Icon to view photos in full screen

“கடுமையாக உழைப்பதே என் கடமை! இறைவன் இதன் பயனாக எனக்கு சரியான வாய்ப்புகளை அளிக்கிறான்.”

22 வயதான நிஷாத் குமார் தன் ஆறு அடி, நான்கு அங்குலம் உயரத்தில் மட்டுமல்ல,
தன் பரந்த மனப்பான்மையிலும் அனைவரையும் விட உயர்ந்து நிற்கிறார்! விக்கி ராய் அவரை நேர்காணல் செய்ய சென்றபோது அவர் 2020ல் டோக்யோ நகரில் நடந்த ஊனமுற்றோர்களுக்கான ஒலிம்பிக் (Paralympics) பந்தயத்தில் பதக்கம் வென்றவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுக் கொண்டு இருந்தார். இதற்கு பிறகு அவர் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள தன் சொந்த ஊரான பதான் என்ற இடத்திற்கு திரும்பினார். அப்போதே நாங்கள் அவரை நேர்காணல் செய்ய முடிந்தது.

அவர் நான்காம் வகுப்பு படிக்கும்போது பொம்மைகள் விற்க யாராவது வீதியில்
வந்தால், அவர்கள் பின்னே துருதுருப்புடன் ஓடி, அந்த வியாபாரிகளை நச்சரிப்பார்.ஒரு முறை, ஒரு பொம்மை வியாபாரி, அவரை துரத்த வேண்டும் என்ற எண்ணி, “உன் தாயார் உன்னை தேடி கொண்டு இருக்கிறார். சீக்கிரமாக வீட்டிற்கு போ!” என்று துரத்தி விட்டார். தன் தாய் தன்னிடம் என்ன பகிர்ந்து கொள்ள போகிறார் என்ற உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் சற்றே கண் மூடித் தனமாக தலை தெறிக்க நிஷாத் ஓடினார். எதிரே இருந்த வைக்கொல்களை வெட்டும் ரம்பம் ஒன்றின் மேல் மோதி. அந்த ரம்பம் அவர் கையில் வெட்டி ஆழமான காயம் ஒன்று ஏற்பட்டது. இதன் காரணமாக மணிக்கட்டு வரை கை துண்டிக்கப் பட்டது.

அந்த ஊரில் இருந்த அரசாங்க மருத்துவ மனை நிஷாதிற்கு முதலுதவி அளித்தது.
அவர் தந்தை ரஷ்பால் சிங்க் அவரை ஹோஷிரபூர் நகரில் உள்ள ஒரு தனியார்
மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்க முடிவு எடுத்தார். ஆனால் படுக்கைக்கு
தின வாடகையான நூறு ரூபாயை கூட கொடுக்க முடியாமல் திணறினார். அதன்
பிறகு மருந்து மாத்திரைகள் செலவுகளையும் சமாளிக்க மிகவும் பாடு பட்டார். இந்த
சோதனைகளில் இருந்து மீள நிஷாதிற்கு ஒரு வருடம் ஆயிற்று. இந்த ஒரு வருடம்
பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பள்ளி நினைவுகள் அவரை மகிழ்ச்சி அடைய
செய்கின்றன. ஒரு சைக்கிள் வாங்கி தர, அவர் குடும்பத்திற்கு போதிய நிதி வசதி
இல்லை. அதனால் நிஷாத், அவர் சகோதரி ரமா குமாரி, ஆப்த நண்பர் விஷால்,
அவன் சகோதரி மற்றும் உறவினர் என ஐவரும் ஒரே சைக்கிள் மேல் உட்கார்ந்து
கொண்டு பள்ளி செல்வார்கள்! நிஷாத் பத்தாம் வகுப்பு வந்த போது அவருடைய
ஆசிரியரே அவருக்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்தார்.

“பள்ளி விழாக்களில் அனைவருக்கும் முன்னிலையில் மாணவர்கள் தலைமை
ஆசிரியரிடம் இருந்து பதக்கங்களை பெறுவதை பார்க்கும் போது, நானும் ஒரு நாள்
அம்மாதிரி மேடையில் ஏறி பதக்கங்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம்
எனக்குள் மலர்ந்தது. இதனால் நான் விளையாட்டுகளில் கவனம் செலுத்த
தொடங்கினேன்” என்று நினைவு கூறுகிறார். அவர் தாயார் புஷ்பா குமாரி ஒரு
விளையாட்டு வீரர் என்பதால், அவருக்கு விளையாட்டுகளில் இயற்கையாகவே ஒரு
நாட்டம் உண்டு. மக்களிடையே நிஷாதின் ஊனத்தின் காரணமாக ஏற்பட்ட எதிர்மறை
கருத்துக்களை முறியடிக்க விளையாட்டே சிறந்த கருவியாக அமையும் என்று அவர்
தாய் நினைத்தால், அவரை விளையாட்டுகளில் சேர மிகவும் ஊக்குவித்தார்.

நிஷாத் முதல் முதலில் ப்ராக்பூர் நகரில் நடந்த விளையாட்டு பந்தயத்தில்
பங்கேற்றார். இதில் உயரம் தாண்டுவதில் முதல் இடம் பெற்றார். இந்த வெற்றியால்
ஊக்குவிக்கப்பட்டு இந்த துறையில் மேலும் கவனம் செலுத்தினார். மாவட்டம்,
மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் சிறப்பாக வென்றாலும், தேசிய
அளவில் பங்கேற்க முடியவில்லை. பள்ளிக்கு பிறகு, மற்றவர்கள் பற்பல படிப்புகளில்
நுழைந்தாலூம், இவர் நண்பர் விஷால் ராணுவத்தில் நுழைந்தார். நிஷாத் கூட
ராணுவத்தில் சேர விரும்பினாலும், அவரின் ஊனம் காரணமாக நிராகரிக்க பட்டார்.
“இறைவன் உனக்காக மேலும் உன்னதமான எதிர்காலத்தை அமைக்க திட்டமிட்டு
இருப்பார்” என்று அவர் தாய் கூறிய உணர்சிகரமான ஊக்குவிப்பால் உந்தப்பட்டு
செயல் புரிந்தார்.

உண்மையில் நிஷாதின் தாய் ஒரு தீர்க்கதரிசி! ஹரியானாவில் பஞ்ச்குலா நகரில்
உள்ள தாவு தேவி லால் விளையாட்டு அரங்கத்தில் நிஷாத்தின் உறவினர்
டென்னிஸ் விளையாட்டில் பயிற்சி பெற்று வந்தார். முதல் முதலில் அந்த
அரங்கத்தைப் பார்த்த போது ஏற்பட்ட மலைப்பையும் ஆச்சரியத்தையும் பற்றி
“இவ்வளவு பெரிய அரங்கத்தை நான் கண்டதே இல்லை!” என்று வியப்புடன்
கூறினார். அந்த உறவினர் இவருக்கு ஒரு விளையாட்டு பயிற்சியாளரை அறிமுகப்
படுத்தி வைத்தார். .நிஷாத்திற்கு அந்த விளையாட்டு பயிற்சியில் தேர்வு செய்யப்
பட்டது மட்டுமின்றி, அனைத்து செலவுகளுக்கும் பண உதவி கொடுக்கப்படும் என்று
அறிந்தவுடன், அவர் தாய் மிகவும் இன்புற்று ஆனந்த கண்ணீர் வடித்தார்.

முதலில் அந்த பயிற்சியில் பற்பல சோதனைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை தங்கும் இடத்தை மாற்ற வேண்டி இருந்தது. பல
நாட்கள் இலவச சாப்பாட்டுக்காக அருகில் இருந்த குருத்வாரவிற்கு செல்ல வேண்டி
இருந்தது. தூங்கக் கூட இடம் கிடைக்கவில்லை. இத்தனை சோதனைகளுக்கு
நடுவில், அவர் பயிற்சியாளர்களான நசீம் மற்றும் விக்ரம் என்பவர்கள் உதவி கரம்
நீட்டி, பணம் மற்றும் தேவைப்பட்ட உபகரணங்களை கொடுத்தல் போன்ற பேருதவி
செய்ததை நன்றி உணர்வுடன் நிஷாத் நினைவு கூர்ந்தார். கிராமப்புறத்தில் இருந்து
வந்த நிஷாத்திற்கு யார் வீட்டிலும் மாடுகள் இல்லாமல் வண்ண வண்ண
பாக்கெட்களில் பாலை வாங்குவது என்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது!

இந்த பயிற்சி முடிந்த உடன், அடுத்ததாக துபாய் நகரில் நடைபெற இருந்த World
Grand Prix போட்டிக்கு பாலகர் நகரில் நடந்த தேசிய பயிற்சி முகாமில் மூன்று
மாதங்களுக்கு பங்கேற்றார். பெங்களூரில் நடந்த தேர்வில் அவர் வெற்றி
பெறவில்லை என்றாலும், அப்போதுதான் தன் வாழ்வின் தெய்வமாக கருதும் தன்
எதிர்கால பயிற்சியாளரான சத்ய நாராயணா என்பவரை சந்தித்தார். சத்திய
நாராயணா நிஷாத்தின் திறமையில் அதீத நம்பிக்கை வைத்து, அவரை Olympic Gold
Quest (OGQ) போட்டிக்கு தேர்ச்சி பெற உதவினார். இதன் மூலம்
ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் Paralympics பந்தயத்தில் பங்கு பெற பயிற்சிகளில்
கலந்து கொண்டார்.

துபாய் நகரில் நடந்த World Para Athletics Championship போட்டியில் 2019 ம் ஆண்டு
வெண்கல பதக்கத்தையும், 2021ம் ஆண்டு தங்க பதக்கத்தையும் வென்றார்.
இதனிடையே 2020ம் ஆண்டு டோக்யோ நகரில் நடந்த Paralympics போட்டியில்,
உயர குதிக்கும் போட்டியில் 2.06 மீட்டர் குதித்து ஆசிய சாதனை புரிந்து வெள்ளி
பதக்கத்தை வென்றார். அடுத்ததாக 2022 ம் ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தயாராக உள்ளார்!

வீட்டில் இருக்கும்போது தந்தையுடன் கிரிக்கெட் விளையாடுவது, பஞ்சாப்
பாட்டுகளை கேட்பது என்பவைகளில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்