Icon to view photos in full screen

"இவள் எங்களுக்கு இறைவனால் அளிக்க பட்டவள். அதனால் அவளுக்காக எங்களால் முடிந்ததை செய்வோம்."

சந்தோஷ் பிரசாத் யாதவ், சரஸ்வதி திருமணம் புரிந்து கொண்டு 2012ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி சரியாக ஒரு வருடம் முடிவடைந்தது. அன்றுதான், அவர்களுக்கு ரோஹிணி என்னும் மகள் பிறந்தாள். சிக்கிம் மாநிலத்தில் காங்டாக் நகரில் உள்ள STNM Hospital என்னும் மருத்துவ மனையில் சுக பிரசவம் ஆனதால், 2 நாட்களிலேயே மருத்துவமனையில் இருந்து தாயும் சேயும் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராணிபோல் என்னும் தங்கள் ஊருக்கு வீடு திரும்பினார்கள். குழந்தை கருவில் இருக்கும்போதே மூளை பாதிப்பு ஏற்பட்டு Cerebral Palsy (CP) என்னும் மன வளர்ச்சி குன்றியதை 3 வருடங்கள் கழித்தே கண்டறியப்பட்டது.  இந்த தாக்குதலால் சதைகள், உடல் அசைவு, பேச்சு இவை எல்லாம் குழந்தைக்கு பாதிக்கப் பட்டன.
 
கல்வி அறியாதவர்களுக்கும், மருத்துவ வசதி இல்லாதவர்களுமான பெற்றோர்கள், குழந்தை மன வளர்ச்சி குன்றி இருப்பதை சரியாக உணர்வதே இல்லை. மருத்துவர்களும், நோய் என்னவென்று கண்டறிந்த பின்னும் கூட, பெற்றோர்களுக்கு சரியான விளக்கமோ பரிந்துரை அளிப்பதோ கிடையாது. தங்கள் குழந்தைக்கு ஏன் இம்மாதிரி பாதிப்பு ஏற்பட்டது என யோசிக்கும்போது சரியான பரிந்துரைகள் இல்லாததால் பெற்றோர்கள் ஏதேதோ கற்பனைகள் செய்து கொண்டு மூட நம்பிக்கையோடு தற்செயலாக நடப்பதை எல்லாம் வைத்து கொண்டு தாங்களே தவறான விளக்கங்களை தங்களுக்கே அளித்து கொண்டு துன்புறுகிறார்கள்.
 
பிஹார் மாநிலத்தின் சாப்ரா நகரிலிருந்து வரும் சந்தோஷ் 4ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார். அவர் மனைவி சரஸ்வதி மேற்கு வங்காள மாநிலத்திலிருந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் சிக்கிம் மாநிலத்திற்கு குடி பெயர்ந்தனர். சந்தோஷ் ஓர் ஜீப்பின் ஓட்டுனராக ரூபாய் 12,000 சம்பாதிக்கிறார். சரஸ்வதி இல்லத்தரசியாக மகள் ரோஹிணி, 9 வயதான மகன் அமித் மற்றும் 65 வயதான தன மாமியார் பார்வதியையும் பராமரிக்கிறார். ரோஹிணி பிறந்து ஆறு நாட்களில் மீண்டும் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு, 28 நாட்கள் தீவிர சிகிச்சை வார்டில் (ICU) இருந்ததாக இவர்கள் கூறினார்கள்.
 
குழந்தைக்கு ஆறு நாட்கள் ஆன போது, பிஹார் வழக்கங்களை பின்பற்றி "சட்டி பூஜை" என்னும் சடங்கை செய்ததை சரஸ்வதி வர்ணித்தார். இவரையும், குழந்தையையும் குளிப்பாட்டி இவர் கால்களுக்கும் கைகளுக்கும்'ஆல்டா' என்னும் சிவப்பு மை ஒன்றை பூசினார்கள். அப்போது வந்திருந்த ஒருவர், சரஸ்வதிக்கு நகங்களில் மை இட்டு பளபளப்பாக்குவது மட்டுமில்லாமல், குழந்தையின் நெற்றியில் ஒரு திலகமும் இட்டு விட்டார். இது நடந்து சில நிமிடங்களிலேயே குழந்தை நிறம் மாறி உடல் ஜில்லிட்டு போயிற்று. சரஸ்வதி இதனாலேயே குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டது என்றே முடிவு செய்து விட்டார்.     ஆனால் மருத்துவரோவெனில், இதை நிராகரித்து, மூளையின் பிற்பகுதியில் உள்ள ஓரிரு நரம்புகள் ஒன்றோடொன்று அழுத்தினதால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்று கூறினார்.
 
சந்தோஷ் ஒரு ஆயுர்வேத மருத்துவரை அணுகினார். அவர் ஒரு எண்ணையை கொடுத்து குழந்தைக்கு நன்கு தடவ சொன்னார். மேலும், விக்கல் வரும்போது குடிக்க மருந்தும் கொடுத்தார். சிலிகுரியில் உள்ள ஒரு மருத்துவர், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குன்றி இருப்பதாக கூறினார். கை கால்கள் மிருதுவாக இருக்க உடற்பயிற்சி (physiotherapy) எடுத்து கொள்ள பரிந்துரைத்தார்.
 
 குழந்தைக்கு மூன்று வயதானபோதே காங்டாக் நகரில் உள்ள Sikkim Manipal Institute மருத்துவ மனையில்தான் குழந்தைக்கு  Cerebral Palsy (CP) உள்ளது கண்டறிய பட்டது. உடற்பயிற்சி அளிக்க ஒவ்வொரு முறையும் ரூபாய் 300 செலவாயிற்று. இதை தவிர போக்குவரத்திற்கு மேலும் ரூபாய் 200 தேவை பட்டது. இந்த செலவை பொருட்படுத்தாமல், மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முயன்றனர். அப்போதும் மாற்றம் ஒன்று காணானததால் இந்த முயற்சியை கை விட்டனர். இந்த பயிற்சியை நடுவில் நிறுத்தினால், குழந்தைக்கு பாதிப்பு இன்னும் அதிகம் ஆகும் என்று யாரும் இவர்களுக்கு பரிந்துரைக்கவில்லை. மேலும் இந்த மாற்றம் வெளியில் தெரிய நீண்ட காலம் ஆகும் என்றும் யாரும் சொல்லவில்லை.
 
2017ம் ஆண்டு அம்பிகா சேதிரி ரோஹிணியை சந்தித்தார். (அம்பிகாவை பற்றி நாம் ஏற்கனவே இந்த கட்டுரைகளில் எழுதி இருக்கிறோம்.) ரோஹிணிக்கு ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்க அம்பிகா பேருதவி புரிந்தார். இதனால் ரோஹிணிக்கு சக்கர வண்டி இலவசமாக கிடைத்தது. அரசின் Biraspati Parsai school பள்ளியில் சேரவும் முடிந்தது. ரோஹிணி ஊனமுற்றவர் என்பதால், வீட்டிலேயே பாடம் கற்பிக்க ஒரு சிறப்பு ஆசிரியரையும் அடைய முடிந்தது. அம்பிகாவே ரோஹிணியின் பெற்றோர்களுக்கு, சைகை மொழியை பயன் படுத்த கற்று கொடுத்தார். மேலும் ரோஹினுக்கு, பேச முடியா விட்டாலும், பசி, தாகம், இயற்கை உபாதைகள் இவற்றை குறிப்பிட்ட ஓசைகள் எழுப்பி வெளிப்படுத்தவும் கற்றுக் கொடுத்தார். தான் சந்தித்தது முதல், ரோஹிணியிடம் பல முன்னேற்றங்களை காண்பதாக அம்பிகா கூறுகிறார். "அருகில் உள்ள பொருட்களை பிடித்து கொண்டு நிற்க முயல்வது, ஓசை வரும் திசையை நோக்கி பார்ப்பது, யாராவது பெயர் சொல்லி கூப்பிட்டால் அவர்களை பார்ப்பது [போன்ற பலவித மாறுதல்களையு நான் ரோஹிணியிடம் காண்கிறேன்." என்று அம்பிகா கூறுகிறார்.
 
2019ம் ஆண்டு அரசு நடத்தும் Composite Regional Centre for Skill Development, Rehabilitation and Empowerment of Persons with Disabilities என்னும் மையத்தில் உடற்பயிற்சி இலவசமாக பெறவும், அம்பிகா ஏற்பாடு செய்தார். நான்கு மாதங்களுக்கு முன்னால் அங்கிருந்த பயிற்சியாளர் வேலை ராஜினாமா செய்து போய் விட்டார். அந்த வேலைக்கு வேறு ஒருவரை இன்னும் நியமிக்க இல்லை என்பதால் இந்த பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டுள்ளது.
 
தன் அன்றாட தேவைகளுக்கு ரோஹிணி தன் தாயையே சார்ந்து இருக்கிறார். "இவள் எங்களுக்கு இறைவனால் அளிக்க பட்டவள். அதனால் அவளுக்காக எங்களால் முடிந்ததை கடைசி வரை செய்வோம்." என்று சரஸ்வதி கூறினார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்