Icon to view photos in full screen

"என் தந்தை என்னிடம் 'நீ ஊனமுற்றவர் என்று நினைத்துக் கொண்டிருக்காதே. உன்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்' என்று சொன்னார்,"

31 வயதாகும் மோனிகாவுக்கு குடும்பப் பெயர் இல்லாததற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவரது கணவர் பர்வீன் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது, பர்வீன் என்ற பெயரில் டஜன் கணக்கான மாணவர்கள் இருப்பதைக் கண்டறிந்த அவரது தந்தை, அவரை பர்வீன் ஜாதவ் என்று பெயர் கொடுத்து சேர்த்தார். பின்னர் அனைவரும் அவரை ஜாட் என்று அழைக்கத் தொடங்கினர், எனவே அவர் குடும்பப் பெயரைக் கைவிட்டார். 2013-ம் ஆண்டு மோனிகா அவரை திருமணம் செய்து கொண்டபோது, அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடிவு செய்தார்.
 
"எங்கள் ஆதார் அட்டைகளில் கூட எங்கள் முதல் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன", என்று மோனிகா எங்களிடம் கூறுகிறார். 40 வயது கணவருடன் அவர் பகிர்ந்து கொள்ளும் ஒரே குணம் இதுவல்ல. அவர்கள் இருவருக்கும் குழந்தை பருவத்தில் போலியோவால் ஏற்பட்ட இயக்க இயலாமை உள்ளது. இருவரும் ஊன்றுகோல் பயன்படுத்துகின்றனர். இருவருமே தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எங்களுடன் அரட்டை அடிக்கத் தயாராக இருந்த மகிழ்ச்சி பொங்கும் சிறந்த மனிதர்கள்.
 
மோனிகா காசியாபாத்தின் லோனி என்னும் இடத்தில்  பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை லெஹ்ரி சிங் ஒரு பேருந்து நடத்துனராகவும், தாய் கைலாஷ்வதி ஒரு இல்லத்தரசியாகவும் இருந்தனர் (அவர்கள் இப்போது உயிருடன் இல்லை). அவரது சகோதரி நிதிலதா மற்றும் சகோதரர்கள் சவுரவ் மற்றும் கௌரவ் ஆகியோருக்குப் பிறகு நான்காவது குழந்தையாக இருந்ததால் அவர்கள் அவளை நேசித்தனர். பிரகாஷ் மாடல் பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்த ஒரே ஊனமுற்ற குழந்தை. பள்ளிக்கூடம் அவள் வீட்டுக்குப் பின்புறம் இருந்தாலும் அவளை அங்கே அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஏழாம் வகுப்பில் ஒரு நாள் ஓட்டப்பந்தயத்தை முடிக்க முடியாததால் அழுது கொண்டே வீட்டிற்கு வந்ததாக அவர் நினைவு கூர்கிறார். மற்ற குழந்தைகள் அனைவரும் வேகமாக ஓடினர், அவள் மிகவும் பின்தங்கி விட்டாள். 'நான் ஊனமுற்றவள் , என்னால் ஒன்றும் செய்ய முடியாது' என்று நீயே சொல்லிக்கொண்டே இருக்க வேண்டாம். உன்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்." என்று அவளுடைய தந்தை அவளிடம் கூறினார்.
 
லெஹ்ரி சிங் மோனிகாவுக்கு ஒரு முன்னாதாரணமாக திகழ்கிறார். அவரை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார். அவர் தொடர்ந்து தன்னை ஊக்குவித்ததாகவும், படிப்பில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியதாகவும் அவர் கூறுகிறார். "பெற்றோர், உடன்பிறப்புகள் அல்லது செல்வம் எதுவும் உங்களுடன் இல்லை" என்று அவர் அவளிடம் சொல்வார். "அறிவு மட்டுமே எப்போதும் உன்னிடம் நிரந்தரமாக இருக்கும்."
 
திறந்தநிலைப் பள்ளி முறையான என்.ஐ.ஓ.எஸ் (NIOS) மூலம் 12 ஆம் வகுப்பை முடித்திருந்தாலும், தனது உடன்பிறப்புகளைப் போலவே மேலும் படிக்க தனது தந்தையின் வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற வருத்தத்தை அவர் உணர்கிறார்: நிதிலதா ஒரு வழக்கறிஞர், சவுரவ் ஒரு நிறுவனத்தில் பாதுகாவலராக இருக்கிறார், கவுரவ் உத்தரபிரதேச காவல்துறையில் உள்ளார்.
 
பர்வீனின் தந்தைக்கு எப்போதும் பர்வீனை போலவே அதே ஊனமுற்ற மணமகள் கிடைக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இது ஒரு சமமான சம்மந்தமாகவும், பொருத்தமாகவும் இருக்கும் என்று அவர் நம்பினார், இது எதிர்காலத்தில் தங்கள் மகள் ஒரு ஊனமுற்றவருடன் சுமையாக இருப்பதைப் பற்றி மாமியார் முணுமுணுப்பதைத் தடுக்கும். மோனிகாவின் சித்தப்பாவும், பர்வீனின் மைத்துனரும்தான் இவர்களது சம்மந்தத்திற்கு ஏற்பாடு செய்தனர். பர்வீன் பிறந்தது முதல், அவரது முழு குடும்பமும் புதுதில்லியில் உள்ள சாவித்ரி நகர் என்ற பகுதியில் வசித்து வருகிறது.
 
 
மோனிகாவைச் சந்திக்க பர்வீன் லோனிக்குச் சென்றார், அவர்களின் முதல் உரையாடல் நடைமுறை சிக்கல்களை மையமாகக் கொண்டது: "நாங்கள் இருவரும் ஊனமுற்றவர்கள்; வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ய முடியுமா?" என்று விவாதித்து தங்களால் முடியும் என்று முடிவு செய்து, கொண்டாட்ட இனிப்புகள் உடனடியாக விநியோகிதார்கள். பர்வீன் நகைச்சுவையாக கூறுகிறார்: "அவள் மிகவும் அழகாக இருந்தாள், நான் உடனடியாக என் பெற்றோருக்கு ஆம் என்று சொன்னேன், ஆனால் அவள் அதன் பிறகு கொஞ்சம் எடையை அதிகரித்திருக்கிறாள்!" ஒருவருக்கொருவர் தொலைபேசியில் பேசத் தொடங்கினர்; நிச்சயதார்த்தத்திற்கு முன்பே பர்வீன் மோனிகாவுக்கு ஒரு தொலைபேசியை பரிசளித்தார். திருமணத்திற்குப் பிறகு அவர் அவளுக்கு ஒரு ஊன்றுகோலையும் வாங்கினார் (அதுவரை அவள் நடமாட்ட உதவியைப் பயன்படுத்தவில்லை).
 
பர்வீன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கேபிள் ஆபரேட்டராக இருந்து வருகிறார். "நான் முழு நிகழ்ச்சியையும் நடத்துகிறேன், கேபிள் சேவைகளை வழங்குவதற்காக அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்கிறேன்," என்று அவர் கூறுகிறார். மோனிகா மாற்றுத் திறனாளிகளுக்காக செயல்படும் சர்தக் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் மூன்று மாத, ஆன்லைன், தொழில் திறன் பயிற்சி வகுப்பை பயின்று வருகிறார்; அதை முடித்த பிறகு வேலை கிடைக்கும் என்று நம்புகிறார். இந்த தம்பதியின் மகன் யதர்த் (8) அருகில் உள்ள சிராக் டெல்லி பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். "நான் அவனுக்கு கணிதம் கற்பிக்கிறேன், மேலும் அவன் இந்த பாடத்தில் தன் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறான்" என்று மோனிகா கூறுகிறார். யதர்த் கிரிக்கெட் விளையாடுவதை ரசிக்கிறார், மதிய உணவு நேரத்தில் தனது டிபன் பாக்ஸைத் திறக்கும்போது மோனிகா சாண்ட்விச் பேக் செய்திருந்தால் அவர் ஜாக்பாட் அடித்திருப்பார் என்பது அவருக்குத் தெரியும்! "பஹுத் ஹசீ மசாக்" (நிறைய சிரிப்பு மற்றும் கிண்டல்) மூலம் தனது மனைவி எப்போதும் தன்னை நல்ல மனநிலையில் வைத்திருப்பதாக பர்வீன் கூறுகிறார்.
 
வீட்டை சுத்தம் செய்யும் போது பாடல்களைக் கேட்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறும் மோனிகா, "லாட்லா" என்ற இந்தி திரைப்படத்தின் "தேரி உங்லி பகாட் கே மெயின் சாலா" (நான் உங்கள் விரலைப் பிடித்துக் கொண்டு நடந்தேன்) என்பதே அவருக்கு மிகவும் பிடித்தமான பாட்டு. படத்தில் வரும் ஹீரோவின் அம்மா சக்கர நாற்காலி பயன்படுத்துபவர் என்பது தற்செயலானது அல்ல...

புகைப்படங்கள்:

விக்கி ராய்