Icon to view photos in full screen

“அவசரப்பட்டு முயற்சிகளை கை விட்டு விடாதீர்கள் – ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு திறக்கும்”

“நான் அமிதாப் பச்சனை சந்தித்த போது...” என்று தொடங்கினால், ஒரு கூட்டத்தில் எல்லோர் கவனத்தையும் ஈர்த்து விடலாம்!நரசிங் ராவ் போங்குராலா இந்த சூப்பர்ஸ்டாரை சந்திப்பதற்கு முன்னால் நடந்த சம்பவங்கள் ஒரு சுவையான திரைப்பட கதை!

ஹைதராபாத் நகரை சேர்ந்த 47 வயதான இவர் 12 வயது ஆன போது Muscular Dystrophy (MD) என்னும் தசைநார் தேய்வினால் பாதிக்கப் பட்டார். தற்போது இவர் இணைய தளங்களில் வரைபடங்களை வடிவமைப்பு (graphic designer )தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு திரைப்படங்கள் என்றாலே மிகவும் ஈடுபாடு. அதிலும் அமிதாப்பச்சநின் தீவிர ரசிகர்! 2016 ம் ஆண்டு 21 வயதான தன் மகன் சாய் மணிகண்டா தேஜா மூலம் “டீன்” என்னும் ஹிந்தி படத்திற்கு சுவரொட்டி / விளம்பர பலகை ஓவியம் ஒன்றை வடிவமைப்பு செய்ய “ “ என்ற Talenthouse India என்ற பன்னாட்டு நிறுவனம் நடத்தும் போட்டியைப் பற்றி அறிந்தார். இந்த போட்டியில் வெல்பவரின் சுவரொட்டிகளும், விளம்பர பலகைகளும் நாடெங்கும் வைக்கப் படும் என்பது மட்டும் இல்லாமல், “Big B” என அழைக்கப் படும் அமிதாப்பச்சனை மும்பையில் நேரே காண ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தனர்.  

இந்த போட்டிக்கு நரசிங் தன் வடிவமைப்புகளையும், ஓவியங்களையும் அனுப்பினார். இது வெற்றி பெற்ற 12 பேரில் தானும் உள்ளதாக என்பதை மின்னஞ்சல் மூலம் அறிந்தவுடன், அவரின் இன்பத்திற்கு அளவே இல்லை. சூப்பர்ஸ்டாருக்கு வேலை பளு அதிகமாக இருந்ததால், சந்திப்பிற்கு முன் அறிவிப்பு கொடுப்பது இயலாது, ஒரு நாள் முன்னமேதான் தெரியும். அதற்கு ஏற்றார்போல ஜூன் மதத்தில் ஒரு இரவு Talenthouse திடீர் என்று நரசிங்கை தொலை பேசியில் அழைத்து மும்பைக்கு அடுத்த நாள் காலை எட்டு மணி விமானத்தை பிடிக்குமாறு கூறினார்கள். நரசிங் சக்கர நாற்காலியை பயன் படுத்துபவர் என்றோ, அவரை பராமரிக்க சில அத்தியாவச்ய தேவைகள் உள்ளன என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. தனக்கு இருந்த ஊனத்தின் தீவிரத்தன்மையை விளக்கியவுடன், அவர்கள் நரசிங்கின் மனைவி ஜோதிக்கும் (38), மகனுக்கும் பயணச்சீட்டு அனுப்ப சம்மதித்தனர். மேலும் அவர்களை மும்பை விமான நிலையத்தில் சந்திப்பதாகவும் கூறினார்கள். 

அந்த எட்டு மணி Air India (AI) விமானம் கிளம்ப தாமதம் ஆகி விட்டது. அதனால் இந்த விமானத்தில் சென்றால் மதியம் மணிக்குள் சந்திப்பிற்கு செல்ல முடியாது என தெளிவாகியது. நரசிங் மிகவும் ஆதங்கத்துடன் அதிகாரிகளை சந்தித்து தன் இக்கட்டான நிலையையும், சரியான நேரத்தில் மும்பை செல்ல வேண்டிய அவசரத்தையும் தெளிவாக விளக்கினார். அவர் மேல் இரக்கம் கொண்டு, அவரையும், அவர் குடும்பத்தாரையும் துபாய் செல்லும் ஒரு தனியார் விமானத்தில் மும்பை பயணம் செய்விக்க ஏற்பாடு செய்தனர். ஆனால், நரசிங்கின் சக்கர நாற்காலியை எடுத்து செல் அனுமதி மறுத்தனர்! ஏனென்றால் அதில் பாட்டரி உள்ளத்தால், அவைகளி விமானத்தில் எடுத்து செல்ல என்பதே காரணம்! இன்றைய காலகட்டத்தில் இம்மாதிரி அநீதி நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால், அந்நாட்களில் ஊனமுற்றோல் உரிமைகள் சட்டம் (2016 Rights of Persons with Disabilities (RPwD) Act ) சட்டமாக்க பட்டு இரண்டே மாதங்கள்தான் கழிந்திருந்ததால், இதனை பற்றி யாருக்கும் விழிப்புணர்ச்சி இருக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராமல், நரசிங் உடனே சக்கரநாற்காலி தயாரிப்பாளரை தொலை பேசியில் அணுகி, அவர்களை வுடன் பேசச் சொல்லி பாட்டரியின் விவரக்குறிப்புகளை தெரியப் படுத்த வைத்தார். சரியான நேரத்தில் இதை செய்ததால், நரசிங், அவர் குடும்பத்தினருடனும், மற்றும் அவருடைய சக்கரநாற்காலியுடனும் அந்த விமானத்தில் பயணம் செய்தார்.

அந்த தனியார் விமானம் சரியான நேரத்திற்கு மும்பைக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அவரை சந்திக்க Talenthouse இல் இருந்து யாரும் அங்கே இருக்கவில்லை. அவர்கள் உள்நாட்டு முனையத்தில் காத்திருந்தனர். இவர் துபாய் செல்லும் விமானத்தில் வந்திருந்ததால் அந்த விமானம் சர்வதேச முனையத்தில் வந்து இரங்கி இருந்தது. அதானல் இவர் அவர்களை சந்திக்க முடியவில்லை. ஒரு வழியாக இந்த குழப்பங்களை எதிர்கொண்டு, எப்படியோ இருவரும் சந்தித்து அரங்கத்திற்கு சென்ற உடன் மற்றவை எல்லாம் சுமுகமாக முடிந்தது. அரங்கத்தின் மேடைக்கு செல்ல சாய்வு பாதை ஒன்று போடப்பட்டு இருந்தது. அங்கேயே நரசிங்கும் அவர் குடும்பத்தினரும் காத்திருந்தனர். அவர் பெயர் அழைக்கப் பட்டபோது உடனேயே தன் ஹீரோவை அணுக முடிந்தது. இப்படியாக தன் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாளாக அமைந்தது என்று கூறினார்!

இந்த சுவையான கதைக்கு ஒரு பின்குறிப்பு:: நரசிங்கின் பரிசு பெற்ற ஓவியம் எந்த சினிமா விளம்பர பலகையிலும் போட்டு வைக்கப் படவில்லை. ஏனென்றால் ஹைதராபாத் நகரில் இம்மாதிரி விளம்பர பலகைகள் எல்லாம் வாகனம் ஓட்டுபர்களுக்கு கவனச்சிதறல்கள் ஏற்படுத்துகின்றன என்பதால் தடை செய்ய பட்டு விட்டன.

நரசிங்கின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. MD என்பது நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் அவர் உடல் நிலையும், அசையும் மற்றும் நகரும் சக்தி குன்றிக் கொண்டே போனது. தொலை தூர கல்வி மூலம் உயர்நிலை பள்ளி முடித்த பிறகு ஆறு வருடங்கள் வீட்டிலேயே தொலைகாட்சிகளில் கிரிக்கெட் பார்ப்பது, புத்தகங்களும், கிரிக்கெட் பத்திரிகைகளையும் படிப்பது போன்ற செயல்பாடுகளில் காலத்தை தள்ளினார். ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய எல்லா மொழிகளும் அவருக்கு படிக்க தெரிந்திருந்தது. 23 வயதான போது அரசாங்கம் ஊனமுற்றோர் பொதுமக்கள் தொலைபேசி பேச ஏதுவான மையங்கள் (PCOs public telephone booths) அமைக்க உதவும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு மனு சமர்ப்பித்தார். அது கிடைத்தவுடன் ஒரு நாளைக்கு 40 முதல் 60 ரூபாய் வரை பணம் ஈட்டினார். அப்போது அவர் சகோதரர் ஒரு கணினியை (personal computer) வாங்கி இருந்தார். நரசிங் இதனால் மிகவும் ஈர்க்கப் பட்டார். அவர் அதில் விளயாடிக்கொண்டிருந்ததை பார்த்து இதை வைத்து கொண்டு கடிதங்கள் மற்றும் ஆவணங்களை தட்டச்சு செய்து பணம் ஈட்டலாம் என்று ஒரு நண்பர் பரிந்துரைத்தார்.

25 வயதான போது அவர் திருமணம் புரிந்து கொண்டார். தன் திறமைகளை மேம்படுத்தி கொள்ள என்னும் கணினி வைத்துக் கொண்டு புத்தகங்களை பதிப்பதை பற்றி (desktop publishing – DTP) ஒரு மாத பயிற்சியில் சேர விழைந்தார். அவரால் அந்த பாடம் நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாதலால் அவர் சகோதரர் அந்த பயிற்சியில் சேர்ந்து நரசிங்கிற்கு இதை சொல்லி கொடுத்தார். அதன் பின்னர் DTP யே அவரின் முக்கிய பணம் ஈட்டும் வழியாக அமைந்தது. காலப்போக்கில் அவர் இணையதளத்தில் புதிது புதிதாக வரும் அனைத்து தொழில் நுட்பங்களிலும் தேர்ச்சி பெற்றார். பத்திரிகைகள் தொடங்கி புத்தகங்கள் வரை அனைத்தையும் பதிப்பித்தார். 2003–2008 வருடங்களில் கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்களை பதிப்பித்தார். கடந்த 18 வருடங்களாக போன்ற துறைகளில் நன்கு தேர்ச்சி பெற்று பற்பல நிறுவனங்களுக்கு ஊனமுற்றோர்களுக்கு ஏதுவாக எப்படி வடிவமைப்பு செய்வது என்று பரிந்துரைக்கும் ஆலோசகராக செயல் புரிகிறார். “ஒரு வாய்ப்புமே இல்லாமல் இருந்த நிலையிலிருந்து நானே எனக்கு பல வாய்ப்புகளை உருவாக்கி கொண்டு இருக்கிறேன்.” என்று நியாயமான பெருமிதத்துடன் கூறுகிறார்.
 
இவர் அடுத்த முயற்சியாக நூறு பேருக்கு தனக்கு தெரிந்த பல தொழில் நுட்பங்களை முற்றிலும் இலவசமாக கற்று கொடுத்தார். 2013 முதல் கணினிகளை ஊனமுற்றோகள் பயன் படுத்தவும்,, சுற்று சுழல் ஊனமுற்றோர்களுக்கு ஏதுவாக இருக்கவும் யுக்திகளை வடிவமைத்து கொண்டு உள்ளார். இதற்காக WOW (Wonder on Wheels) என்னும் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனத்தையும் நிறுவி உள்ளார். இரண்டு வருடங்களாக ஊனுமுற்றோர் நலனுக்காக உழைப்பவர்களுவும், உரிமைகளுக்காகவும் தெலுங்கானா மாநில அரசின் விருதினை வென்று உள்ளார். . 
“ஊனம் என்றால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று என்ன வேண்டாம். நாம் எல்லோரும் சுயமாக நடமாட, பயணிக்க, வேலை செய்ய ஏதுவாக இருக்க எல்லா இடங்களையும் வடிவமைக்க வேண்டும்.” என்று கூறுகிறார் நரசிங்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்