Icon to view photos in full screen

"நான் ஒரு சான்றளிக்கப்பட்ட, தொழில்முறை சைகை மொழி மொழிபெயர்ப்பாளராக இருக்க விரும்புகிறேன்"

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கைச் சேர்ந்தவர் ரிதாஹுன் க்ரியாம் (34). அவள் தனது தந்தையை மிகவும் கொஞ்சமே நினைவில் வைத்திருக்கிறாள், அவளுடைய தாயும் இறந்தபோது அவளுக்கு ஐந்து வயது இருக்கலாம் என்று நினைக்கிறாள். இவர் தாய்வழி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது தாயின் மூத்த சகோதரி தர்சிலா க்ரியாம் மற்றும் அவரது மகள் ராணி மேரி க்ரியாம் ஆகியோர் அவரை கவனித்துக் கொண்டனர். 2016 ஆம் ஆண்டில் தர்சிலா இறந்த பிறகு, திருமணமாகாத ராணி மேரி அவருக்கு தாயானார்.
 
தான் வீட்டில் பிறந்தவள், பிறக்கும்போதே எந்த ஊனமும் இல்லை என்று அத்தை சொன்னதை ரிதாஹுன் நினைவு கூர்கிறார். கீழே விழுந்த பிறகு தனது இடது முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் நினைக்கிறார். பல்வேறு மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டதையும், சிகிச்சையின் ஒரு பகுதியாக காலில் மூங்கில் தண்டுகள் கட்டப்பட்ட நிலையில் தட்டையாக படுத்துக் கொண்டதையும் அவர் நினைவு கூர்கிறார். மதனூரில் உள்ள செயின்ட் பீட்டர் பள்ளி அவளுக்கு மகிழ்ச்சியான நினைவுகளை மீண்டும் கொண்டு வரவில்லை. கனமான பள்ளிப்பையை சுமந்தபடி நடப்பது கடினம் என்பதாலும், பொது வாகனத்திற்கு தினமும் ரூ.10 செலுத்துவது சாத்தியமில்லை என்பதாலும், அவரது உறவினர்கள் அவரை அங்கும் இங்கும் அழைத்து செல்வது வழக்கம். தனது பள்ளித் தோழர்கள் தன்னை கேலி செய்ததாகவும், தனது நடையை ஏசியதாகவும் அவர் கூறுகிறார். விளையாட்டு பயிற்சிகளில் அவள் சேர ஏங்கிய போதிலும், அவளை ஒரு மூலையில் உட்கார வைத்தனர். தனிமையில் அடிக்கடி அழுதாள்.
 
எட்டாம் வகுப்பில் ஹோலி சைல்டு பள்ளிக்கு மாறினார், ஆனால் இங்கும் அதே சவால்களை எதிர்கொண்டார். நீரிலிருந்து நிலத்தில் போடப்பட்ட மீன் போல தன்னை உணர்ந்த அவள் அங்கிருந்து வெளியேறினாள். அதிர்ஷ்டவசமாக, ரோய்லாங் வாழ்வாதார அகாடமியில் தொலைதூரத்தில் நடந்து செல்லும் உதவி உண்மையில் மிக அருகிலேயே இருந்தது. இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் பெத்தானியா சொசைட்டியின் ஒரு பகுதி ஆகும்.
 
பெத்தானியா சொசைட்டி ரிதாஹூனுக்கு தான் யார் என்பத உணர்ந்து சுய மரியாதை என்றால் என்ன அர்த்தம் என்ன என்பதற்கான முதல் சுவையைக் கொடுத்தது. இது அவருக்கு வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான திறன்களையும் வழங்கியது. ரோய்லாங்கில் காலையில் ஆங்கிலம் மற்றும் கணிதம் கற்றுக்கொண்டார், பிற்பகலில் கரும்பு நெய்வதில் தொழிற்பயிற்சி பெற்றார். கல்வி கற்பதில் மீண்டும் தொடர்பு கொள்ள முடிவு செய்த அவர், தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தின் மூலம் தனது பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதி முதல் பிரிவில் தேர்ச்சி பெற்றார் (அவரது பாடங்கள் ஆங்கிலம், கணினி, மனையியல், சமூக அறிவியல் மற்றும் பொருளாதாரம்). அடுத்து காது கேட்கும் கருவிகளை பொருத்தும் ஆறு மாத தொழில்நுட்பப் படிப்பை மேற்கொண்டார்; இது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் எளிய சோதனைகள் மூலம் கிராமங்களுக்குச் சென்று காது கேளாமை உள்ளவர்களை அடையாளம் காண தகுதி பெற்றது. பின்னர் ஃபெராண்டோ பேச்சு மற்றும் செவிப்புலன் மையத்தில் மூன்று மாத சைகை மொழி படிப்பை எடுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
 
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரிதாஹுன் முதல் முறையாக வெளிநாடு (ஜெனீவாவுக்கு) சென்றார்.  இவரும் மற்ற மூன்று மாற்றுத் திறனாளிகளும் பிரத்யேக்கின் நிறுவனர்-இயக்குநரும், குழந்தைகள் உரிமைகளுக்கான நைனிஸ்மைன் பிரச்சாரத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஸ்டீவ் டோம் ரோச்சாவுடன் சென்றனர். "எனது நல்ல நினைவுகளில் ஒன்று நான் கடைகளுக்கு சென்றது," என்று அவர் கூறுகிறார். "சாலைகள், கடைகள் என அனைத்தும் எவ்வளவு அணுகக்கூடியவை என்பதை நான் உணரவில்லை." இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தரமான கல்வி மற்றும் சுகாதார சேவைக்கான அணுகல் குறித்து விவாதிக்கப்பட்டது. ரிதாஹுன் ஒரு குழு உறுப்பினரின் சைகை மொழிபெயர்ப்பாளராக இருந்தார், மேலும் தனது சொந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். "எனது கலாச்சார நடனத்தைக் காட்ட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது," என்று அவர் நினைவு கூர்ந்தார். (பின்னர் அவர் 16 பேர் கொண்ட NINEISMIN குழுவுடன் நியூயார்க் சென்றார்.)
 
ரிதாஹுன் இப்போது ஊனமுற்றோர் பணியில் உறுதியாக பனி புரிகிறார். அவரது படுக்கையறை அலமாரியில் உள்ள ஒரு கோப்பை, அனைவரையும் உள்ளடக்கிய பந்தயத்தில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதைக் காட்டுகிறது. ஷில்லாங்கில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று அனைவரையும் உள்ளடக்கிய marathon போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம், ரிதாஹுன் சக்கர நாற்காலியில் பங்கேற்றார். 2013 ஆம் ஆண்டில் அவருக்கு வேலை மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மாற்றுத் திறனாளி ஸ்கூட்டர் நன்கொடையாக வழங்கப்பட்டது. பெத்தானி சொசைட்டியில் அவர் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் பணியாற்றுகிறார், மேலும் ஒரு சைகை மொழிபெயர்ப்பாளராகவும் உள்ளார். இருப்பினும், அவரது இலக்கு ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளராக இருக்க வேண்டும், இதற்காக அவர் இந்திய மறுவாழ்வு கவுன்சிலால் சான்றளிக்கப்பட்ட படிப்பை முடிக்க வேண்டும். இதற்கிடையில், அவரது கல்வி இலக்குகள் விரிவடைந்துள்ளன: அவர் திறந்த பல்கலைக்கழகமான இக்னோ (IGNOU) மூலம் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெறுகிறார்.
 
பலர் ரிதாஹூனிடம், உங்கள் காலுக்கு ஏன் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவள், "என்னால் நடக்க முடியும் வரை நடப்பேன்" என்றாள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நிதி ரீதியாக சுயாதீனமாக, யாரையும் சார்ந்து இருக்காமல், உள்ளார். தனது குடும்பத்தை ஆதரிக்கிறார், மேலும் ஊனமுற்ற சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு உதவுகிறார். அவளை மகிழ்விக்க இதைவிட வேறு என்ன வேண்டும்?


புகைப்படங்கள்:

விக்கி ராய்