Icon to view photos in full screen

“உன்னால் முடிந்த முயற்சிகளை சளைக்காமல் செய். மற்றதை இறைவன் பார்த்து கொள்வார்!”

பாட்ரிக் டி ’சௌசா  நகைச்சுவை ததும்ப  “சென்ற சான்றிதழில் 80 மதிப்பெண் வாங்கினேன். இப்போது அது 98 ஆக உயர்ந்துள்ளது!” என்று கூறினார். எதோ பரீட்சையில் மதிப்பெண்கள் உயர்ந்ததைப் பற்றி கூறுகிறார் என்று நாங்கள் நினைத்ததில் வியப்பு ஒன்று இல்லை அல்லவா! ஆனால் அவர் கூறியது ஊனமுற்றோர் சான்றிதழில் அவருடைய ஊனம் உயர்ந்துள்ளதை பற்றி! அவருக்கு Muscular Dystrophy (MD) என்னும் தசைநார் தேய்மானத்தில் தாக்கப் பட்டவர். அவரின் கைகள் மட்டுமே ஓரளவு செயல்படுகின்றன. மற்ற அங்கங்களை அசைக்க முடியவில்லை.
புத்திசாலியான இவர் ஒரு அரசாங்க ஊழியர். அவர் தற்போது “ராஜ்பாஷா சஞ்சலனலயா” என்னும் கொங்கிணி மொழி வளர்ப்பு துறையில் உயர் நிலை குமாஸ்தாவாக பணி புரிகிறார். மேலும் அரசாங்க வேலையிலேயே மேலாளராக உயர கோவா போது சேவை ஆணையம் நடத்தும் பரீட்சை இந்த வருடம் ஜனவரி மாதம் எழுதி உள்ளார். பள்ளியில் அவருக்கு படிப்பை விட விளையாட்டிலேயே ஆர்வம் அதிகம் இருந்தது. “நான் பள்ளியிலிருந்து மறைந்து மீண்டும் சேர்த்த ஓர் வினோதமானவன்!” என்று கூறுகிறார். அவரின் நகைச்சுவை மிக்க ஆனால் ஆழமான எல்லா கருத்துக்களை இந்த சிறிய கட்டுரையில் எழுதுவது மிக கடினம். ஆம்! அவரது வாழ்க்கை மிக சுவாரஸ்யமான வண்ணமயமான ஒன்று. அலுவலகத்தின் மிக தனித்தன்மையுடன், அனைவராலும் அணுகப்பட்ட, அனைவரும் அறிந்த முடி சூடா மன்னனாக திகழ்ந்தார்!
பாட்ரிக் தன் பத்தாவது வயதில் தன் தந்தையை இழந்தார். அப்போது முதல், அரசாங்க பள்ளியில் பணி புரியும் அவருடைய தாயே இவரை ஊக்குவிக்கும் முக்கிய காரணமாக இருக்கிண்டார். அவருக்கு 14 வயது ஆன போது அவர் நடையில் ஒரு மாற்றம் இருப்பதை அவர் தாயின் சகோதரர் உணந்தார். அப்போது அவர் கை எலும்பு முறிவு ஏற்பட்டபோது ஒரு எலும்பியல் நிபுணரிடம் சென்றார். அந்த நிபுணர் பாட்ரிக் கோவா மருத்துவ கல்லூரியில் (Goa Medical College  - GMC) கால்களை சோதனை செய்துகொள்ளுமாறு பரிந்துரைத்தார். அந்த மருத்தவமனையில் உள்ள நிபுணர் பற்பல மருத்துவ சோதனைகளை இரண்டு நாட்களுக்கு செய்தார். பின்னர் ஜூலியிடம் “நீங்கள் உறவினர்களுக்கு உள்ளேயே திருமணம் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார். ஜூலியும் தான் தன் அத்தை மகனையே மணம் புரிந்து கொண்டதாக கூறினார். சொந்தங்களிலேயே திருமணம் புரிந்து கொள்ளும் தம்பதிகளுக்கு இம்மாதிரி மரபியல் சார்ந்த பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு உள்ளதாக நினைத்து அந்த நிபுணர் பாட்ரிக் MDயால் தாக்க பட்டுள்ளார் என அறிவித்தார்.
பாட்ரிக் விளையாட்டுகளில் நன்றாகவே கலந்து கொண்டு இருந்ததால்முதலில் அவர் தாயும், கூடப் பிறந்தவர்களும் இந்த பாதிப்பின் தாக்கத்தை உணரவில்லை. பத்தாம் வகுப்பில்  மிக அதிகமான மதிப்பெண்களை பேரா விட்டாலும், கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து, டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை மிக ஆர்வமுடன் ஆடி வந்தார். ஆனால் நாட்பட நாட்பட, அவருடைய பலவீனமும், உடம்பின் எடையும் குறைந்து கொண்டே போயின. பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் ஹோட்டல் மேலாண்மை மற்றும் பராமரிப்பு கற்க வேண்டும் என்று மிக ஆவலுடன் இருந்தார். அப்போது முதல், இந்நாள் வரை சமையல் செய்வதில் உள்ள ஆர்வம் சற்றும் குறையவே இல்லை. பரிட்சையில் முதல் இடம் பெற்று சாதனை புரிந்தாலும், நேர்காணல் போது அவரின் கால்கள் சரியாக இல்லாததை நேர்காணல் செய்தவர் கவனித்து அதைப்பற்றி கேட்டார். பாட்ரிக் எவ்வளவு விளக்கியும், “சமையல் வேலையில் எட்டு முதல் பத்து மணி நேரம் நிற்க வேண்டும் என்பதால், மேஜையில் உட்கார்ந்து கொண்டே செய்யும் பணியே சிறந்தது என பரிந்துரைத்தனர்.
இதனால் பாட்ரிக் மிக மனமுடைந்து போனார். 12ம் வகுப்பில் வர்த்தகத்தில் படித்து தேர்ச்சி பெற்றாலும், கல்லூரியில் சேர்ந்த பின்பு படிப்பில் ஆர்வம் குறைந்து போயிற்று. பஞ்சிம் நகரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் கற்க சேர்ந்தார். அங்கே தங்க வசதியும், உணவும் இலவசமாக கிடைத்தது. ஆனால் கூடா நட்பு கிடைத்ததால் இதிலிருந்து விலகினார். இந்த கால கட்டத்தில் அவர் உடல் நிலை இன்னும் மோசமடைந்தது. அடிக்கடி கீழே விழ தொடங்கினார். தட்டச்சு கற்றுக் கொண்டார். ஒரு வருட கணினி பயிற்சியில் சேர்ந்து, அதை முடிக்க மூன்று வருடங்கள் எடுத்து கொண்டார். ஒரு பாதிரியாரிடமும், பிறகு ஒரு எழுது பொருட்கள் விற்கும் கடையிலும் மிகக் குறைவான சம்பளத்திற்கு பணி புரிந்தார். இந்த பணியின் போது ஒருவரிடம் காதல் மலர்ந்தாலும் அது மொட்டிலேயே கிள்ளி எறியப் பட்டது. அதன் பின்னர் மற்றொரு எழுது பொருட்கள் விற்கும் கடையில் வேலைக்கு சேர்ந்து வேலையின் நுணுக்கங்களை நன்கு கற்றறிந்தார். பின்னர் பட்டப் படிப்பை தொலைதூர கல்வி மூலம் பயில முடிவு எடுத்தார்.
ஊனமுற்றோர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அரசாங்க  வேலை கிடைக்க பெரு முயற்சி எடுத்து கொண்டார். ஜூலியும் பல பிரமுகர்களை சந்தித்து மன்றாடினார். பாட்ரிக் 20-25 நேர்காணல்களில் முயற்சி எடுத்தாலும், வெற்றி கிடைக்கவே இல்லை. 2008 ம் வருடம் மே மாதம்  ஒரு நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. அந்த நாள் அவர் பெற்றோர்களின் திருமண நாள். அதற்கு முன் தினம் இரவு வெகு நேரம் களிப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்ததால் நேர்காணல் செல்லவோ மற்றொரு தோல்வியை சந்திக்கவோ விரும்பவில்லை. ஆனால் அவர் தாயார் “என் திருமண நாளுக்கு பரிசாக இந்த நேர்காணலுக்கு சென்று வா” என்று கூறி அவரை ஊக்குவித்து, வற்புறுத்தி தன் சான்றிதழ்களை எடுத்துக்க் கொண்டு நேர்காணல் செல்ல வைத்தார். ஆகஸ்ட் மாதம் வேலையில் சேர அழைப்பு வந்தவுடன் அவர் அடைந்த வியப்பிற்கு அளவே இல்லை. 
காலப்போக்கில் தன் உடல் வலு இழந்து போவதை அவர் உணர்ந்தார். அதனால் 2012 ம் வருடம் செப்டம்பர் மாதம் முதல் சக்கர நாற்காலி பயன் படுத்த தொடங்கினார். இருந்தாலும் தன் அலுவலக வேலைகளை கவனிப்பதில் ஆர்வம் சற்றும் குறையவில்லை. இதனை பாராட்டி அவர் தாய் “உன்னுடைய மன உறுதியும், சவால்களை எதிர் கொள்ளும் திடமான மனதும், மிகவும் பாராட்ட தக்கது. எவ்வளவு ஏமாற்றங்களும் பயமும் இருந்தாலும், அவற்றை நன்கு மறைத்து போராடி வெற்றி கொள்கிறாய்” என ஊக்குவித்தார். இப்போது அவர் தன்னை பரமாரிக்க, தன்னை படுக்கையில் இருந்து எழுப்ப, கழிப்பறைக்கு அழைத்து செல்ல, குளிப்பாட்ட, ஆடை அணிவிக்க  என பல தினசரி தேவைகளில் உதவ ஒருவரை முழு நேரமும் பணியில் அமர்த்தி உள்ளார். பஞ்சிம் நகரில் தன் அலுவகவத்திலிருந்து நிமிட பயணத்திலேயே உள்ள அரசு குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார். சனி, ஞாயிறுகளில் மார்கோ நகருக்கு சென்று வருகிறார்.
இவ்வளவு இன்னல்களிடையே, சமையலில் இவருக்கு இருக்கும் ஈடுபாடும், ஆர்வமும், சற்றும் குறையவே இல்லை. “நான் செய்யும் ‘டால்’ போல வேறு யாரும் செய்ய முடியாது” என்று பெருமிதத்துடன் கூறுகிறார். இதை தவிர, கோவாவில் பிரபலமான Pork Vindaloo என்ற பன்றி இறைச்சி உணவையும், Chicken Cafreal என்கிற கோழி இறைச்சி உணவையும் மிக ஆர்வத்துடன் சமைக்கிறார். அவ்வப்போது அவருள் புதைந்து கிடக்கும் கவித் தன்மை வெளிப்படுகிறது. பிரபலமான ஒரு பாட்டை சற்றே மாற்றி
_“I really don’t mind the pain and tears once in a while,_
_ I will be where the lights are shining on me.”_
 என்று கவிதை புனைகிறார்!

புகைப்படங்கள்:

விக்கி ராய்