Icon to view photos in full screen

"வாழ்க்கை கடினமாக இருக்கும்போது, உட்கார்ந்து யோசித்து கவனிக்க முயற்சிக்கவும். எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்வினை தேவையில்லை."

சமையலறைக் கத்தியால் கட்டை விரலில் குத்தினால் சராசரி மனிதனால் பல எளிய செயல்களைக் கூட செய்ய முடியாது. நீங்கள் ஒரு சாவியைத் திருப்பவோ அல்லது கதவைத் திறக்கவோ, வெங்காயத்தை துண்டுகளாக்கவோ அல்லது மாவை பிசையவோ முயற்சிக்கும்போது, ஒவ்வொரு விரலும் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் வேதனையுடன் உணர்வீர்கள். நிச்சயமாக, உங்கள் உடல் அதன் எந்த பாகங்களின் செயல்பாட்டையும் இழக்க கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு ஈடு செய்ய நீண்ட நேரமும் கடுமையான பயிற்சியும் தேவை.
 
விஜயவாடாவைச் சேர்ந்த மோஹித் மஜேதி (23) பத்து விரல்களுக்குப் பதிலாக நான்கே நான்கு விரல்களுடன் பிறந்தார். சிறுவனாக இருந்தபோது எழுத பென்சில் வைத்திருப்பது, ஷூலேஸ் (shoelaces) கட்டுவது, சட்டையில் பொத்தான் போர்த்து கொள்வது, விரல்களால் சாப்பிடுவது போன்ற தனது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள சிரமப்பட்டார். அவர் தனது பதின்ம வயதிற்குள் நுழைந்தபோது சிறந்த மோட்டார் திறன்கள் தேவைப்படும் கேரம் போன்ற விளையாட்டுகளைத் தவிர்த்தார். வயதாகும்போது அவரது உடல் தகவமைத்துக் கொள்ளக் கற்றுக் கொண்டாலும், பிற்கால வாழ்க்கையிலும் சவால்கள் இருந்தன. அவரது பொறியியல் படிப்பில் (அவரது பாடம் இன்ஸ்ட்ருமென்டேஷன் Instrumentation) மின்சுற்றுகளை உருவாக்கும் போது கம்பிகளை உரித்து இணைப்பது மற்றும் கருவிகளைப் பயன்படுத்துவது கடினம். இன்றும் கூட, ஜிம்மில் பளு தூக்கும்போது, அவரது கைகள் வலுவாக இருந்தாலும், அவரது விரல்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டி எடைகளை தூக்க முடியாது.
 
ஆனால் அவரது இயலாமையிலிருந்து கவனத்தைத் திருப்பி, அவரது பல திறன்களை வெளிக்கொணர்ந்த அக்கறையுள்ள வீட்டுச் சூழலை நோக்க வேண்டும். மளிகைக் கடை நடத்தி வரும் ராஜா மஜேட்டி (52) மற்றும் ராதிகா மஜேத்தி (47) ஆகியோருக்கு மகனாகப் பிறந்த மோஹித் மற்றும் அவரது சகோதரர் கார்த்திகேயன் ஆகியோர் ராஜாவின் அண்ணன் மற்றும் குடும்பத்தை உள்ளடக்கிய 10 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். நண்பர்கள் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஒரு குழந்தை பருவத்தை நினைவு கூறும் மோஹித், தனது மாமாவின் குடும்பத்தினர் தனது அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளித்து ஊக்குவித்ததாகவும், அதே நேரத்தில் அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் தனது இயலாமையை சமாளிக்க உதவுவதில் நிறைய நேரம் செலவிட்டதாகவும் கூறுகிறார்.
 
2016 ஆம் ஆண்டில் மோஹித் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார், இது அவரை ஐ.ஐ.டி கரக்பூரில் சேர்த்தது. இங்குதான் அவரது சுய ஆய்வுப் பயணம் தொடங்கியது. முதலாமாண்டு கல்விச் சுமை குறைவாக இருந்ததால், கல்லூரி புகைப்படக் கழகமான 'கிளிக்கேஜிபி' (‘clickkgp’ ) யில் சேர்ந்து புகைப்படக் கண்காட்சிகளில் பங்கேற்று வருடாந்திர காலண்டர்களை உருவாக்கினார். அவர் தனது நான்காவது ஆண்டு படிப்பை எட்டியபோது அவர் திரைப்படம் எடுப்பதில் (videography) ஈடுபட்டிருந்தார்; அவரது யூடியூப் வீடியோக்களில் ஒன்று 160,000 பார்வைகளைப் பெற்றது!
 
தனது இரண்டாவது ஆண்டில், ஜிம்கானா கிளப்பின் ஊடக செயலாளராக, நிகழ்வுகளை உள்ளடக்கி வருடாந்திர செய்திமடலை வெளியிட உதவினார். ஆனால் தனது மூன்றாவது ஆண்டில்தான் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தொழில்முறை திறன் போட்டிகளான அபிலிம்பிக்ஸைக் (Abilympics") கண்டபோது அவர் தனது திறமையைக் கண்டறிந்து வெளிப்படுத்த முடிந்தது. கிழக்கு மண்டலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, இந்திய தேசிய அபிலிம்பிக் சங்கம் நடத்திய புகைப்பட போட்டியில் பங்கேற்று, 2018ல் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த ஆண்டு மே மாதம் மாஸ்கோவில் நடைபெறும் 10 வது சர்வதேச அபிலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த அவர் ஆர்வமாக உள்ளார்.
 
மோஹித்துக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். அவர் இமயமலைக்கு மலையேற்றம் மற்றும் பூட்டானுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளார், மேலும் இந்தியாவின் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய சாலை பயணங்கள் மற்றும் மலையேற்றங்களுக்கும் சென்றுள்ளார் - மேற்கு பிராந்தியம் அவரது பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளது. "புகைப்படம் எடுத்தல் மற்றும் பொறியியல் ஆகிய இரண்டு விருப்பங்களையும் தொடர முடிந்ததில் நான் அதிர்ஷ்டசாலி" என்று அவர் கூறுகிறார்.
 
2020 ஆம் ஆண்டில் அவர் ஒரு உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக சேர்ந்தார். ஆனால், அவரது கனவுகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தனக்கென ஒரு இடத்தை ஒதுக்க முடிந்துள்ள அவர், மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற விரைவில் புறப்படவுள்ளார், இருப்பினும் அவரது குடும்பம் அவரை வெளிநாட்டிற்கு அனுப்ப சற்று தயக்கம் காட்டுகிறது. அவரது தாய் அவருக்கு சொல்லும் ஒரே செய்தி, "நாடு உங்களுக்கு நிறைய கொடுத்துள்ளது. திரும்பி வந்து நாட்டுக்குத் திருப்பிக் கொடுங்கள்" என்றார். 
 
அவரது வாழ்க்கை மந்திரம் அவரது கணினி வால்பேப்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளது: "ஒருபோதும் முயற்சியை நிறுத்தாதீர்கள், நீங்கள் விழுந்தாலும் அல்லது எழுந்தாலும் அதைச் செய்யுங்கள்."

புகைப்படங்கள்:

விக்கி ராய்