Icon to view photos in full screen

"மற்றவர்களை விட நான் தாழ்ந்தவன் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. தோல்விகளை கண்டு நான் ஒரு போதும் துவண்டு போனதில்லை."

ராமஸ்வரூப்பிற்கு நான்கு வயது ஆனபோது கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டது. அவர் இதிலிருந்து மீண்டு பிழைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் இதிலிருந்து உயிர் பிழைத்தாலும், கால்கள் தங்கள் சக்தியை இழக்க தொடங்கின. அவர் பெற்றோர்கள் மருத்துவர்கள், கோவில்கள் என்று அலைந்தாலும், இன்று இவருக்கு ஒரு காலில் 70%ம், மற்றொரு காலில் 30% சக்தியுமே உள்ளது.
 
ஆனால் இந்த பாதிப்பு வாழ்க்கையை நன்கு வாழ்ந்து அனுபவிக்க ஒரு தடையாகவே இருக்கவில்லை. தற்போது 39 வயதாகி போபால் நகரில் வசிக்கும் இவருக்கு திருமணம் ஆகி, இவருக்கும், இவர் மனைவி ரஜினிக்கும் ஒரு வயதான குனால், ஏழு வயதான சுஹானி என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் வசிக்கும் இல்லத்தின் அருகிலேயே ஷாபுரா நகரில் இவர் பெற்றோர்களும், ஒரு இளைய சகோதரியும், சகோதரரும் வாழ்ந்து வருகிறார்கள். 12ம் வகுப்பு முடிந்தவுடன், இவர் உடற்பயிற்சியாளர் (physiotherapist) பயிற்சி பெற்றார். இவர் ஊனமுற்றோர்களுக்கு அரசு அளிக்கும் உதவி மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புது callipers மற்றும் ஊன்றுகோல்களை குறைந்த விலையில் வாங்கி பயன் படுத்தி நடக்கிறார். அரசு ரயில் பயணத்திற்கு அளிக்கும் அனைத்து சலுகைகளையும் செவ்வனே பயன் படுத்துகிறார். மேலும், பேருந்துகளில் பயணம் செய்தல், மாடிப்படிகள் ஏறுதல், தனக்காக பிரத்யேகமாக தயாரிக்க பட்ட கார், மற்றும் இரண்டு சக்கர வாகனம் இவற்றை பயன் படுத்துதல் போன்ற பலவற்றை செயகிறார். போபாலில் உள்ள Composite Regional Centre for Persons with Disabilities நிறுவனத்தில் இவருக்கு அளிக்கப்படும் physiotherapy பயிற்சியில் ஒரு பகுதியாக டில்லிக்கு தனியே பயணம் செய்தார்.
 
தந்தை இவரை படிக்க வைக்க கஷ்டப் பட்டாலும், தன்னுடைய ஊனம் வாழ்வில் சாதனைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்க கூடாது என்பதற்காக உடற் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினார். இன்று வேலை பளு அதிகமாக இருப்பினும், கடுமையான உடற் பயிற்சி செய்ய தவறுவதே இல்லை. ஒரு தனியார் நிறுவனத்தில், ஊனமுற்ற குழந்தைகளுக்கு உடற்பயிற்சி அளிக்கிறார். உடல் இயலாமையாலோ, சமூகத்தின் காழ்ப்புணர்ச்சியாலோ வெளியே வர முடியாதவர்களின் வீட்டுக்கு சென்று உடற் பயிற்சி அளிக்கிறார்.
 
ஒரு கால கட்டத்தில், உட்கார கஷ்டப்படும் cerebral palsy உள்ளவர்களுக்காக நாற்காலிகள் செய்யும் தொழிற்சாலையில் பணி புரிந்தார். இந்த தொழில் நுட்பங்களை நன்கு அறிந்து பின்னர் தாமே ஒரு நிறுவனம் தொடங்கி, இம்மாதிரி நாற்காலிகளை தேவைக்கு ஏற்ப வடிவமைத்து ஒரு தச்சன் மூலம் செய்து கொடுத்தார். பிற்காலத்தில், இம்மாதிரி நாற்காலிகள் நேரே கிடைப்பதால் வடிவமைத்து வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் இன்றும் கூட, யாராவது இவர் உதவியை நாடினால், இவரே நாற்காலிகளை வடிவமைத்து கொடுக்கிறார்.
 
தோல்விகளை கண்டு துவண்டுவிடக் கூடாது என்று அவர் திடமாக நம்புகிறார். மற்றவர்களை விட தாழ்ச்சியாக தன்னை ஒரு பொழுதும் எண்ணியதில்லை. இவர் ஸ்கூட்டர் மூன்று சக்கரங்களை உடையது. கார் automatic gears மற்றும் கையால் செயல்படுத்தும் brake கொண்டது. இம்மாதி மாற்றங்களை செய்ய முன்பெல்லாம் மிகவும் பணம் செலவாகும். ஏனென்றால் அப்போதெல்லாம் அனைத்தும் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது. ஆனால் தற்போது இவை எல்லாம் உள்ளூரிலேயே குறைந்த செலவிலேயே செய்ய முடிகிறது.
 
தன் திருமணம் “love-arranged” என்று கூறுகிறார். அதாவது, குடும்பங்களில் ஒப்புக் கொள்ளப் பட்ட காதல் திருமணம்! இவர் மனைவி, இவர் சகோதரியின் தோழி. இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் பிடித்து இருந்தது. அதனால் மணம் புரிய முடிவு எடுத்தார்கள். இவருடைய ஊனம் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. இவர் இளம் வயதில் இவரை எதிர்மறை எண்ணங்கள் கொண்ட பலரும் ஏசினார்கள். "இவனால் தன்னை தானே பராமரித்து கொள்ளகே கூட முடியாது." என்றெல்லாம் உதாசீனப் படுத்தினார்கள். ஆனால் தற்போது இம்மாதிரி ஏசியவர்களின் பிள்ளைகளை போலவே தானும் நன்றாக வாழ்வதாக பெருமிதத்துடன் கூறினார். தன் குடும்பத்தினர் யாரும் தன்னை தாழ்ச்சியாக பேசியதே இல்லை என்றும் கூறினார். இவரின் ஊனம் ஒரு சங்கடமான விஷயமாக கருதாமல், இவர் குடும்பத்தினர் முன்னேற்றத்தில் முழு ஒத்துழைப்பும் அளித்தார்கள்.
 
விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பயணம் செய்வது போன்ற பல கனவுகளை இவர் சாதித்திருக்கிறார்! தான் ஏதாவது இலக்கை அடைய வேண்டும் என்றால், தன் ஊனத்தை ஒரு பொருட்டாகவே கருதாமல், தன்னுடைய முழு கவனத்தையும் அதில் செலுத்தி, சாதித்து காட்டும் தன்னம்பிக்கையுடன் செயல் புரிகிறார். மற்றவர்களை போலவே தானும் வீட்டில் சமைப்பது, குழந்தைகளோடு விளையாடுவது போன்று சராசரி மனிதர்கள் செய்யும் அனைத்தையும் தானும் செய்வதாக கூறினார். ஊனமில்லாத பலரும் கூட ஒதுக்கப் பட்டு, வீட்டில் முடங்கி கிடைக்கும்போது தன் குடும்பத்தினர் தன்னை ஊக்குவித்து முன்னேற்றி இருக்கிறார்கள் என்பதை மிகவும் நன்றியுடன் விவரிக்கிறார். இதனால் இவர் எப்படி மிளிர்ந்து இருக்கிறார் என்று பாருங்கள்!

புகைப்படங்கள்:

விக்கி ராய்