்! இதனால் தின்லே பேருவகையும், ஆச்சர்யமும் அடைந்தார். தினமும் தன் உணவகத்தை கால் எட்டு மணி முதல் இரவு எட்டரை மணி வரை திறந்து வைத்து இருக்கிறார். அவ்வப்போது நேரம்
கிடைக்கும்போதெல்லாம் அவர் குடும்பத்தினர் அவருக்கு உதவி புரிகின்றனர்.

தின்லேயின் தந்தை செரிங் முடுப், தாய் செரிங் டோல்கர், சகோதரி பத்மா
அங்கமோ, அவர் கணவர் அனைவருமே வெவ்வேறு அரசாங்க வேளைகளில்
சாலைகள் போடுவதில் பணி புரிகிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்தே
வாழ்கிறார்கள். நாங்கள் அவரிடம் அவர் திருமணம் புரிவதை பற்றி சூசகமாக
கேட்டோம். அவர் தன் காதலின் தோல்வி பற்றியும், காதலியின் குடும்பம் அவளை
ஊனமுற்றவனுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்ததையும் நினைவு கூர்ந்தார்.
“என்னை மணக்க ஒரு பெண் கிடைப்பாளா என்று எனக்கு ஐயம் உள்ளது. நமது
சமூகம் ஊனமுற்றவர்களை மிகவும் பாரபட்சத்துடன் நடத்துகிறது” என்று
உணர்ச்சியுடன் கூறுகிறார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தின்லே ஹிந்தி படங்களை பார்ப்பதிலும், பாட்டு
கேட்பதிலும், தன் நண்பர்களுடன் அளவளாவுதலிம் பொழுதை கழிக்கிறார். கோடை காலத்தில் பயணிகள் வஅதிகமாக இருக்கும்போது, கருப்பு வண்ணம் உள்ள ஆடுகளின் கம்பளிகளை எடுத்து பனிப்புலிகள், மற்றும் yak, ibex என்ற மிருகங்களின் வடிவத்தை செய்து அவற்றை விற்கிறார். ஜனவரி மாதம் மூன்றாம் தேதி வரும் “லோச்சர்” பண்டிகையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார். தனக்கு நாட்டியம் ஆட வரா விட்டாலும், அங்கே நாட்டியம் ஆடுபவரை பார்த்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறார்.


புகைப்படங்கள்:

விக்கி ராய்