Icon to view photos in full screen

“காலமே மிகச் சிறந்த மருந்து!”

நீங்கள் கராத்தேயில் இந்தியாவிற்கு பதக்கங்களை வென்று தரும் வீரராக இருக்கிறீர்கள். மிக முக்கியமான போட்டிக்கு சற்று முன்பு ஒரு ஒரு அறுவை சிகிச்சை காரணமாக மார்புக்கு கீழே அசைக்க கூட முடியாதபடி வாதம் உங்களை தாக்குகிறது! உங்கள் மன நிலை எப்படி இருக்கும்? சற்று யோசித்து பாருங்கள்!  இந்த பயங்கரமான, துரத்ருஷ்ட வசமான நிலையில்தான் 35 வயதான முகமது  ஷாம்ஸ் ஆலம் ஷேக் இருந்தார். ஆனால் காலப்போக்கில் இந்த நிலைமையில் இருந்து வெளி வந்து, சிறந்த நீச்சல் வீரராக உருவெடுத்து மறுபடியும் பதக்கங்களை வென்று குவித்தார்!

பீகாரின் மதுபானி மாவட்டத்தில் ராதோஸ் என்னும் கிராமத்தில் ஷாம்ஸ் பிறந்தார். அவருடைய தந்தை முகமது  நசீருக்கு  ஏழு உடன்பிறந்தவர்கள் இருந்தனர். உயர்நிலை பள்ளி கல்வி முடித்த நசீரே அவர்களில்  மிக்க படித்தவர். ஷாம்ஸ் ஆறு வயதில் மும்பையில் உள்ள பைகுல்லா என்னும் இடத்தில தன் ஆறாம் வயதில் பள்ளிக்கு சேர்ந்தார். அப்போது அவரின் இரண்டு மூத்த சகோதரர்கள் பதனிட்ட தோல்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். ஷாம்ஸ் பொறியியலில் முதலில் ஒரு டிப்ளோமாவும், பின்னர் B.E பட்டமும் பெற்றார்.

ஷாம்சுக்கு எப்போதுமே விளையாட்டில் மிக ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. மும்பையில் “கலரிபயட்டு” என்னும் தற்காப்பு சண்டை பயிற்சி கற்க விரும்பினார். ஆனால் அதை கற்று தர யாருமே கிடைக்கவில்லை. தன் பாட்டனார் போல தானும் மல்யுத்த வீரராக ஆக விரும்பினாலும், கடைசியில் கராத்தே கற்க முடிவு செய்து, நன்கு தேர்ச்சி பெற்று, “black belt” நிலை வரை சாதித்து, மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில் ஐம்பதற்கும் மேலான பதக்கங்களை வென்று குவித்தார்.

2010 ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராக இருக்கும்போது அவருடைய முதுகில் ஒரு கட்டி இருப்பது கண்டுபிடிக்க பட்டது. மருத்துவர் மிக்க நம்பிக்கையுடன் “இதற்கு அறுவை சிகிச்சை தேவை படுகிறது. ஆனால் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னமேயே குணமாகி விடுவீர்” என கூறினார். “நான் மருத்துவர் வார்த்தைகளை ஆண்டவன்  வார்த்தைகளை போல மதித்து, மிக நம்பிக்கையுடன் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்”. ஆனால், துரத்ருஷ்ட வசமாக, அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்தது. Paraplegia என்னும் வாதம் வந்து விட்டது
  
இரண்டு வருடங்களுக்கு அளவிட முடியாத ஏமாற்றமும் மன உளைச்சலும் அடைந்து மனம் ஒடிந்து போனார். அவருடைய கல்லூரி நண்பர்கள், கராத்தே சகாக்கள், குடும்பத்தினர்கள் – முக்கியமாக சகோதரியும், தாயும் மிகுந்த ஆதரவு அளித்து அவருக்கு உறுதுணையாக இருந்தனர். (அவர் தாய் இப்போது உயிரோடு இல்லை). Paraplegic Foundation என்னும் நிறுவனத்தின் வாதம் வந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் பயிற்சியில் இரண்டு ஊனமுற்ற விளையாட்டு வீரர்களை சந்தித்தார். இங்கிலீஷ் கால்வாயை (English Channel) முழுவதும் நீந்தின ராஜாராம் கர்க், பூப்பந்து, (badminton) மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்ற சத்யப்ரகாஷ் திவாரி என்பது இவர்களின் பெயர்கள். இந்த இருவரின் சாதனைகள் ஷாம்சுக்கு தானும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை அளித்தது. விளையாட்டு என்பது அவர் ரதத்தில் ஊறியது அல்லவா!

கராத்தே ஆகட்டும், நீச்சல் ஆகட்டும் – ஷாம்ஸ் பற்பல சாதனைகளை படைத்தார். கடலில் நீண்ட தூரம் நீந்திய ஊனமுற்றவர் என்ற சாதனையையும் படைத்தார். ஆனால் இவர் தாக்கம் பதக்கங்களையும், போட்டிகளையும் கடந்து நிற்கின்றன. ஊக்கமூட்டும் பேச்சாளர்களாக ஊனமுற்றோர் எளிதில் பயணிக்க உதவும் கட்டட அமைப்புகள் (accessibility) பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்த பெரு முயற்சி கொண்டுள்ளார். மும்பையில் மாவட்ட அளவில் ஊனமுற்றோர்களுக்கு விளையாட்டு பயிற்சி கழகம் அமைப்பதில் பெரும் பங்கு வகுத்தார். 2018ல் அமெரிக்க வெளியுறவு துறையும், டென்னசி பல்கலைகழகமும் இணைந்து நடத்திய “Global Sports Mentorship Program” எனப்படும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில் இந்தியாவில் ஊனமுற்றோர்களுக்கான விளையாட்டு வசதிகளை பற்றி அவருடைய சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.
 
2019ம் ஆண்டு குருக்ராமுக்கு குடி புகுந்த போது குறைந்த விலையில் சக்கர நாற்காலிகள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தார். இப்போது தன் 90 வயது தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். 90 வயதானாலும் அவர் தந்தை யோகா பயிற்சி செய்து மிக்க ஆரோக்யத்துடன் வாழ்கிறார். ஷாம்சுக்கு உடற் பயிற்சி செய்யவும் உதவுகிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்