Icon to view photos in full screen

"எப்போதும் பிரச்சனைகளை பற்றியே நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள். ஏதாவது முயற்சி எடுத்து, அதில் தீர்வு காண முயற்சியுங்கள்."

36 வயதான சூர்யகாந்த் கிரி கிரியிடம்அவருக்கு 30 வயதான தனலக்ஷ்மியுடன் குடும்பத்தால் நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமணத்தை பற்றி கேட்டதால், மிகவும் மகிழ்ச்சி அடைவார். தனலக்ஷ்மி ஊனமில்லாத மூவரை நிராகரித்து கண் தெரியாத தன்னை தேர்ந்தெடுத்ததாலேயே  கிரி பேருவகை அடைகிறார்.
 
தற்போது Vindhya E-Infomedia நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் இவர் தைரியமும், தன்னம்பிக்கையும் மிகுந்து காணப்படுகிறார். ஆனால் இவரே சிறு வயதில் யாருடனும் பேசாமல், நண்பர்கள் எவரும் இல்லாமல் வெட்கப்பட்டு தனியாகவே இருப்பார். இவர் பீடார் மாகாணத்தில் கோடம்பால் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறவிலேயே குடுருடனாக பிறந்தார்.  இதனால் இவர் தந்தை தன்னுடைய மற்ற குழந்தைகளை (மூத்த மகன் சந்திரகாந்த், இளைய மகள் சந்தோஷி) ஆதரித்தது போல இவரை ஆதரிக்கவில்லை. ஆனால், சூர்யகாந்தின் தாத்தா பாக்கப்பா (போலீஸ் வேலையிலிருந்து ஒய்வு பெற்றவர்), பாட்டி சுஷீலா பாய் இவரை மிகுந்த ஆதரவுடனும், அன்புடனும் பேணி வளர்த்தனர். "வாழ்க்கையில் சுய மரியாதையுடன் வாழ எனக்கு என் தாத்தாவும், பாட்டியுமே பேருதவி புரிந்தனர்." என்று நன்றியுடன் கூறுகிறார்.
 
முதலில், கண் தெரியாதவர்களுக்கு பள்ளிக்கூடம் இருப்பது கூட குடும்பத்தினர் எவருக்குமே தெரியாது. சூரியகாந்திற்கு 10 வயது ஆனபோது, பாக்கப்பா அவரை பெலகாம் நகரில் உள்ள Maheshwari School என்னும் கண் தெரியாதவர்களுக்காக பள்ளியில் சேர வைத்தார். பள்ளிக்கு கட்டணம் ஏதும் இல்லை. பள்ளியின் விடுதியிலேயே இவர் தங்கி இருந்தார். பள்ளி நிர்வாகம் இவருக்கு நல்ல ஊக்கமும், ஆதரவும் அளித்தது. இதனால், இவர் வாழ்வில் புதியதொரு உலகமே மலர்ந்தது என்று கூட சொல்லலாம். தான் சிறுவனாக இருக்கும்போது, படிப்பதிலோ எழுத்துவதிலோ தனக்கு ஆர்வம் இல்லாமல் சோம்பலாகவே இருந்ததாகவும், வெறுமனே எல்லோரோடும் பேசிக்கொண்டே இருந்ததாகவும் இவர் கூறுகிறார். வகுப்பில் அனைவரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகனாகவே தான் இருந்ததாகவும் இவர் கூறுகிறார்!
 
2002ம் ஆண்டு 10ம் வகுப்பு முடித்தவுடன் மைசூரில் உள்ள JSS Polytechnic for the Differently Abled என்னும் மாற்று திறனாளிகளுக்கான தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்து கண் தெரியாதவர்களுக்காக கணினி செயலிகளில் மூன்று வருட டிப்ளோமா முடித்தார். Enable India நிறுவனத்தில் மருத்துவ படியெடுத்தல் (medical transcription) பயிற்சி பெற்றார். இப்போதும் Enable Indiaவுடன் தொடர்பு கொண்டு இருக்கிறார். அங்குள்ள "பாபு சார்" என்பவரிடம் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளார். பாபு சார் தான் சூர்யகாந்திற்கு யாரையுடைய தயவும் இல்லாமல் வாழ்வதின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இதனால் இன்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்.
 
சூர்யகாந்திற்கு வேலை எளிதில் கிடைக்கவில்லை. படிப்பு முடித்தவுடன், பல வேலைகளுக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால் யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. இந்நிலையில்தான் Vindhya E-Infomediaவில் வேலை கிடைத்தது. அங்கே tele-caller பணியில் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்கிறார். (customer service representative). இவரை தனலக்ஷ்மி அலுவலகத்தில் கொண்டு வந்து விடுகிறார். வேலை முடிந்த பின்பு, இவரை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்கிறார். இவர் தனலக்ஷ்மியை தன்னுடைய வாழ்வில் அச்சாணியாகவும், உறுதுணையாக இருப்பவராகவும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இவர்களுக்கு தற்போது 4 வயதான ஆத்யா என்னும் மகள் இருக்கிறாள். குழந்தை பிறப்பதற்கு முன், தனலக்ஷ்மியும் பணியில் இருந்தார். ஆனால் குழந்தை பிறந்தவுடன், முழு நேரமும் குடும்பத்திற்கே அர்ப்பணித்து, கணவனையும் மகளையும் ஆதரவுடன் பார்த்துக் கொள்கிறார். மாதம் ஒரு முறையாவது மூவரும் வெளியே சாப்பிடுகின்றனர். ரோட்டி, இட்லி மற்றும் புலாவ் இவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு. இனிப்பு வகைகளில் தார்வார் பேடா , கலக்கண்ட மிகவும் பிடிக்கும்.
 
அவ்வப்போது விடுமுறைக்கு கர்நாடகாவில் உள்ள சுற்றுலா இடங்கள், மற்றும் வழிபாட்டு ஸ்தலங்கள் போன்றவைகளுக்கு செல்கின்றனர். தனக்கு கண் தெரியாததை தன் மகளுக்கு புரிய வைக்க கடினமாக இருந்தாலும், தற்போது அந்த குழந்தை மிகவும் புரிதலோடு இருக்கிறாள். தந்தையை அன்புடன் கவனித்துக் கொள்கிறாள். 
 
இசை இவர் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிறது. பக்தி பாடல்கள், மற்றும் கிராமிய பாடல்களை ரசித்து கேட்கிறார். தற்போது தொழில் நுட்பம் மூலம், கண் தெரியாதவர்களின் வாழ்க்கையில் பற்பல முன்னேற்றங்கள் வந்துள்ளதை மிக நன்றியுடனும், வியப்புடனும் நினைத்து பார்க்கிறார். Envision என்னும் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)மூலம் தயாரிக்கும் சிறப்பு கண்ணாடி ( ‘smart’ glasses) குருடர்களுக்கு கண் தெரிய வைக்கிறது. இம்மாதிரி தொழில் நுட்ப முன்னேற்றங்களை மிகவும் பாராட்டினார். வீட்டில் என்னென்ன பொருட்கள் எங்கெங்கு உள்ளன என்பதை குருடர்களும் எடுத்து உரைக்கும் கருவி ஒன்றை அவர் மிகவும் ஆவலுடன் எதிர் நோக்குகிறார். குருடர்களும் என்ன, கண் பார்வை உள்ளவர்களுக்கு கூட இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அல்லவா!


புகைப்படங்கள்:

விக்கி ராய்