Icon to view photos in full screen

“எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! நிச்சயம் உங்கள் நம்பிக்கையை பொய்பிக்க மாட்டோம்!”

முஹம்மத் சுல்தான் என்பவர் காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிக பிரபலமான பூத்தையல் வேலை செய்பவர். Muscular Dystrophy என்னும் தசைநார் தேய்வு அடையும் நோய். இந்த நரம்பியல் குறைபாட்டினால் தசைகள் நாள்பட, நாள்பட சீரழிந்துவிடும். இது  ஒரு மகனுக்கு வந்தாலே சமாளிப்பது கடினம். ஆனால் முஹம்மத் சுல்தானுக்கு ஒன்று அல்ல, மூன்று மகன்கள் இந்த குறைபாடுடன் பிறந்தார்கள்! இதனால் அவர் பட்ட கவலைக்கும், மன உளைச்சலுக்கும் அளவே இல்லை! ,

ஆனால், தற்போது 70 வயதாகும் சுல்தானுக்கு எந்த வித கலக்கமோ மன உளைச்சலோ இல்லை! 32 வயதான அவருடைய இளைய மகன் தாரிக் அஹ்மத் காஷ்மீர கலாச்சாரத்தின் முக்கிய அங்கமான “sozni embroidery” நுண்ணிய, கலை நயம் மிக்க பூத்தையல் தொழிலில் கை தேர்ந்த நிபுணர்! பல விருதுகளை வென்ற இவர், 2010ம் ஆண்டு தன் போல தையல் கலையில் திறன் வாய்ந்த ஊனமுற்றோர்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்க “Special Hands of Kashmir” என்ற குழுமத்தை அமைத்தார். இதில் பணி புரியும் நாற்பது பேரில், பதினைந்து பேர் ஊனமுற்றோர்.
கல்வி பெறுவது என்பது மிக கடினமாக இருந்தது! ஆரம்பப் பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்தே செல்ல வேண்டி இருந்தது. ஊனமுற்ற அவருக்கு இது ஒரு  கடுமையான சவாலாக இருந்தது. பட்காம் நகரில் உயர்நிலை பள்ளிக்கு செல்ல ஒரு பேருந்தில் செல்ல வேண்டி இருந்தது. இதுவும் மிக எளிதல்ல! ஸ்ரீநகர் கல்லூரியில் ஒரு வருடம் படித்து, பின்னர் தூரக் கல்வி மூலம் பட்ட படிப்பையும், உருது மொழியில் முதுகலை பட்டப் படுப்பும் முடித்தார். கல்வி கற்பிக்கும் ஆசிரியராக வேலை செய்ய விழைந்தாலும், அவருடைய ஊனத்தின் காரணமாக ஒரு இடத்திலும் வேலை கிடைக்கவில்லை. அவருக்கு மிகவும் பிடித்தமான கவிகள் மிர்சா காலிப் மற்றும் அல்லாமா இக்பால் முதலியோரின் அமைதியையும், உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும் கவிதைகளால் உந்தப்பட்டார். ,

தன் குழந்தை பிராயத்தில் தாரிக் அவருடைய தந்தையின் நுண்ணிய பூத்தைதல் கலையை பார்த்து அதில் ஆர்வம் கொண்டார். காஷ்மீருக்கே பிரத்யேகமான “pashmina shawls” என்னும் சால்வைகளை தைக்க தன் மூன்று மாத பள்ளி விடுமுறையின் போது கற்றுக் கொண்டார். இதே தொழிலில் முழுநேரம் செயல்படுவது என்றும் முடிவு எடுத்தார். ஆனால் இதில் இடைத்தரகர்கள் அடிக்கும் கொள்ளை லாபத்தினால் விரக்தி அடைந்து, இவர்கள் இல்லாமல் தானே நேராக விற்பனை செய்வதில் முயன்றார். தான் படிப்பதற்காக கிட்டிய 10000 ரூபாய் முதலீடு செய்து ஒரு “smart phone” வாங்கினார். தங்கள் குடும்பத்திற்கு முழு மாதத்திற்கு ஆகும் இவ்வளவு பெரும் தொகையை செலவழித்தால் அவர் குடும்பத்தினர் அவர் மீது கோபம் கொண்டனர். ஆனால், தாரிக் இதை பொருட் படுத்தாமல் முகநூல் மூலம் தான் நெய்த சால்வைகளை விளம்பர படுத்தினார். இதன் மூலம் பல வணிக நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு கொண்டார். பல கண்காட்சிகளிலும் கலை நயம் மிக்க தன் சால்வைகளை விளம்பரப் படுத்தினார். இவைகள் மூலம், அவருடைய திறனுக்கு நாடு முழுவதும் அங்கீகாரமும், பகழும் கிட்டின.

தாரிக்கின் சகோதரர் நாசிர் அஹமத் 2019ம் ஆண்டு காலமானார். 90 சதவிகிதம் ஊனமுற்ற இன்னொரு சகோதரர் பாரூக் அஹமத் தாரிக்கிற்கு வரவு செலவு கணக்குகளை பராமரிக்க உதவுகிறார். தாரிக் காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை கடுமையாக உழைக்கிறார். நடுவில் இரண்டு மணி நேரம் மட்டுமே ஒய்வு எடுத்து கொள்கிறார். வாட்சாப்பில் அவர் “Sitaro se aage jahan aur bhi hai” என்ற இக்பால் கவிதையின் ஒரு வரியை தன்னுடைய “status” ஆக போட்டிருக்கிறார். இதன் பொருள்: “நக்ஷத்ரங்களை எல்லாம் தாண்டி இன்னும் பல உலகங்கள் உள்ளன!”. டாரிக்குடைய வாழ்க்கை சாதனைகளையும், அவருடைய  துணிவையும் இந்த வரி நன்றே படம் போட்டு காட்டுகிறது!

புகைப்படங்கள்:

விக்கி ராய்

வீடியோ:

சந்தன் கோமேஸ்