Icon to view photos in full screen

"ஊனமுற்றோர்கள் எப்போதும் தங்களுக்கு வேண்டிய உதவி மட்டும் கேட்பார்கள் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. அதை மாற்றி நாங்களும் பிறருக்கு உதவ முடியும் என்ற உண்மையை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என்பது என் குறிக்கோள்."

தற்போது 34 வயதான சுபாஜித் பட்டாச்சார்யா சிறு வயதில் மேற்கு வங்காள மாநிலத்தில் North 24 Parganas மாகாணத்தில் வாழ்ந்து வந்தார். பெங்களூரில் வாழும் அவர் தங்கை மகப் பேற்றிற்கு உதவ, அவர் தாயார் ஷிபானி பெங்களூருக்கு செல்ல வேண்டி இருந்தது. தன் தாயுடன் சுபாஜித்தும் சென்றார். ஒரு நாள் மொட்டை மாடியில் வீட்டு நாய் கிஷ்மிஷ்ஷுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த தென்னை மரத்தை ஒரு குச்சி வைத்து தொடப் பார்த்தார். அப்போது மின்சார கம்பியை அந்த குச்சி தொட, இதனால் இவரை மின்சாரம் தாக்கி, சுய நினைவு இழந்து விழுந்தார். அருகில் உள்ள ஒரு சிறுவன் இதைக் கண்டு கன்னடத்தில் உரக்க கத்தினான். மொழி புரியாவிட்டாலும் என்ன நடந்தது என்று ஷிபானியால் ஊகிக்க முடிந்தது. மேலே ஓடி சென்று துவண்டு கிடந்த சிறுவனையும், அவன் அருகில் இருந்த நாயையும் கண்டார்.
 
இரண்டு நாட்கள் மருத்துவ மனையில் இருந்தபின், சுபாஜித் மீண்டும் சுய நினைவு பெற்றார். ஆனால் 10 மாதங்கள் மருத்துவ மனையிலேயே இருந்தார். இரண்டு கைகளும் துண்டிக்கப் பட்டன. "இது நடந்தது 2000ம் ஆண்டு மே மாதம். அப்போது எனக்கு புனர் ஜன்மமே ஆயிற்று என்று கூறலாம்." என்று நினைவு கூர்ந்தார். இந்த பேரிடரிலிருந்து மீள அவருக்கு ஷிபானி மன உறுதியை ஊட்டினார். மேலும் மன நல மருத்துவர் Dr மீரா சாண்டி பரிந்துரைத்தது எல்லாம் நன்கு நினைவு கூர்ந்தார். "இரண்டு கைகளும் துண்டிக்கப் பட்டு விட்டதே என்று வருத்தப் படுகிறாயா?" என்று Dr மீரா கேட்டதற்கு சட்டென்று இவர் அளித்த பதில் "இல்லை, இல்லை. இந்த உலகின் அழகை ரசிக்க இறைவன் எனக்கு இரண்டு கண்கள் கொடுத்திருக்கிறான் என்று இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்." இதனை கேட்ட Dr மீரா "இவனின் மன நிலைக்கு ஒரு குறையும் இல்லை." என்று கூறினார்.
 
மருத்துவ மனையில் இருக்கும்போது HAL நிறுவனத்திலிருந்து ஒய்வு பெற்ற ராமசாமி என்னும் ஒருவர் இவரை அடிக்கடி பார்த்து ஊக்கம் அளித்தார். அவர் கொடுத்த Walkman, இசை நாடாக்கள் போன்றவை இவருக்கு உற்சாகம் அளித்தது. ராஜேஷ் கண்ணா நடித்த "ஆனந்த்" படத்தால் உந்தப்பட்டு, மருத்துவமனையில் ஆலோசகராகவும், தன்னார்வு தொண்டராகவும் சேவை செய்தார்.
 
2002ம் ஆண்டு தன் தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். தன்னுடைய நேர்மறை எண்ணங்களை விடாமல் கடைபிடித்தார். "இது உன்னால் முடியாது என்று யாராவது என்னிடம் சொன்னால் என்று யாராவது என்னிடம் சொன்னால், அந்த செயலை முடித்தே காட்ட வேண்டும் என்ற ஒரு ஆர்வம் என்னில் பொங்கி எழும்" என்று கூறுகிறார். தன் நண்பர்களுடன் கால் பந்து ஆட சென்ற முதல் நாள் மைதானத்திலேயே மயங்கி விழுந்து விட்டார். ஆனால் இதனால் மன தளர்ச்சி அடையாமல் மேன்மேலும் முனைந்து விளையாட்டில் தேர்ச்சி பெற்றார். இதனால் அவர் உடல் நிலையாக நிற்கவும் முடிந்தது. பல கால்பந்து கோஷ்டிகளிலிருந்து அழைப்பும் வந்தன.
 
ஆனாலும் பள்ளியில் படிப்பை துவங்க சில வருடங்கள் ஆயின. பள்ளிக்கு தேவையான நாட்கள் செல்லவில்லை என்பதால் 10ம் வகுப்பு கடைசி பரீட்சை 2010ம் ஆண்டு எழுத அனுமதி கிடைக்கவில்லை. இவர் ஊனமுள்ளவர் யாரும் மதிக்கவில்லை. ஆனாலும் விடா முயற்சியுடன் அடுத்த வருடமே Rabindra Open University மூலம் பரீட்சை எழுதினர். தனக்காக ஒரு எழுத்தரை பயன் படுத்தாமல், தானே, தன் செயற்கை கையை வைத்துக் கொண்டு எழுதி வெற்றியும் கண்டார். இதனால் உந்தப்பட்டு 12ம் வகுப்பு பரிட்சையும் இப்படியே எழுதி தேர்ச்சி பெற்றார்.
 
2013ம் ஆண்டு தனக்கு ஏற்ப சைக்கிள் ஒன்றை மாற்ற வேண்டும் என்று விருப்பப் பட்டார். ஆனால் பல கடைகள் இது முடியாது என்று மறுத்துவிட்டனர். இம்மறுப்புகள் இவரின் மன உறுதியை மேலும் திடப்படுத்தியது. இந்த உறுதி வீணாகவில்லை. ஒருவர் ஏழே நாட்களில் இவரின் தந்தையின் சைக்கிள் இவருக்கு ஏற்ப மாற்றி கொடுத்தார். கணினி பற்றி ஒரு வருடமும், data entry பற்றி இரண்டு மாதமும் பயின்றார். 2014ம் ஆண்டு Gobardanga Hindu College என்னும் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தன் வருங்கால மனைவி ஜூலி ஐச் என்பவரை சந்தித்தார். 2015ம் ஆண்டு அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடி பெயர்ந்தார். "நான் எங்கு என் கைகளை இழந்தேனோ அங்கேயே பணி செய்து பணம் ஈட்ட வேண்டும் என்ற மன உறுதி எனக்கு இருக்கிறது." என்றார்.
 
இவரும், ஜூலியும் பெங்களுர் நகரத்திற்கு குடி பெயர்ந்தனர். ஜூலி ஆயுர்வேத மருத்துவமனையில் பணி புரிந்தார். ஷுபஜித் Association of People with Disability (APD) என்ற நிறுவனத்தில் graphic designer பணி புரிந்தார். கூட்டம் நிறைந்த பேருந்தில் செல்வது மிகவும் கடினமாக இருந்ததால், தன் பணி நேரங்களை மாற்றிக் கொண்டார். அப்போது அவருக்கு ஒரு எண்ணம் உதித்தது. "சைக்கிள் ஓட்ட தெரிந்த நான் ஏன் ஸ்கூட்டர் ஒட்டக கூடாது" என வியூகம் வகுத்தார். இதற்காக பலருடன் கலந்தாலோசித்தார். இணைய தளங்களிலும் தேடினார். எங்கும் பதில் கிடைக்கவில்லை. கடைசியில் அருகில் உள்ள ஒரு mechanic உடன் மாலை வேளைகளில் சேர்ந்து ஆராய்ச்சி செய்து ஒரு முன்மாதிரி ஸ்கூட்டர் ஒன்றை வடிவமைத்தார். அதை ஒரு மாதம் ஒட்டி பயிற்சி பெற்று, பின்னர் புது ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி அதை தனக்கு ஏற்ப மாற்றிக் கொண்டார். Licence வாங்க RTOக்கு சென்ற போது, இவருடைய ஊக்கத்தை கண்டு அங்கிருந்த உதவி அதிகாரி, இவர் (கை இல்லாமல்) வண்டி ஓட்டுவது சட்டத்திற்கு புறம்பானது என்றாலும், யாரும் இவரை கைது செய்ய முடியாது என்று வாக்களித்தார். இதனால் இவர் எங்கும் தன்னுடைய ஸ்கூட்டர் வைத்தே பயணிக்கிறார். சாலையில் உள்ள மற்றவர்கள் எல்லாம் இவரை வியப்புடன் பார்ப்பார்கள்!
 
2020ம் ஆண்டு Indira Gandhi National Open University (IGNOU) மூலம் பட்டம் பெற்றபோது இவருடைய ஸ்கூட்டர் வடிவமைக்கு விருதும் கிடைத்தது. இதைத்தவிர APD மூலம் மூன்று விருதுகள் பெற்று India Book of Records என்னும் புத்தகத்தில் இவர் பெயர் சேர்க்கப்பட்டது. கொரோனா தொற்றின் போது இவரும் ஜூலியும் ஆதரவற்ற மக்களுக்கு ஊரடைப்பு போது தேவையான உதவிகளை செய்தனர். மேலும் தன் நண்பர்களையும் இப்பணிக்கு உதவ வைத்தார். பல தன்னார்வு தொண்டர்களுடன், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு உணவு விநியோகம் செய்தார். இதனால் Corona Warrior என்னும் விருதையும் பெற்றனர். இதுவே இவருக்கு பெரும் திருப்தியை ஏற்படுத்தியது.
 
2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Akshadhaa Foundation நடத்தும் ஆட்டிசம் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு பள்ளிக்கு மேலாளராக சேர்ந்தார். Banjara Academy என்னும் நிறுவனத்திலிருந்து சான்றளிக்கப் பட்ட ஆலோசகராக தேர்ச்சி பெட்ரா இவர் 13-19 வயது இளைஞர்களுக்கும் , முதியவர்களுக்கும் பரிந்துரைக்கிறார். அவர்களின் சோகம் மிக்க கதைகளை கேட்டு மனத்தளர்ச்சி அடையும் போது கிஷோர் குமார் பாடிய பாடல்கள் இவருக்கு மீண்டும் உற்சாகத்தை கொடுக்கிறது. இயற்கை வளத்தை ரசிப்பதும் இவருக்கு மிகவும் மன நிம்மதி கொடுக்கிறது. பள்ளியில் உள்ள தோட்டத்தை பராமரிக்கவும், பச்சைப்பசேல் என்று எழில் மாறாத இடங்களுக்கு தன் ஸ்கூட்டர் மூலம் செல்வதும் இவருக்கு மிகவும் பிடிக்கும்.
 
டில்லியிலிருந்து 3000 கீ.மீ தொலைவில் உள்ள லடாக்கிற்கு 21 நாட்களில் சாலை வழியே சென்று, எல்லா இடங்களிலும் ஊனமுற்றோர் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே இவருடைய நெடு நாளைய கனவு.


புகைப்படங்கள்:

விக்கி ராய்