Icon to view photos in full screen

“நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல வீட்டில் இருக்க வேண்டும் என்று ஆசை படுக்கிறேன் என்று என் தாயிடம் அடிக்கடி சொல்லுவேன்”

மூன்று பெண்களுடன் – அதிலும் ஊனமுற்றவர் ஒருவர் – நகரின் வீதிகளிலேயே
வசிக்க வேண்டும் என்றால் எவ்வளவு கடினமானது! கொல்கத்தாவில் உள்ள
ஹேஸ்டிங் மேம்பாலத்தின் கீழ் ஒரு தற்காலிகமாக அமைக்கப் பட்ட ஒரு
குடிசையில்தான் 13 வயதான, காது கேளாத நச்ரீன் கடுன், தன் தந்தை ஷேக்
நசிருதீன் (35) தாய் சல்மா பீபீ (30), இளைய சகோதரிகள் நிக்ஹட் கடுன் (7), குல்சும்கடுன் (6) இவர்களுடன் பிறந்ததிலிருந்தே வாழ்ந்து வருகிறார்,

நசிருதீனின் ஆறாவது வயதிலேயே ஹோட்டல்களில் சிறு சிறு வேலைகளை
செய்துவந்த அவர் தந்தை காலமானார். அவர் தாயார் வீடுகளில் வீட்டு வேலைகள்
செய்து பணம் ஈட்டி, தன்னுடைய சகோதரருடன் வசித்து வருகிறார். நசிருதீன்
தையல் வேலையையும் செய்து பார்த்தார்; மேலும் பல ஊர்களில் அலைந்து, தினக்
கூலி வேலையிலும் பணி புரிந்தார். அவரின் இம்மாதிரி நாடோடி வாழ்க்கை
சல்மாவை மனம் புரிந்தபின் முடிந்தது. திருமணத்திற்கு பின், மேம்பாலத்தின்
கீழேயே வசிக்க தொண்டங்கினார்.

நாளடைவில் வீடுகளுக்கு வண்ணம் பூசும் தொழிலில் இறங்கி, இதிலேயே பணம்
ஈட்டவும் தொடங்கினார். அவ்வப்போது ஹேச்டிங்கில் உள்ள Fort William ராணுவ
தலைமை அலுவலகத்தில் இருந்து வண்ணம் பூச வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
“நானும், என் மனைவியும் பள்ளிக்கு சென்றதே கிடையாது. ஆனால் எங்கள்
குழந்தைகள் இம்மாதிரி ஆகக் கூடாது.” என்று கூறுகிறார். நச்ரீன் அருகில் உள்ள
அரசு பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். ஆனால்
கொரோனா தொற்றிற்கு பிறகு, பள்ளிகள் எல்லாம் மூடியே உள்ளன. பெற்றோர்கள்
அவளை படிப்பில் ஊக்குவிக்க முயற்சிகளை செய்து கொண்டு வருகிறார்கள்.
“அவளுக்கு தன் பெயரை ஆங்கிலம், வங்காளம் இரண்டு மொழிகளிலும் எழுத
தெரியும்” என அடிக்கடி கூறுகிறார். ஒரு தன்னார்வு தொண்டு இவ்விடங்களுக்கு
அவ்வப்போது வந்து கல்வி கற்று தருகிறது. நச்ரீன் இவைகளில் பங்கேற்கிறார்.

நச்ரீன் சிறு குழந்தையாக இருக்கும் போதே அவரின் காது கேளாமை கண்டு பிடிக்கப் பட்டது. இது ஏதோ குணப் படுத்தக் கூடிய நோய் என்று பெற்றோர்கள் மனக் கோட்டை கட்டி பல மருத்துவர்களிடம் அழைத்து சென்று பணத்தையும்,
நேரத்தையும் வீணாக்கினார்கள். யாரோ கூறிய அறிவரை படி, குழந்தையை
டில்லிக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் காட்டினார்கள். அந்த மருத்துவர்
குழந்தைக்கு காதுகேட்க உதவும் ஒரு கருவியை பொருத்தினால் காடு கேட்கும் என

பரிந்துரைத்தார். ஆனால் அந்த கருவியின் விலை மிக அதிகம் என்பதால் இதற்கு
செலவு செய்ய முடியவில்லை. சமீபத்தில் என்ற தன்னார்வு தொண்டு நிறுவனத்தில்
இருந்து ஒருவர் இவர்களுடன் தொடர்பு கொண்டு. இந்த வருட இறுதிக்குள்ள
இக்கருவியை வாங்க உதவி புரிவதாக வாக்களித்து உள்ளார்.

இக்கருவி பொருத்தப் பட்டால், நச்ரீனுக்கு பேசவும், காது கேட்கவும் இயலும் என்று அவர் தந்தை நம்பிக்கையுடன் இருக்கிறார். இதனால் பல பள்ளிக்கூடங்களை பார்த்து இருக்கிறார். எவ்வளவு தூரம் இருந்தாலும் தன் மகளை நல்ல பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்ல தயாராக உள்ளார். குடிசையில் இருப்பதால் தன் மகளின் பாதுகாப்பு பொருட்டு சல்மா அவளுடனே எப்போதும் வாழ்ந்து வருகிறார். “நச்ரீன் தாமும் குடிசையில் வாழாமல் ஒரு நல்ல வீட்டில் இருக்கவேண்டும் என்று தன் விருப்பத்தை தன் பிரத்யேகமான ‘தொடர்பு மொழி’யில் வெளிப்படுத்துகிறார்” என சல்மா கூறுகிறார். சல்மாவின் தாயார் வீடு நன்றாக இருக்கும். அது அவர் (சல்மாவின் தாயாரின்) தந்தை அரசாங்க வேலையில் இருக்கும்போது கிடைத்தது. அங்கே செண்டு தன் உறவினர்களுடன் விளையாட நச்ரீனுக்கு மிக விருப்பம்.

தற்போது இந்த குடும்பம் அதிக செலவு இல்லாத “சின்ன சின்ன இன்பங்களை”
அனுபவிக்கின்றனர். அவ்வப்போது நசீர் தன் ஊதியத்திலிருந்து சில தின்பண்டங்களை வாங்கி கொண்டு வருவார். அவைகளை அனைவரும் இன்பமாக பகிர்ந்து கொள்வார்கள். Salt Lake ல் நுழைவு கட்டணம் இல்லாத உள்ள பூங்காவில் சென்று விளையாடுவதும் நச்ரீனுக்கு மிகவும் பிடிக்கும். நசிர் ஒரு முறை ஹூக்ளி நதி கரையில் உள்ள Budge Budge என்ற இடத்திற்கு வேலை நிமித்தமாக நசிர் சென்றார். அந்த இடம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்றாவது ஒரு நாள் இங்கே ஒரு நிலம் வாங்கி, அங்கு வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப் படுகிறார்.

“எவ்வளவு சோதனைகள் இருப்பினும், இறை நம்பிக்கை குறையாமல், நச்ரீனுக்கு
நல்ல கல்வி புகட்ட எங்களால் முடிந்தவரை உழைப்போம்! ஊனமுற்ற
குழந்தைகளை உடைய அனைத்து பெற்றோகளும், இங்ஙனம் நம்பிக்கையுடனும்,
உற்சாகத்துடனும் வளர்க்க வேண்டும்” என்று சல்மா கூறுகிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்