Icon to view photos in full screen

“எங்களுக்கும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஆசைகள் உண்டு. எங்களுக்கும் ஒரு வாழ்க்கை துணை தேவை”

எந்த குடும்பத்திலுமே “கடை குட்டியான” கடைசி குழந்தையே மிக செல்லம் அல்லவா! சென்னையை சேர்ந்த 39 வயதான ரூபா வைரப்ரகாஷ் (ரூபா ராஜேந்திரன்) கூட அப்படியே குடும்பத்தில் கடைசி குழந்தை. இவர் தூத்துக்குடியில் பிறந்தவர். இவர்  dwarfism  எனப்படும் வளர்ச்சி குறைவுடனும், முதுகெலும்பு பாதிக்கப்பட்டும் பிறந்தார். ஆனால் இவர் வாழ்வில் ஒரு முறை கூட தான் ஊனமுற்றவர் என்ற நினைப்பே இல்லாமல் வளர்ந்துள்ளார். “என் பெற்ற்றோர்கள் அவ்வளவாக படித்தவர்கள் இல்லை. ஆனால் அவர்களும், என்னுடைய நான்கு சகோதரர்களும், என் மீது பாசத்தையும், அன்பையும் குறை இல்லாமல், அபரிமிதமாக  பொழிந்தார்கள்.” என்று புன்னகை தவழ கூறினார். இவர்களுடைய வீட்டை ஊனமுற்றோர்களுக்கு ஏதுவாக மாற்ற வேண்டும் என்று ஒரு மருத்துவர் பரிந்துரைத்த போது ரூபாவின் தந்தை உடனே செயலில் இறங்கி, சரிவு பாதை (ramp) மற்றும் சில மாற்றங்களை செய்து, ரூபா நடமாட இலகுவாக இருக்குமாரு செய்தார். பெற்றோர்கள் இருவரும், ரூபாவின் உடல் மற்றும் சுகாதார தேவைகளை பார்த்து கொண்டு உதவினார்கள்.

தான் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறோம் என்று ரூபாவிற்கு மனக் குறை உண்டு. ஆயினும், தன் சகோதரர்களிடமிருந்து கணினி – முக்கியமாக இணையதளம் – பற்றி கற்றறிந்தார். மெதுமெதுவே சமூக வலைத் தளங்கள் மூலம் தன் பள்ளி நண்பர்களுடன் தொடர்ப்பு கொண்டார். அவர்கள் சென்னையில் நடத்திய சந்திப்பில் பங்கேற்று பதினைந்து ஆண்டுகளுக்கு பின் தன் நண்பர்களை சந்திப்பதில் பேருவகை கொண்டார்.

ரூபாவின் தாய்க்கு dementia நோய் இருப்பது கண்டுபிடிக்க பட்ட போது அந்த குடும்பமே நிலை குலைந்து போனது. “என் தாய் என்னை நன்றாக கவனித்து அன்பு ஊட்டி வளர்த்தார். அவர் இறக்கும் நாள் வரை என்னை குளிப்பாட்டி, தலை பின்னி அழகூட்டுவார்.” என்று ரூபா நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். தாயின் மறைவிற்கு பிறகு, வீட்டு பொறுப்புகளை எடுத்துக் கொண்டு, மளிகை வாங்குவது, வீட்டு வரவு செலவு கணக்குகளை நிர்வகிப்பது போன்ற பல பொறுப்புகளை ரூபாவே ஏற்றார். அவர் தந்தை அவரை நன்கு பராமரித்தாலும், அவருக்கு சுமையாக இருக்க கூடாது என்று தன் தேவைகளை பார்த்துக் கொள்ள, முதல் முதலாக ஒருவரை பணிக்கு அமர்த்தினார்.

தன்னுடைய சக்கர வண்டியை இணைய தளத்தில் விற்க முயன்ற போது, அத்ருஷ்ட வசமாக மோகன்ராஜ் ஈரோடு என்பவரை சந்தித்தார். மோகன் ரூபாவின் நெருங்கிய நண்பனாகவும், வழிகாட்டியாகவும் அமைந்தார். அவர் மூலம், ஊனமுற்ற பலரின் தொடர்பு ரூபாவிற்கு கிட்டியது. இந்த அரிய வாய்ப்பை பற்றி “அது வரை மற்ற ஊனங்களை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. சொல்லப் போனால் , நான் ஊனமுள்ள ஒருவரை கூட அதற்கு முன்னால் சந்தித்ததே இல்லை!” என்றார். 2018ம் ஆண்டு, ரூபாவும், மோகனும் சேர்ந்து “Yetram Trust” என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்கள். இதன் மூலம் Muscular Dystrophy என்ற தசைநார் தேய்வு நோய் உள்ளவர்களுக்கு மின்சக்கர நாற்காலிகளும், ஹோம்மியோபதி மருந்துகளும் வழங்க பட்டன.

2017ம் ஆண்டு ரூபாவிற்கு மிக அத்ருஷ்டமான ஆண்டு! அந்த ஆண்டில் ஒரு பிரபலமான தமிழ் பத்திரிகை அவரி நேர்காணல் செய்து வெளியிட்டது. அந்த பத்திரிகையாளர் ரூபாவின் தன்னம்பிக்கையையும் தைர்யதையும் கண்டு வியப்படைந்தார்.  இந்த நேர்காணலை சமூக வலைதளங்களில் பகிச்ந்து கொண்டதில், அவர் புகழ் மேலும் பரவியது. ஊக்கமளிக்கும் உரைகளை வழங்க அவருக்கு பல அழைப்புகள் வந்து குவிந்தன. முதன் முறையாக தனியே ஈரோடுக்கு காரில் செல்ல துணிச்சல் பெற்றார்.
அதே வருடத்தில் ஊனமுற்றோருக்கான “Boccia “ என்னும் ஊனமுற்றோர்களுக்காகவே பிரத்யேகமான விளையாட்டு போட்டியை பற்றி கேள்வி பட்டு அதில் பயிற்சியும் பெற்றார்.  என்னும் விளையாட்டை போல இதிலும் பந்தை வீச்ச வேண்டும். சென்னையில் பல மாதங்கள் கடும் பயிற்சி பெற்று, 2019ம் ஆண்டு அவரும், அவருடைய குழுவும், மாநில அளவில் பங்கேற்று, தேசிய அளவில் ஜல்லண்டர், பஞ்சாபில் நடந்த தேசிய போட்டியில் பங்கேற்று தங்க பதக்கத்தை வென்று வெற்றி வாகை சூடினார்கள்.

ஒரு நண்பர் அவரை modellingல் ஈர்ப்பு உள்ளதா என்று ஒரு முறை கேட்டார். “எனக்கு ஆடை அலங்காரங்கள் செய்த கொள்ள மிகவும் பிடிக்கும். அதனால் இதை ஏன் முயற்சி செய்து பார்க்க கூடாது என தோன்றியது” என கூறுகிறார். சாய்வு பாதையில் தன் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு செல்வதிலும், புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுப்பதும் அவருக்கு மிக இயற்கையாக வந்தன.  “நான் எந்த வாய்ப்பையும் நிராகரித்தது இல்லை!” என்கிறார். பங்கு சந்தை வியாபாரம் கூட சில நாட்கள் முயன்று பார்த்தார். ஆனால் அதில் மனச்சுமை அதிகமாக இருப்பதால் கை விட்டார்.

தன் தந்தையுடன் தனக்கு வாழ்க்கை துணை வேண்டும் என பேசியது அவர் வாழ்வின் ஒரு பெரிய திருப்புமுனை. “ஊனமுற்றோர் பலர் இதை பற்றி பேசவே தயங்குவார்கள். தன் குடும்பத்தினருடன் இதை பற்றி பேச பயப்படுவார்கள்.” என்கிறார். இவரோவெனில், இதில் முழு மூச்சுடன் செயல் பட தொடங்கினார். ஒரு மருத்துவரை அணுகி, திருமணம் செய்து கொள்ள தேவையான மருத்துவ பரிசோதனைகளை எடுத்து கொண்டு, மருத்துவ சான்றிதழ் ஒன்றையும் பெற்றார். கல்யாண இணைய தளம் ஒன்றில் பதிவு செய்து கொண்டார். சில காலங்களுக்கு ஒன்றும் முன்னேற்றம் இல்லை என்றாலும், ரூபா நம்பிக்கை இழக்கவில்லை. அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை! வஜ்ரப்ரகாஷ் என்பவரின் விவரங்கள் வந்தபோது, அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.  முதலில் நண்பர்களாக துவங்கி, பின்னர் ரூபாவின் உரைகளினால் வஜ்ரப்ரகாஷ் உந்தப் பட்டு அவரின் ஊனம் பற்றி நன்கு புரிந்து கொண்டார். . ஒரு வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் கலந்துரையாட துவங்கினார்கள். அதன் பிறகு 2020ம் வருடம் மார்ச் மாதம் திருமணம் புரிந்தார்கள்.

வஜ்ரப்ரகாஷ் ஒரு பயண நிறுவனத்தில் உதவி மேலாளராக பணி புரிகிறார். “என் பெற்றோர்கள் என்னிடம் அன்பு காட்டி பராமரிததை விட என் கணவர் என் மீது பாசமுடன் இருக்கிறார்” என்று மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும். சொன்னார் ரூபா.

புகைப்படங்கள்:

விக்கி ராய்