Icon to view photos in full screen

“எனக்கு படிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. நடிகையாகவும், பாடகியாகவும் ஆக விரும்புகிறேன்”

லடாக் மாநிலத்தில் உள்ள லே நகரில் வசிக்கும் 22 வயதான ரிச்வானா பேச
தொடங்கினால் நிறுத்தவே மாட்டார்! பேச்சு சற்று குழறினாலும், வார்த்தைகள்
சரளமாக உற்சாகம் பொங்க வந்து கொண்டுதான் இருந்தன. “என்னை எப்போது
நேர்காணல் செய்ய போகிறீர்கள்? அடடா! நாளைதானா? ஏன் இன்றே இல்லை?
இன்றே இருக்கும் என்றல்லவா நினைத்தேன்? இப்போதே வைத்து கொள்ளலாமே?” என்று கேள்விகளை சரளமாக பொழிந்தார். அடுத்த நாள் நாங்கள் செல்வதற்கு முன்பே “ஏன் இன்னும் வரவில்லை?” என்று எங்களை தொலைபேசியில் கேட்டு, பிறகு நாங்கள் அங்கு வந்து சேர்ந்தவுடன், மறுபடியும் “Fashion shows களில் பங்கு பெற வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை. நான் நடனமாடுவேன்; நடிக்கவும் தெரியும். Instagramல் என் பதிவுகளையும், படங்களையும் பார்த்திருக்கிறீர்கள?” என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போனார்.

Dystonic cerebral palsy என்ற பாதிப்பு இருப்பவர்கள் தங்களுடைய தசைகள் தானாகவே அசைவதையும், சுருங்குவதையும் கட்டுபடுத்தவே முடியாது. ஆனால் இந்த பாதிப்பு உள்ள ரிச்வானா தன் உடல் அசைவுகளை நன்கு கட்டுபடுத்த பயின்றுள்ளார். லடாக்கில் உள்ள REWA Society என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஜெர்மனி நாட்டில் உள்ள Ladakh-Hilfe என்ற இன்னொரு தன்னார்வு தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து 2009 முதல் ரிச்வானாவின் படிப்பு மற்றும் சிகிச்சையில் பேருதவி செய்து வருகிறது.

தன் வீடியோக்களை பதிவு செய்வதற்கு முன்னால் தன்னுடைய சிகை அலங்காரம்
மற்றும் ஒப்பனைகளை தானே செய்து கொள்கிறார். கிட்டத்தட்ட 500 வீடியோக்கள்
என்ற @riswanasalam பெயரில் Instagramல் பதிவேற்றம் செய்துள்ளார். பாலிவுட்
பாட்டுக்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்ப தத்ரூபமாக உதடுகளை அசைத்து பதிவு
செய்து இருக்கிறார். இதை தவிர நடிக்கவும், பாட்டு பாடவும் இவருக்கு மிகவும்
விருப்பம்.

ரிச்வானாவின் தந்தை அப்துல் சலாம் அரசு பொது நல துறையில் பணி புரிபவர்.
தாயின் பெயர் டாஸ்லிமா. ரிஸ்வானாவிற்கு நான்கு மாதங்கள் ஆனபோது வளர்ச்சி
சரியாக இல்லாததை அவர்கள் உணர்ந்தார்கள். ஜம்முவில் உள்ள மருத்துவர் இவரை
பரிசோதித்து என்ன நோய் என்பதை கண்டறிந்தார். ஆனால் பெற்றோர்களுக்கு
அதை புரிந்து கொள்ள சற்று நேரம் பிடித்தது. “அவளுக்கு ஐந்து வயது ஆன

போதுதான் பேசவும், நாங்கள் சொல்வதை புரிந்து கொள்ளவும் தொடங்கினாள்”
என்று தன் மகளைப் பற்றி கூறினார் டாஸ்லிமா. உடல்நிலை காரணமாக பள்ளிக்கு
தொடந்து போக முடியாமல் போயிற்று. ஆனாலும் ஏழாம் வகுப்பு முடித்து
இருக்கிறார். பத்தாம் வகுப்பையும் முடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும்
“எனக்கு படிப்பில் ஆர்வமே இல்லை” என்று புன்னகையுடன் கூறுகிறார். அவர் மூத்த
சகோதரி பார்ஹானா புது டில்லியில் பணி புரிந்து வருகிறார்.

துறுதுறுப்பான இந்த இளம் பெண்ணுக்கு பள்ளி என்பதே கும்மாளம் அடிக்கும் இடம்!
முறையான கல்வி பாடங்கள், உடற்பயிற்சி சிகிச்சையுடன் தங்களை தாங்களே
பாதுகாக்கவும் பராமரித்து கொள்ளவும் பள்ளியில் கற்று தருகிறார்கள். இன்று
ரிச்வானா தன் தினசரி தேவைகள் அனைத்தையுமே முடிந்தவரை தானே பார்த்து
கொள்கிறார். ஒரு சில தனிப்பட்ட சுகாதார தேவைகளுக்கு மட்டுமே பிறர் உதவியை
நாடுகின்றார். அவரின் தாய்க்கு காய்கறி நறுக்கும் வேலையை கூட செய்து
கொடுக்கிறார். REWA அவருக்கு ஒரு சக்கர நாற்காலியை அளித்து உள்ளது.தன்
மகளின் முன்னேற்றத்தை கண்டு டாலிச்மா மிகவும் பெருமிதம் கொள்கிறார். அவர்
தன் மகளின் முதுகு, கை கால்களை வலுப்படுத்த பல பயிற்சிகளையும் கற்று
கொடுக்கிறார். குளிர் காலங்களில் உடல் விறைத்து போகிறது. அதனால் சூடாக
இருக்க விறகில் தீ மூட்டி வைக்கிறார்.

கொரோனா தொற்று வேறு விதமான பிரச்சனைகளை கிளப்பி உள்ளது. நோய்
தொற்றுகொள்வதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதால் தன் மருத்துவரை ஜம்மு
சென்று போக வேண்டாம் என்று பரிதுரைக்க பட்டது. கடந்து இரண்டு வருடங்களாக
மருத்துவரை பார்க்க கூட முடியவில்லை. தற்போது அந்த மருத்துவர் பெங்களூர்
நகரில் குடி பெயந்து விட்டார். அதனால் ரிஸ்வானாவிற்கு மருத்துவ கவனம்
கிடைக்கவில்லை.

தாய்க்கும் மகளுக்கும் மிகவும் எரிச்சலும் மன உளைச்சலும் ஏற்படுத்துவது என்ன
என்றால், அவர்களை சுற்றி இருப்பவர்கள், இவர்களின் காதில் படுமாறே “ஐயோ!
இவர்கள் சென்ற பிறவியில் என்ன பாவம் செய்தார்களோ இம்மாதிரி
இருக்கிறார்களே!” என்று ஏசுவதுதான். ஆனால் ரிச்வானா இதை வெறுமனே
பொறுத்து கொள்ளாமல், எசினவர்கள் முகத்திற்கு எதிரேயே “உங்களுக்கென்ன
ஆயிற்று!” என்று பதிலடி கொடுத்து விடுகிறார். “முன்பெல்லாம் இம்மாதிரி கூறினால்
நான் மனம் வெதும்பி மன உளைச்சலை அடைவேன். ஆனால் என் தந்தை
‘இம்மாதிரி மனதிலேயே வைத்துக்கொண்டு வெதும்பாமல், உணர்ச்சிகளை
வெளிப்படுத்திவிடு. மனதிலேயே அடைத்து வைத்து கொள்ளாதே!’ என்று கூறிய
உபதேசம் என் மனத்தில் பசு மரத்து ஆணி போல பதிந்துவிட்டது. இதையே REWA
விலும் மற்றவர்கள் ஏசுவதை எண்ணி கலக்கம் அடையாமல் தைர்யமாக பதிலடி
கொடுக்க கற்று கொடுத்து உள்ளார்கள். இம்மாதிரி உறுதியான, தெளிவான

மனப்பாங்கை உடைய ரிச்வானாவிடம் தகாத வார்த்தைகளையோ நடத்தையோ
காட்ட யாருக்கும் தைர்யமே வராது!

புகைப்படங்கள்:

விக்கி ராய்