Icon to view photos in full screen

"நான் குள்ளமாக இருப்பது எனக்கு ஒரு பொருட்டே இல்லை!"

அஸ்ஸாம் மாநிலத்தில் லாக்கிம் மாகாணத்தில் உள்ள கிருஷ்ணாபூர் கிராமத்தில் 1982ம் ஆண்டு தாபா கலாகர் அவர் பெற்றோர்களுக்கு ஐந்தாவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு பிறகு அவர் பெற்றோர்களுக்கு இன்னும் நான்கு குழந்தைகள் பிறந்தன. அதனால் ஆறு சகோதரிகள், 3 சகோதரர்களுக்கு நடுவாக விளங்கினார். அவரின் பெற்றோர் மோகன் சிங்னர், கந்தூரி சிங்னர், கார்பி என்னும் பழங்குடியினர் முறையே கல்வி கற்கவில்லை.

வருடங்கள் நகர்ந்தன. தாபாவிற்கு சில மைல் கற்கள் சரியான சமயத்தில் வர வில்லை. மூன்று வயது ஆன பின்னும், நடக்க முடியவில்லை. அவர் உடன் பிறந்தவர்கள் எல்லாம் சரியான உயரம் வளர்ந்தாலும், இவர் மட்டும் மிக குள்ளமாகவே இருந்தார். ஏனென்றால் dwarfism என்னும் குறைபாடு அவருக்கு இருந்தது. அவரின் சகோதரர் ஒருவர், தடி வைத்து நடக்க பயிற்சி அளித்தார். சில வருடங்களில் தடியை விட்டு விட்டு, இந்நாள் வரையில், உதவி சாதனங்களை பயன் படுத்துகிறார்.

நாங்கள் அவருடன் ஹிந்தியில் பேசினோம். அவருக்கு ஹிந்தி கொஞ்சம்தான் தெரியும். அஸ்ஸாமிஸ் மொழியும், அவர் கணவர் பேசும் நயிஷி ஆதிவாசி மொழியும் சரளமாக தெரியும். ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்ல கடினமாக இருப்பதால், முதலில் ஒன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை என்று கூறினார். அதற்கு பிறகு, தன் தந்தையின் ஊக்குவிப்பால், உடன் பிறந்தோருடன் உள்ளூரில் இருந்த அஸ்ஸாமிஸ் பள்ளிக்கு சென்று ஆறாம் வகுப்பு வரை படித்தார்.

தந்தை மோகன் சிங்னர் மறைந்தவுடன் தாய் கந்தூரி குடும்பத்தை பராமரிக்க கோழிகளை வளர்த்து, அவை இடும் முட்டைகளை விற்று பணம் ஈட்டினார். மேலும், மலை சரிவுகளில் இருந்த காலி நிலத்தில் பயிரிட தொடங்கினார். மலை சரிவுகளில் உள்ள நிலங்களை யார் வேண்டுமானாலும் பயன் படுத்தலாம் என்று எண்ணினார் போலும்!

கலாகருக்கு சிறு வயது இருக்கும் போதே அருணாசல் பிரதேஷை சேர்ந்த  நயிஷி ஆதிவாசி குலத்தை சேர்ந்த டாபா ரதன் என்னும் தினக்கூலி பணியாளர் இவரை திருமணம் புரிந்து கொள்ள விண்ணப்பித்தார். ரதன் சரியான உயரம் இருந்ததாலும், அவருக்கு வேறு உறவினர்கள் யாரும் இல்லாமல் இருந்ததாலும் கலாகருக்கு இந்த சம்பந்தத்தில் முழு உடன்பாடு இருக்கவில்லை. தங்களின் உயர வேறுபாடு தங்கள் குடும்ப வாழ்க்கைக்கும், சமையல் செய்வது முதலான செயல்களுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் என பயந்தார். மேலும், ரதன் வேறு பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்பதால் குடும்பத்தினரும் இந்த சம்பந்தத்தை ஒப்பு கொள்ளவில்லை. கடைசியில், ரதன் எல்லோரையும் இந்த சம்பந்தத்தை ஒப்புக் கொள்ளுமாறு செய்தார்.

அஸ்ஸாம் - அருணாசல பிரதேஷ் எல்லையில் உள்ள பாம்பும் பரே மாகாணத்தில் உள்ள பண்டெர்டெவா கிராமத்தில் இருக்கும் 200 பேரே வசிக்கும் டாபிக் காலனி என்னும் இடத்தில இவர்கள் இருவரும் கல்யாணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ தொடங்கினார்கள். ஒரு வருடம் கழித்து ஒரு குழந்தை இறந்தே பிறந்தது ("பிறக்கும் போது தலை குப்புற பிறந்தது"). இதற்கு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தாபா ராஹுல் என்னும் இந்த மகனுக்கு தற்போது 21 வயது ஆகிறது. St. Francis Assisi School பள்ளியில் படித்து, பின்னர் Government Higher Secondary School, Doimukh பள்ளியில் 12ம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். பொருளாதாரம், சரித்திரம், பூகோளம், ஆங்கிலம், அரசியல் கலை போன்ற பாடங்களை படிக்கிறார்.

கலாகர் - ரதன் உறவு நீண்ட ஆண்டுகள் நீடிக்கவில்லை. கலாக்கரை கைவிட்டு, மற்றொரு பெண்ணுடன் சென்று விட்டார் ரதன். இந்த இரண்டாவது உறவில் ரதனிற்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எப்போதாவது கலாக்கரை வந்து பார்த்தாலும், பண உதவி எதுவும் செய்வதில்லை. 2013 முதல் கலாகர் ஒரு சுகாதார மையத்தில் (Primary Health Centre PHC) பணி புரிந்து வருகிறார். மூங்கில் குடிசையில் வாழும் இவர் வீட்டிலிருந்து மிக அருகே உள்ளது இந்த மையம். மையத்தை பெருக்குவது, துடைப்பது போன்ற வேலைகளை செயகிறார். செவ்வாய் கிழமைகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிறார்கள். அப்போது முழு நாளும் அங்கேயே இருந்து மையத்தை சுத்தம் செய்யும் பணி புரிகிறார். அன்று வரும் ஒவ்வொரு குழந்தையையும் புகைப்படம் எடுத்து அவற்றை மருத்துவரிடம் கொடுக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 10,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார்.

ஊனத்தை பற்றியோ, அதை எப்படி சமாளிக்கிறார் என்பதை பற்றியோ அவர் ஏதும் பேசுவதில்லை. குள்ளமாக இருப்பதால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார். சுயமாக வேலை செய்து சம்பாதித்து தன்னுடைய மகனையும் வளர்த்து வருகிறார். எதிர் காலத்தை பற்றி பெரிய திட்டம் ஒன்றும் தீட்ட வில்லை. "அரசாங்கம் இன்னும் சற்று உதவினால் நன்றாக இருக்கும்" என மட்டும் கூறுகிறார்!

புகைப்படங்கள்:

விக்கி ராய்