Icon to view photos in full screen

"என்னுடைய முக்கிய கவலை பொருளாதார பாதுகாப்பு. என் குடும்பத்திற்கு பாரமாக இருக்க நான் விரும்பவில்லை."

டேரா டூன் நரகில் இருக்கும் 36 வயதான ராகேஷ் கோதியாலுக்கு ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் 2 தொலைபேசி அழைப்புகளாவது வருகின்றன. இந்த அழைப்புகள் வாழ்க்கையில் மிக மன உளைச்சலுக்கும்  மன அழுத்தத்திற்கும் ஆளாகி தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்த பலரிடமிருந்து வருகின்றன. இவர்கள் ராகேஷின் YouTube channel RKUnsungWarrior பார்த்து தங்கள் துயரங்களில் இருந்து மீண்டு, தைர்யம் பெற்றவர்கள், அல்லது பெற விரும்புவர்கள். ஒரு முறை விஷம் குடிக்க துணிந்த ஒருவர் இவரை கூப்பிட்டார். அம்மாதிரியான விபரீதமான முடிவை எடுப்பதை இவர் தன்னுடைய சாமர்த்தியமான பரிந்துரைகளாலும், பேச்சாலும் தடுத்து நிறுத்தினார். "நான் இம்மாதிரி அழைப்பவர்களிடம் நகைச்சுவையோடு பேசுவேன். அவர்களை முதலில் என்னுடன் சிரித்து நகையாடும்படி செய்வேன். பின்னர் என்னுடைய நிலைமையையும் எனக்கு இருக்கும் பிரச்சனைகளை பற்றியும் விளக்குவேன். என்னுடன் பேசிய பிறகு மனம் ஆறுதல் அடைந்ததாக பலர் எண்னிடம் கூறி உள்ளனர்" என்று கூறுகிறார்.
 
பக்கவாதத்தால் பாதிக்கப் பட்டு சக்கர நாற்காலியிலேயே இருக்கும் ராகேஷிடம் நகைச்சுவையுடன் பேச என்னதான் இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் 560க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ள இவருடைய YouTube channel RKUnsungWarrior என்ற பெயருக்கு ஏற்ப இவர் வாழ்க்கையில் துணிச்சலுடன் போராடுபவர். யாராலும் புரிந்து கொள்ள முடியாத, யாருக்கும் தெரியாத கடுமையான போர் களத்தில் போராடும் சிப்பாய் என்று தன்னை உருவகப் படுத்தி கொள்கிறார். தன்னுடைய நிலைமையில் இருந்து மாறவே முடியாது என்று தெரிந்திருந்தும் சுய பச்சாதாபமோ, கோபமோ இவர் அடைவதே இல்லை. "எனக்கு நிகழ்ந்தது யாருக்கு வேண்டுமானாலும் நிகழ்ந்து இருக்கலாம்" என்று சர்வ சாதாரணமாக கூறுகிறார்.
 
2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி நிகழ்ந்தது அந்த விபத்து. தன்னுடைய குடும்ப பண்ணையில் விதைகளை நட்டு தன்னுடைய இரு சக்கர வண்டியில் கிளம்பி இவர் தங்கி இருந்த கர்வால் நகரில் இருந்து ஸ்ரீநகர் நகரத்திற்கு மருத்துவ சோதனைக்கு பயணம் துவங்கினார். காவல் துறை வேலையில் சேர இதுவே கடைசி பரீட்சை. மாலை 4 மணிக்கு இவருடைய வண்டியும் ஒரு பெரிய truck கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அந்த truck கை ஓட்டியவர் விபத்து நேர்ந்த இடத்திலிருந்து ஓடி விட்டார். ராகேஷ் அணிந்திருந்த தலை கவசம் உயிரை காப்பாற்றியது. ஆனால் முதுகெலும்பு உடைந்து போனது. அறுவை சிகிச்சை நடந்து ஒரு இரும்பு தகடை மருத்துவர்கள் உள்ளே வைத்தனர். 3 நாட்கள் உயிரோடு இருப்பார் என்று அறிவித்தனர். அனால் 15 ஆண்டுகள் கழிந்தாலும் இன்னும் ராகேஷ் உயிரோடுதான் இருக்கிறார்!
 
டேராடூன் நகரில் மருத்துவ வசதி நன்கு இருப்பதால், அந்நகருக்கு இந்த குடும்பம் பெயர்ந்தது. இதனால் நிதி நிலைமை சற்று கடினமாகவே இருந்தது. ராகேஷின் தந்தை கோபால் ராம் (83) ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்றவர். அவருடைய ஒய்வு ஊதியம் மட்டுமே ராகேஷின் அறுவை சிகிச்சை, மருந்துகள், மருத்துவ மனையில் 2 மாதம் தங்க வேண்டியதால் செலவுகள், சக்கர நாற்காலி, உடற்பயிற்சி சிகிச்சை போன்றவைகளுக்கு போதவே போதாது. நண்பர்கள் சற்று நிதி உதவி செய்தனர். ராகேஷ் வெறுமனே ஒட்டகற்பவர்கள் உரிமம் (learner’s license) மட்டுமே வைத்திருந்தாலும், அவர் வண்டி காப்பீடு செய்யப் படாததாலும் இழப்பீடு எதுவும் கிடைக்கவில்லை.
 
"எப்படி நீங்கள் இந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து வெளி வந்தீர்கள்" என்று கேட்டதற்கு அவர் "என் குடும்பம் எனக்கு பேராதரவாக இருக்கிறது. அதைத் தவிர எனக்கு மன உறுதி மிக அதிகம்." என்று கூறினார். இவர் தம் தந்தை கோபால் ராம், தாய் சந்திரா தேவி (65), சகோதரி கீதா (32), சகோதரர் சாகர் (40) மற்றும் அவரின் குடும்பத்தினருடன் வசிக்கிறார். யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது என்பதால் தானே சாப்பிட, குளிக்க, கழிவு அரை செல்ல மற்றும் ஆடை அணிய தனக்கே உரிய பாணியில் பழக்கப் படுத்தி கொண்டிருக்கிறார். முதுகெலும்பு முறிவினால், சதைகளை அசைப்பது, கையில் எதையும் பிடிப்பது, வாயில் மென்னுவது , மலஜலம் கழிப்பது என்று அனைத்துமே மிக மிக கடினம். தம் ஆடைகளை அணிவதற்கு மட்டும் 20 நிமிடம் தேவை. ரொட்டியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மெல்ல வேண்டும், ஒரு துண்டு கீழே விழுந்தால் அதை குனிந்து எடுக்கவும் முடியாது.
 
தன்னுடைய எடையை மிகவும் அதிகமாகாமல் இருக்க மிக கவனமாக இருக்கிறார். அதே போல, சதை அசைவுகளையும் மிக கவனமாக பார்த்து கொள்கிறார். உடற்பயிற்சி சிகிச்சைகளை செய்ய கீதா இவருக்கு உதவுகிறார். தினமும் இரண்டு வேளை யோகா பயிற்சி, மற்றும் சுவாசம் விடுவதிலும் பயிற்சி செயகிறார். நண்பர்களிடமிருந்து பணம் கடன் வாங்கி தனக்கென ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி வாங்கி உள்ளார். இது இவருக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. மேலும் வாழ்க்கை திறனை நன்கு மிளிர செயகிறது. வீட்டு வேலைகள் சிலவற்றை செய்பது, மட்டுமில்லாமல், வெளியே சென்று மற்றவர்களுடன் பழகவும் முடிகிறது. R.K. Art and Craft Stationers என்று ஒரு கடையை நடத்தி வருகிறார். அந்த கடைக்கும் இந்த வண்டியிலேயே சென்று வருகிறார்.
 
ராகேஷ் B.A. முதல் ஆண்டு படிக்கும்போது விபத்து நேர்ந்தது. அதனால் வேலைக்கு செல்ல முயற்சிக்கவில்லை. சில நாட்கள் உடம்பு மிகவும் வலித்து சோர்ந்து போய் விடுவதால், தினமும் அலுவலகத்திற்கு செல்லும் வேலை இவருக்கு சரி படவில்லை. அரசாங்கத்திலிருந்து மாதம் 1500 ரூபாய் ஊனத்திற்கான மானியம் கிடைக்கிறது. மடிக்கணினி பயன் படுத்த பயின்றிருந்தும், வாங்க பண வசதி இல்லை. தற்போது காகிதம் முதலிய பொருள்களை மற்றும் விற்கும் தன்னுடைய சிறு கடையை விரிவாக்க வேண்டும் என்று விழைகிறார். தன்னுடை வயதான பெற்றோர்களுக்கோ, அல்லது உடன் பிறந்தவர்களுக்கோபாரமாக இருக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்.
 
தினமும் YouTubeஇல் தன்னுடைய விடீயோக்களை பதிவேற்றம் செய்து பலரை ஊக்குவிக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.


புகைப்படங்கள்:

விக்கி ராய்