Icon to view photos in full screen

"வாழ்க்கையில் சோதனைகளை சந்திக்க நேர்ந்தால், அதை உங்கள் திறமைகளையும் நேர்மறை எண்ணங்களையும் கொண்டும் சந்தித்து முறியடியுங்கள்."

டாக்டர் சோனால் மேத்தாவின் வாழ்க்கையில் எவ்வளவு முறை அவர் செய்வதில் முதலிடம் பெற்றிருக்கிறார் என்பதை கணக்கிடவே முடியாது. இவை யாவையுமே அவர் Retinitis Pigmentosa (RP) என்ற நோயின் தாக்குதலுக்கு பிறகு வென்றவை என்பது முக்கியமாக குறிப்பிட தக்கது.
 
அரசாங்கத்தில் பொறியிலாளராக பணி புரியும் கன்ஹையாலால் மேத்தா, மற்றும் அவர் இல்லத்தரசி சார்லபென் மேத்தாவிற்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் சோனால் கடைசி குழந்தை. 1969ம் ஆண்டு பிறந்தார். குஜராத் மாநிலத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பலிதானா நகரில் வாழ்ந்து வந்தனர். சோனாலுக்கு 5 வயது ஆகி இருந்தபோது, மாநில தலைநகரான காந்திநகருக்கு குடி பெயர்ந்தனர்.  கடைக்குட்டி என்பதால், பெற்றோர்கள், மற்றும் கூடப் பிறந்தவர்கள் சோனால் மீது அதிக பாசம் பொழிந்து செல்லமாக வளர்த்தனர். 10ம் வகுப்பு படிக்கும்போது இரவு நேரங்களில் கண் பார்வை இல்லாமல் போயிற்று. ஒரே வருடத்தில், கண் பார்வை முழுவதுமே இழந்தார். மிக முக்கியமான வாரிய தேர்விற்கு அவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் உதவி செய்தனர். பாடங்களை அவருக்கு படித்து காட்டி, ஒலி நாடாக்களில் பதிவு செய்து அவர் மனப்பாடம் செய்ய ஏதுவாக செய்து கொடுத்தனர். பரிட்சையில், அவருக்கு எழுதுவர் (scribe) ஒருவரையும் ஏற்பாடு செய்தது கொடுத்தனர். அந்த பரிட்சையில் 82 % பெற்றார். அவரின் பல வெற்றி வாகைகளில் இது முதல் படி. RP தாக்குதலுக்கு முன்பு எப்படி இருந்தேனோ, சற்றும் மாற்றம் இல்லாமல் என் வாழ்க்கை தொடர, என் குடும்பமே முக்கிய காரணம்." என்று நன்றியுடன் கூறுகிறார். கண் பார்வையில் இல்லாவிட்டாலும், அவரை மற்றவர்களுடன் சமமாக, பார பட்சம் இல்லாமல் நடத்தினார்கள். திரைப்படங்களுக்கு செல்லும்போதும், பண்டிகை காலங்களிலும் அவர் எல்லோரோடும் சேர்ந்து கலந்து கொள்ள முடிந்தது. "ஊனமுற்ற ஒருவர் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் குடும்பத்தின் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் மிக முக்கியம்." என்று பரிந்துரைக்கிறார்.
 
சோனால் வாழ்க்கையில் பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய நாள் அவர் 12ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 9வது இடத்தை பிடித்தது நாள். குஜராத் மாநிலத்தில் முதல் 10 இடங்களில் தேறிய முதல் கண் தெரியாத மாணவர் இவர்தான். இதுவரை வேறு யாரும் இந்த சாதனையை முறியடித்ததில்லை. அவருக்கு புத்தகங்கள் படிப்பதில் பேரார்வம் கொண்டிருந்ததால், ஆங்கில இலக்கியம் படிக்க தேர்ந்தெடுத்தார். குஜராத் பல்கலை கழகத்தில் BA பட்டம் படித்து மூன்றாவது இடத்தை பெற்றார். முது நிலை பட்டம் படிக்க விழைந்த போது ஒரு நண்பரின் உதவியால் R.B. சுடிவாலா என்பவற்றின் பரிச்சயம் கிட்டியது. அரசாங்க வேளையில் இருந்து ஒய்வு பெற்ற அவர், தொண்டு புரியும் மனப்பான்மையும், ஆங்கில இலக்கியங்களில் பேரார்வமும் கொண்டவர்.அவர் உதவியுடன், M.A. மற்றும் M.Phil. புட்டங்களை சோனால் முடித்தார். இவருக்கும், சுடிவாலாவிற்கும் இருந்த நெருங்கிய நட்பு சுடிவாலா காலமாகும் வரை, 17 வருடங்களுக்கு தொடர்ந்தது.
 
M.A. முடித்த பிறகு வேலைக்கு சேர முயன்றார்.Gujarat Public Service Commission பரீட்சை எழுதினார். இந்த பரிட்சையில், ஊனமுற்றோர்களுக்காக இட ஒதுக்கீடு இல்லாததால் மற்ற எல்லோருடனேயே போட்டியிட்டு முதல் இடத்தை வென்றார். இதனால் கல்லூரி ஆசிரியராக வேலை கிடைத்தது. அந்த வேலையில் இருக்கும்போது M.Phil. பட்டத்திற்கு சேர்ந்து, இதிலும் பல்கலை கழகத்தில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றார். இதற்கு பிறகு முனைவர் பட்டும் முடித்து, குஜராத் மாநிலத்தின் கண் தெரியாத முதல் Ph.D பெண்மணி என்ற புகழையும் பெற்றார்.
 
கடந்த 28 ஆண்டுகளாக அஹமதாபாத்  நகரில் உள்ள Government Polytechnic for Girls கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். காந்திநகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் இந்த கல்லூரி இருப்பதால் பயணிப்பதற்கு ஒரு உதவியாளரை வைத்து கொண்டார். முதலில் தன் திறமையை நிரூபிக்க வேண்டி இருந்தாலும், நாளடைவில் தன்னுடன் பனி புரியும் ஆசிரியர்கள், மற்றும் தன் மாணவர்களின் பேராதரவை பெற்றார். அவர்களின் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் பாத்திரமானார். கண் தெரியாதவர்களுக்கு கணினி திரையில் உள்ளதை படித்து காட்டும் Jaws, மற்றும் கை பேசியில் உள்ளதை படித்து காட்டும் NVDA and the talk-back இவற்றை நன்கு பயன் படுத்துகிறார். தன் சொந்த தேவைகளுக்கு ஒருவரை வேலையில் அமர்த்தி இருக்கிறார்.
 
2009ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் தந்தை இறந்த போது பெற்றோர்கள் எப்போதும் தன்னுடன் இருக்க மாட்டார்கள் என்ற கசப்பான உண்மை இவருக்கு புரிந்தது. அதற்காக தனக்கு ஒரு வாழ்க்கை துணையை தேடினார். ஒரு நண்பர் மூலம் State Bank of India வில் பணி புரியும் சற்று கண் பார்வை மங்கிய உஷிர் ஷா என்பவரை சந்தித்து பழக தொடங்கினார். நன்கு புரிதல் ஏற்பட்டு, 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் புரிந்தார். "உஷிர் முதலில் எனக்கு நண்பன், பிறகே கணவன்." என்று அன்புடன் கூறுகிறார். உஷிரின் பெற்றோர்களுடன் அகமதாபாத் நகரில் இவர்கள் இருவரும் வாழ்கிறார்கள். அந்த பெற்றோர்கள் இவர்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள்.
 
புத்தகங்கள் படிப்பது என்பது இவருக்கு மிகுந்த பிடித்த செயல். Audiobooks (புத்தகங்களை படித்து காட்டுவது) , மற்றும் Bookshare.org இணைய தளத்தில் உறுப்பினராக இருப்பது போன்றவைகளால் தன்னுடைய படிப்பு ஆர்வத்தை வளர்த்து வருகிறார். குடும்பத்துடன் பற்பல பயணங்களை மேற்கொள்கிறார். சமீபத்தில் Gir National Park என்னும் இடத்திற்கு சென்று வந்துள்ளார். "வாழ்க்கையில் எந்த சோதனைகள் வந்தாலும் துவண்டு போகாமல் சரியான நேர்மறையான மன நிலை கொண்டு அவைகளை சந்திக்க வேண்டும். நடப்பவைகளை மாற்ற முடியாது." என்று கூறுகிறார். 


புகைப்படங்கள்:

விக்கி ராய்