Icon to view photos in full screen

“வண்ண பென்சில்களையும், பேனாக்களையும், சாயங்களையும் வைத்து ஓவியம் தீட்ட எனக்கு மிகவும் பிடிக்கும்”

“இந்த கிராமத்தில் இருக்கும் பலருக்கும் ‘Sign Language’ எனப்படும் சைகை மொழி நன்கு தெரியும்” என்று ஓடிஷா மாநிலத்தில் பூரி மாகாணத்தில் உள்ள பால்புட் என்னும் இந்த கிராமத்தை பற்றி பிரசந்தா பரிடா கூறினார். இதற்கு மூல காரணம் 12 வயதான சோனாலிதான் என்று எங்களுக்கு தோன்றியது. பிரசாந்தா, குனி பரிடா தம்பதியருக்கு பிறந்த மூன்று பெண்களில் மூத்தவரான சோனாலிக்கு காது கேட்காது. ஆனாலும் தன் பெற்றோர்களின் மளிகை கடையிலே வரும் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்க அவருடன் தொடர்பு கொள்ள வேண்டி இருந்ததால், அந்த கிராமத்தவர்கள்  சைகை மொழியை கற்றுக் கொண்டதில் வியப்பு ஏதும் இல்லை அல்லவா!

காது கேளாதவர்களுக்கான பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சோனாலி தன் ஒருவருடைய சொந்த முயற்சியாலேயே Indian Sign Language (ISL), எனப்படும் இந்திய சைகை மொழி பரவ எதேச்சையாக வித்திட்டார். மாலை வேளைகளில் அவருடன் விளையாடும் அவர் நண்பர்கள் இம்மொழியையே பயன் படுத்துகிறார்கள். அவர் பெற்றோர்களும்,மற்றும் சகோதரிகளும் சந்தாபூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், கோப் மாகாணத்தில் உள்ள ஒகல்பூர் கிராமத்தில் அரசு நிறுவனத்திலும் இந்த சைகை மொழியில் முறையான பயிற்சி பெற்று உள்ளார்கள்.
எங்கள் புகைப்படக்காரர் விக்கி ராயை (ஜோக்மாயா அறக்கட்டளையை சேர்ந்த) ராகேஷ் பிரதான் பரிடா குடம்பத்தினருடைய இல்லத்துக்கு அழைத்து சென்ற போது, அங்கே சோனாலி யும் இருந்தார். கொரோனா தொற்று தொடங்கிய முதல் பள்ளி மூடப்பட்டு இருந்தது. எனினும் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் காலையில் அவருக்கு பாடம் சொல்லி தர வீடு தேடி வருவார்கள். வந்தவர்கள் சாப்பிட்டு விட்டே திரும்பி செல்ல வேண்டும் என்று சோனாலி வற்புறுத்துவார். அப்படி சாப்பிடாமல் போனால் மிகவும் கோபப்படுவார் என்று அவருடைய தந்தை கூறினார்.

பிரசாந்தாவுடன் அவருடைய பெற்றோர்களும் வாழ்கிறார்கள். அவர் தந்தை வாத நோயால் தாக்கப் பட்டு வாழ்பவர். அரிசி பயிரிடுதல் மற்றும் வெற்றிலை, குளிர் பானங்கள் விற்கும் தன் கடையில் வரும் வருமானத்தால் தன் குடும்பத்தை பராமரிக்கிறார். “சோனாலி கடையை நன்கு நடத்துகிறாள். வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருள்களை கொடுக்கவும், அவர்களின் தேவைக்கு ஏற்ப வெற்றிலையை பண்டங்களுடன் கொடுக்கவும் நன்கு தெரியும். பெரிய நோட்டு கொடுத்தால் அதற்கு தகுந்த சரியான சில்லறை கொடுக்க மட்டும் தெரியாது” என்று அவர் கூறினார்.

 “சோனாலி எப்போதும் மிகவும் மகிழ்ச்சி மிகுந்து, மாறாத புன்னகையுடன் இருப்பாள். சிறு வயதில் கேட்டது கிடைக்காவிட்டால் அடம் பிடித்து ஆத்திரம் அடைவாள். ஆனால் இப்போதெல்லாம் ஒவ்வொரு பண்டிகைக்கும் புது துணி போன்ற அவள் வேண்டியதை எல்லாம் வாங்கி கொடுக்க என்னிடம் போதிய பணம் இல்லை என்று புரிந்து கொள்ளும் மனப் பக்குவம் அடைந்து இருக்கிறாள்.  புத்தகத்திலும், TVயிலும் பார்க்கும் படங்களை எல்லாம் மிக துல்லியமாக வரைந்து, அதை பல வண்ண பென்சில்கள், பேனாக்கள் மற்றும் சாயங்களால் நன்கு வண்ணம் பூசுவாள்” என்று பிரசாந்தா கூறினார்.

சில வருடங்களுக்கு முன்பு சோனாலியை பூரி, கட்டக், புவனேஷ்வர் போன்ற பெரு நகரங்களில் காது கேட்க ஏதாவது சிகிச்சை கொடுக்க முயலுமா என்று விசாரித்த போது, காதில் ஒரு இயந்திரம் பொருத்தலாம் என்று பரிந்துரைத்தனர். ஆனால் அதற்கு லக்ஷ கணக்கில் செலவாகும்! இது இயலாது என்பதால் ஒரு சிறிய “hearing aid” வாங்கி போடுதார். ஆனால் இதையும் சோனாலி ஏற்க வில்லை. இதனால் இவர்கள் குடும்பத்தில் சைகை மொழிக்கே மிக முக்கியத்துவம் கொடுத்து உபயோகிக்க தொண்டங்கினார்கள். மற்றவர்களின் உதட்டசைவுகளை கவனித்து அவர்கள் பேச்சை புரிந்து கொள்ளும் திறமையும், அவ்வப்போது அதையே திரும்பி பேசவும் பழகிக் கொண்டார். ஒவ்வரு மாலை 7 மணிக்கு அனைவரும் பகவத் கீதை படிக்கும்போது சோனாலியும் புத்தகத்தை வைத்துக் கொண்டு பின்பற்றுவார்.

“இப்போது இருக்கும் நிலைமை எங்கள் எல்லோருக்கும் பழகிப் போய் விட்டது. இப்போதெல்லாம் ஊனமுற்றவர்கள் எல்லாம் IAS அதிகாரி போன்ற பெரும் பதவிகளை அடைகிறார்கள். அதே மாதிரி இறைவன் இவளுக்கும் பேரருள் புரிவார் என்று நம்புகிறேன்” என்று ஆவலுடன் இருக்கிறேன் என்று பிரசாந்தா உவகையுடன் கூறினார்!

புகைப்படங்கள்:

விக்கி ராய்