Icon to view photos in full screen

“நெசவுத்தொழில் கற்றுக் கொண்டிருக்காவிட்டால், நான் என்ன செய்திருப்பேனோ எனக்கே தெரியாது”

மருத்துவ வசதி இல்லாத கிராமங்களில் ஒருவருக்கு சாதாரணமாக வரும் கடும் காய்ச்சலுக்கும் கூட விபரீதமான விளைவுகளில் முடியலாம். இதற்கு மணிப்பூர் மாநிலத்தில் துன்க்தாம் கிராமத்தில் வாழும் நியான்காய்ஹெம் வாழ்வே ஒரு உதாரணம். 32 வயதான இவருக்கு காது கேளாமல் போனது மட்டுமல்லாமல், அவரின் தந்தையும் உயிரை இழந்தார்

நியான்காய்ஹெம் அவரின் பெற்றறோரின் ஐந்து பெண் குழந்தைகளில் மூத்தவர். அவருடைய தந்தை தொங் சொடோங் மற்றும் தாயார் கின் கான்சிங் அந்த கிராமத்தின் தலைவரின் நிலத்தில் நெல் விவசாயம் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருந்தினர். நியான்காய்ஹெம் ஒரு வயது இருக்கும்போது காது கேட்கும் வலிமையை இழந்தார். அந்த கிராமத்தில் இருந்த சூழ்நிலைகளாலும், அவர் குடும்பத்தின் ஏழ்மை காரணமாகவும், பள்ளி கல்வி அவருக்கு எட்டாக்கனியாக இருந்தது. அவருடைய சகோதரிகளும் கூட ஆரம்பப் பள்ளி முடிக்கவும் மிக கஷ்டப் பட்டார்கள். நியான்காய்ஹெம் தன் தந்தையுடன் வயல்வெளிக்கு செல்வார். ஆனால், துரத்ருஷ்ட வசமாக, அவரின் தந்தையும் 2006 வருடம் காலமானார். அதற்கு பிறகு நியான்காய்ஹெம் தன் சகோதரிகளை பராமரிக்க, அவரின் தாயார் வயலில் கடுமையாக உழைத்து பணம் ஈட்டினார். “என் தந்தை என்னிடம் மிக அன்புடனும், விசுவாசத்துடன் இருந்தார். ஒரு நாள் கூட என்னை கடிந்து பேசியது இல்லை!”, என உருக்கத்துடன் தன் மொழி பெயர்ப்பாளர் சங்கி மூலம் நினைவு கொள்கிறார்!
 
நியான்காய்ஹெம் நெசவுத்தொழிலில் மிகவும் நாட்டம் கொண்டிருந்தார். 2015 ம் ஆண்டு சர்வ தேச நிறுவனமான Christoffel Blinden Mission (CBM) துணையுடன் செயல்புரியும் Centre for Community Initiative (CCI) என்னும் தன்னார்வு தொண்டு நிறுவனம் நெய்தலில் அவருக்க உள்ள ஆர்வத்தை உணர்ந்து, அந்த திறமையை மேம்படுத்த பயிற்சி அளித்தனர்..
 
2016 அவருக்கு மறக்க முடியாத ஆண்டு! தன் வாழ்வில் உயர்ந்த சாதனைகள் படித்ததும் அந்த ஆண்டு. அதே ஆண்டில்தான் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் அவர் வாழ்வில் ஏற்பட்டது. தன் வாழ்வில் முதல் முறையாக கல்வி பயிற்சி பெற்றார்! நெசவுத் தொழில், செய்கை மொழி, மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு வாழ்க்கை நடத்த தொடர்பு திறன்கள் (communication skills), எல்லோருடனும் சுமுகமாக பழகும் (socialization) திறன், கணிதம், சுகாதாரம், உணவு பதப்படுத்தும் முறைகள் என இப்படி பற்பல திறன்களில்  CCI நிறுவனம் Malsawm Ability Resource Centre என்ற மையத்தின் மூலம் அவருக்கு பயிற்சி அளித்தது. இரண்டே மாதங்களில் நெசவுத் தொழிலில் அவர் அடைந்த முன்னேற்றத்தை மெச்சி, CCI அவருக்கு ஒரு கைத்தறி இயந்திரத்தை அளித்து வாழ்வாதாரம் ஈட்ட ஒரு பாதை அமைத்து கொடுத்தனர். மேலும் ஆறு மாதம் சென்றவுடன் CCI அவருக்கு ஒரு வங்கி கணக்கை துவக்கி, சற்று பெரிய தறியை வாடகைக்கு கொடுத்து அவரின் தங்கைகளுக்கும் உதவினார்கள்.
இவ்வளவு வெற்றி வாகைகளை சூடி, தன் கிராமத்துக்கு திரும்பி வர முடிவு செய்தபோது. அவர் தாயார் மன உளைச்சலையும் உடல் நலம் குறைவையும் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட செய்தி இடி போல தாக்கியது. அதற்கு பிறகு நியான்காய்ஹெம் தன் கிராமமான துன்க்தாம் செல்ல விழையவில்லை. இன்றும், தன் சகோதரியான நியாங்க்லியான்கிம் (கிம்) உடன், புன்க்மால் கிராமத்தில் ஒரு வாடகை வீட்டில் வாழ்கிறார். இரு சகோதரிகள், திருமணத்திற்கு பிறகு, அண்டைய கிராமங்களில் வசிக்கிறார்கள். அவருடைய கடைசி சகோதரி, தன்னுடைய மாமனுடன் வாழ்கிறார்.
ஒரு வாரத்தில் நியான்காய்ஹெம் இரண்டு (Puantens) என்னும் பெண்களின் பாரம்பரியம் மிக்க மேலாடைகளை நெய்து, அவற்றை தன் கிராமத்தில் உள்ள ஒரு கடைக்கு விற்று, அதனால் கிடைக்கும் வருமானத்தினால் வீட்டு வாடகை, மற்றும் மளிகை சாமான்களுக்கு ஆகும் செலவினை ஈடு கட்டுகிறார். இவர் தங்கை கிம் வாடகைக்கு எடுக்கப் பட்ட தறியின் மூலம் நெய்து பணம் ஈட்டுகிறார். “மக்களை சந்தித்து அவர்களுடன் அளவளாவ எனக்கு மிகவும் ஆசை. ஆனால் அவர்களுக்கு செய்கை மொழி புரியாததால் கடினமாகவே உள்ளது” என்கிறார் இவர்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்

வீடியோ:

சந்தன் கோமேஸ்