Icon to view photos in full screen

"தோளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மீண்டும் கூடை பந்து ஆட ஏங்குகிறேன்."

மிகவும் ஊக்கம் மிக்க தங்கள் பெண் திடீரென்று ஊனம் அடைந்தபோது அவளை மீண்டும் ஊக்குவித்து அவளுக்கு பேராதரவு அளித்தனர் அவர் பெற்றோர். இதனால் தற்போது 26 வயதான அந்த பெண் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கூடை பந்து விளையாடும் வீராங்கணை!
 
உத்தராகண்ட் மாநிலத்தில் கார்வால் என்னும் ஊரில் சாக்ஷி பிறந்தார். அவருக்கு 9 வயது ஆனபோது ஒரு விபத்துக்கு உள்ளானார். அவர் சாலையை கடக்கும்போது ஒரு சுற்றுலா பேருந்து அவர் மீது மோதியது. மலை பிரதேசத்தில் உள்ள அவர் வாழும் சிற்றூரில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. அவரை ரிஷிகேஷ் நகருக்கு அழைத்து செல்வதற்கு முன் நிலைமை மிக மோசமாகி, ரத்த கசிவு ஏற்பட்டு, ஒரு காலையே வெட்ட வேண்டி ஆயிற்று. நான்கு மாதங்கள் மருத்துவ மனையிலேயே இருந்து, சக்கர நாற்காலி மற்றும் செயற்கை கால் பயன் படுத்த பழக்கி கொண்டார்.
 
அப்போது அவர் பெற்றோர்கள் வினோத் சிங் சவுஹான் மற்றும் சுனைனா தேவி மறுபடியும் அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல இயலாது என்று தீர்மானித்தனர். ஏனென்றால் மருத்துவ வசதியும் இல்லாமல், மலை பிரதேசத்தில் சரியான பாதைகள் கூட இல்லாமல் இருந்ததால் அந்த ஊரில் சாக்ஷி முன்னேற முடியாது என்று நிர்ணயித்தனர். டாக்ஸி ஓட்டுனராக இருந்த வினோத் குடும்பத்தை ரிஷிகேஷ் நகருக்கு குடி பெயர்க்க முடிவெடுத்தார். ஆனால் தான் மட்டும் சொந்த ஊரிலேயே டாக்ஸி ஒட்டி, பணம் ஈட்டி குடும்பத்திற்கு அனுப்பி வைத்தார். சாக்ஷியும் அவர் இரண்டு சகோதரர்களும் புது வாழ்வை துவங்கினர். அவர் தாயும், தையல் வேலை செய்து குடும்பத்தை பராமரித்தார்.
 
"என் தந்தையும் குடும்பத்தினரும், என் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக பல இன்னல்களை சந்தித்து இருக்கிறார்கள். அதற்காக நான் என்றென்றும் அவர்களுக்கு கடமை பட்டுள்ளேன்." என்று சாக்ஷி நன்றியுடன் கூறுகிறார். திடீர் என்று ஊனம் ஆவது உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் சோதனைக்கு ஆளாக்குகிறது என்று கூறினார். ரிஷிகேஷ் நகரில் உள்ள Government Girls Inter College கல்வி நிலையத்திற்கு சென்றபோது, மற்றவர்கள் ஓடி விளையாடிக் கொண்டு இருப்பதை பார்த்து விரக்தி அடைந்தார்.
 
மருத்துவராக ஆக வேண்டும் என்று முதலில் விரும்பினாலும், 2013ம் ஆண்டு 12ம் வகுப்பு முடிந்தவுடன் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆண்டு டிப்ளோமா படிப்பிற்கு சேர்ந்தார். தன் ஊனத்தின் பாதிப்பை அவர் உணர தொடங்கியபோது மிகவும் மன உளைச்சல் அடைந்தார். டிப்ளோமா முடித்தவுடன் டேரா டூன் நகரில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கே ஊனமுற்றவர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஒரு குழுமத்தில் சேர்ந்த போது, அவர் வாழ்க்கை மீண்டும் மலர தொடங்கியது. மற்ற ஊனமுற்றவர்களின் அனுபவங்களை அறிந்த போது நிலைமை நன்றாக விளங்க தொடங்கியது. அவர்களில் ஒருவரான ஜாவேத் ஒரு காலை இழந்தவர். அதனால் ஊன்றுகோல்களை பயன் படுத்தி வந்தார். அவர்தான் சாக்ஷிக்கு சக்கர நாற்காலியில் இருந்து கூடை பந்து விளையாட பரிந்துரைத்தார்.
 
சாக்ஷிக்கு இது பிடித்திருந்த போதும், உத்தராகண்ட் மாநிலத்தில் இந்த விளையாட்டு குழுமம் இருக்கவில்லை. அதனால் 2018ம் ஆண்டு மும்பை நகருக்கு குடி பெயர்ந்தார். அங்கு விளையாட்டில் நன்கு பயிற்சியும் பெற்றார். தமிழ்நாட்டில் நடந்த ஐந்தாவது தேசிய போட்டியிலும், 2019ம் ஆண்டு மொஹாலியில் நடந்த ஆறாவது தேசிய போட்டியிலும் பங்கேற்று, அவர் குழு தங்க பதக்கத்தையும் வென்றது. 2019ம் ஆண்டு தேசிய சக்கர நாற்காலி கூடை பந்து குழுமத்தில் தேர்ந்தெடுக்க பட்டு, தாய்லாந்து நாட்டில் நடந்த Asia Oceania Championships போட்டியில் பங்கேற்றார். விளையாட்டு வீரராக, பல முறை தனித்தே நாடு முழுவதும் பயணித்திருக்கிறார்.
 
2020ம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத்தில் நடக்க இருந்த பயிற்சி முகாமில் பங்கேற்க இருந்தார். ஆனால் கொரோனா காரணமாக நாடெங்கும் ஊரடைப்பு வந்து விட்டது. அதனால் ரிஷிகேஷ் நகருக்கு தன் குடும்பத்துடன் இருக்க திரும்பி வந்தார். அப்போது டேரா டூனில் உள்ள DAV PG College கல்லூரியில் சேர்ந்து 2022ம் ஆண்டு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பட்டம் பெற்றார். ஊரடங்கின் போது பயிற்சி மையங்கள் மூடப் பட்டிருந்ததால், இவரை போன்ற விளையாட்டு வீரர்கள் பெரும் சோதனைக்கு உள்ளானார்கள். பயிற்சியின் பொது ஏற்பட்ட தோள் வலி அதிகாமாயிற்று. உடற்பயிற்சி (Physiotherapy) பயனளிக்காததால், அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்க பட்டது. பண செலவு அதிகமாகும் என்பது மட்டுமில்லாமல், இதற்கு டில்லி செல்ல வேண்டியதிருந்தது. அரசாங்க உதவி எதுவும் கிடைக்காததால், இதனை தள்ளிப் போட வேண்டி இருந்தது. இதனால் விளையாட்டிற்கு திரும்பும் அவர் கனவு சற்றே சிதைக்க பட்டுள்ளது. ஆனால் விடாமுயற்சியும், தன்னமிபிக்கையும் மிகுந்த இவர் தன் அறுவை சிகிச்சைக்கு போதிய நிதி உதவி கிடைத்தவுடன், அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, ஊனமுற்றோர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்க பதக்கம் வென்று கொடுப்பதை கனவாக கொண்டுள்ளார்.
 
இந்த ஊக்கமுள்ள இளம் பெண்மணி, NCPEDP (National Centre for Promotion of Employment for Disabled People) உதவித்தொகை பெற்றுள்ளார். இவர் "accessible tourism for PWD" என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செயகிறார். சுற்றுலா மையங்களை ஊனமுற்றவர்களுக்கு ஏதுவாக இருக்க வைப்பது எப்படி என்பதே இவர் ஆராய்ச்சியின் சாராம்சம். இந்த ஆராய்ச்சியில் ஊனமுற்றோர்களின் உரிமைகளை பற்றி Rights of Persons With Disabilities Act 2016 சட்டத்தை சார்ந்து, ஊனமுற்றோருக்கு ஏதுவான கட்டடங்களை பற்றி ஆராய்ச்சி செயகிறார். அவர் ஆராய்ச்சிக்காக டேரா டூனில் இருக்க வேண்டி இருப்பதால், வீட்டில் இருந்தவாரே பணி புரிகின்றார். ஊனமுற்றோர்களின் வேலை வாய்ப்புகளுக்காக செயல் படும் V-Shesh நிறுவனத்தின் டில்லி கிளையில் முழு நேர பணி அமர்த்துவராக (recruiter) பணி புரிகிறார்.
 
மிர்சா காலிப் மாற்றட்டும் நீட பாசில் இவர்களின் கவிதைகள் இவருக்கு மிகவும் விருப்பம். இவரே  கூட கவிதைகள் புனைகிறார். அவற்றில் ஒன்றில், தன் வாழ்க்கையை பற்றி சித்தரிக்கிறார்:
"கால் இழந்ததால் எனக்கு வருத்தம் இல்லை.
எனக்கு நடக்கு முடியாது, ஆதலால் வானில் பறக்க போகிறேன்
நான் ஊனமுற்றவள் இல்லை
நான் ஒரு பிரத்யேகமான, தனிப்பிறவி!"

புகைப்படங்கள்:

விக்கி ராய்