Icon to view photos in full screen

"என் கிராமத்தில் சில்லறை கடை ஒன்றை நிறுவி, என் பெற்றோர்களுக்கு உதவ வேண்டும் என்பது என் ஆசை."

மேற்கு வங்காளத்தில் மேற்கு மேதின்புற் மாகாணத்தில் உள்ள கன்றுயி கிராமத்தில் நீல் கமல் சவு சைக்கிள் கடை ஒன்றை வைத்து இருந்தார். அவர் தன மனைவி அனிதா மற்றும் இளம் குழந்தை பூஜாவுடனும் தங்கி இருந்த வீட்டை ஒட்டியே அந்த கடை இருந்தது. ஒரு நாள் எரியும் ஊதுபத்தியின் சாம்பல் ஒரு பெட்ரோல் அண்டாவில் விழுந்து வெடிக்க அந்த கடையே பற்றி எரிந்தது. மேலும் இந்த தீ வீட்டையும் சூழ்ந்து கொண்டது. தீ அணைக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டிருந்தவர்கள், வீட்டின் உள்ளே படுத்திருந்த ஒரு வயது குழந்தை பூஜாவை பற்றி மறந்தே போனார்கள். இதனால் அந்த குழந்தையில் மென்மையான தோல் கருகி போனது.
 
அவர்கள் இருந்த கிராமத்தில் சிறு சிறு உபாதைகளை குணப் படுத்தவே மருத்துவ வசதி இருந்தது. அதனால் நீல் கமல் மற்றும் அனிதா பூஜாவை மேதினிபூரில் உள்ள அரசாங்க மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஒரு வாரம் தங்கி, அவரகள் கொடுத்த மருந்துகளை குழந்தையின் உடம்பில் தடவினார்கள். அதன் பிறகு கல்கத்தா நகருக்கு அழைத்து சென்று அங்கிருக்கும் Nil Ratan Sircar hospital என்னும் மருத்துவ மனையில் ஆறு மாதங்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதனால் இக்குடும்பத்திற்கு சொல்லொணா பண நெருக்கடி ஏற்பட்டது. வேறு வழி இல்லாமல் தங்கள் கிராமத்திற்கே திரும்பினார்கள். அங்கிருக்கும் உறவினர்களும், நண்பர்களும் "இந்த குழந்தையை நீங்கள் சாக விட்டிருக்க வேண்டும்.. இவள் நிலைமையில் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த பாரமாகவே இருப்பாள்." என்று சற்றும் கருணை இன்றி கடிந்து கொண்டார்கள்.
 
கடையில் வரும் வருமானம் போதாததால் நீல் கமல் கட்டை வண்டியில் கறிகாய்களை எடுத்துக் கொண்டு விற்க தொடங்கினார். மேலும் பூஜாவிற்கு மூன்று சகோதரிகள் -- பியூ , ப்ரியா , ப்ரீத்தி -- பிறந்தனர். இவ்ரகபால் பூஜாவை விட முறையே 4,6, 8 வருடங்கள் இளையவர்கள். அவர்கள் அந்த ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்ந்தார்கள். ஆனால் பூஜாவை மற்ற மாணவர்கள் வெறுத்து புறக்கணித்தனர். பூஜாவின் சேதப்பட்ட முகத்தை ஏசினார்கள். இதனால் பூஜாவிற்கு பள்ளி செல்லவே பிடிக்கவில்லை. "சிலருக்கு என்னை பார்த்தல் பயம் ஏற்பட்டது, சிலருக்கு வெறுப்பு ஏற்பட்டது. 'நீ உன் பூர்வ ஜென்மங்களில் நிறைய பாவம் செய்து இருக்கிறாய்.' என்றெல்லாம் சொல்லி பூஜாவின் மனதை மிகவும் புண் படுத்தினார்கள். தன் மகள் அனுபவிக்கும் கஷ்டங்களை பார்த்து, நீல் கமலும் மனம் வெறுத்து போனார். "நீ அழுதால் நானும் அழுது விடுவேன்" என்று உணர்ச்சியுடன் கூறுவார். பூஜாவிற்கு வாழ்க்கை முழுவதும் மிகுந்த உதவியாகவும், மிகவும் ஊக்கம் அளித்துவருவது தந்தை நீல் கமல் அவர்களே.
 
தற்போது தைரியமும் தன்னம்பிக்கையும் மிக்க 22 வயதான பூஜா கூறுகிறார்: "என் தந்தையே எனக்கு உறுதுணையாக இருக்கிறார். யாராவது என்னை பார்த்து 'இது உனக்கு வராது' என்று எதிர்மறையாக சொன்னால், என் மன உறுதி அதிகமாகி, அதை சாதித்தே காட்ட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகும். அதனால் அந்த காரியத்தில் இன்னும் ஆர்வமுடன் முயற்சி எடுப்பேன்." தான் 11ம் வகுப்பு படிக்கும்போது நேர்ந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்: அவர் இல்லத்தின் அருகே இருந்த ஒரு சிறுவன் இவரை பார்த்து 'உனக்கு சைக்கிள் ஓட்ட வரவே வராது' என எள்ளி நகையாடினான். மிகுந்த ரோஷத்துடன், தன்னுடைய தந்தையிடமிருந்து ஒரே நாளில் சைக்கிள் ஓட்ட கற்று கொண்டார். அந்த சிறுவன் சைக்கிள் ஓட்ட பல நாட்கள் ஆயிற்று!
 
நீல் கமல் சமையல் எரிவாயு நிறுவனத்தில் சேர்ந்து, அனிதாவும் அரசாங்க மருத்துவ மனையில் ஒரு சிற்றுண்டி கடையை நிறுவி நடத்த தொடங்கியபோது குடும்பத்தின் நிதி நிலைமை சற்று முன்னேறியது. வங்கி மற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி, தங்கள் சொந்த நிலத்தில் வீடு கட்டிக்கொண்டார்கள். தற்போது கடனை திருப்பி செலுத்தி வருகிறார்கள். பூஜா உயர்நிலை பள்ளி முடித்து விட்டு, மேற்கு மேதின்புற் மாகாணத்தில் உள்ள Belda College என்னும் கல்லூரியில் வங்காள மொழியில் பட்டப் படிப்பு சிறப்பாக முடித்தார். சில மாதங்கள் முன்னர் வரை பெங்களூரில் உள்ள Vindhya E-Infomedia நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார். ஆனால் இந்த வருமானத்தில் வீட்டிற்கு பணம் அனுப்ப முடியவில்லை என்பதால், வேலையை ராஜினாமா செய்தார். மேலும், கையில் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
 
நாங்கள் பூஜாவிடம் பேசும்போது, அவர் கன்றுயி கிராமத்தில் தன் தாயார் சிற்றுண்டி சாலை நடத்த உதவிக்கு கொண்டிருந்தார். மேற்கொள்ள இருக்கும் அறுவை சிகிச்சையில் தன்னுடைய கையில் உள்ள தேவையற்ற சதைகளை நீக்கி விடும் என்று நம்புகிறார். தீ விபத்தினால் கால்களில் உண்டான சேதத்தினால் இவருக்கு பல ஆண்டுகளாக காலணி அணியவே முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்னால் கால்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் தற்போது கால்களில் காலணி அணிய முடிகிறது.
 
தங்கள் கிராமத்தில் மளிகை பொருள்களோ அல்லது புடவைகளோ விற்கும் கடை ஒன்றை நிறுவ வேண்டும் என ஆசை கொண்டுள்ளார். இதற்கு கிட்ட தட்ட 2 லட்சம் ரூபாய் தேவை படுகிறது. இதை தவிர சகோதரி பியூவிற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கல்யாண செலவும் மலை போல எதிரில் பயங்கரமாக காட்சி தருகிறது. தன்னால் தன்னுடைய குடும்பத்திற்கு என்னென்ன உதவி செய்ய முடியுமோ அனைத்தையும் செய்ய பூஜா ஆவலுடன் இருக்கிறார்.


புகைப்படங்கள்:

விக்கி ராய்