Icon to view photos in full screen

“ஊனம் நம்மை தேவைக்கு ஏற்றார்போல மாற்றிக்கொள்ள உதவும்”

ஊக்கமும் உற்சாகமும் பொங்கும் 47 வயதான மேஜர் தேவேந்தர் பால் சிங்க் சண்டிகர் நகரை சேர்ந்தவர். இணைய தளத்தில் வீடியோ தொடர் ஒன்றை நடத்துகிறார். இதில் வாழ்க்கையில் சவால்களை சந்தித்து வெற்றி கண்ட முன்னாள் ராணுவ வீரர்களை நேர்காணல் செய்கிறார். இந்த தொடரின் பெயர் “Never Say Die”, (“எக்காரணம் கொண்டும் மனம் ஒடிந்து உயிரை விடாதே”). இந்த தலைப்பு அவருடைய வாழ்வில் அவர் காட்டிய மன உறுதியையும் இன்னல்களை எதிர்த்து போராடும் மனப்பாங்கையும் நன்கு படமெடுத்து காட்டுகிறது. DP(டீ.பீ.) என்று எல்லோராலும் அழைக்கப் படும் இவரின் வாழ்க்கை வரலாறு “Grit” என்ற சித்திர புத்தகத்தில் நன்கு விவரிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் முதல் “blade-runner” எனப்படும் இரும்பு தகடு போன்ற செயற்கை கால் பொருத்தப்பட்டு ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பவர் என்பதும் , தனியாகவே வானத்திலிருந்து (விமானத்திலிருந்து) குதித்து பூமிக்கு வரும் சாதனை படைத்த முதல் ஊனமுற்றவர் என்பதும் இவருடைய சாதனைகளில் சில. .

DPயின் உண்மையான பிறந்த நாள் ஜனவரி மாதம் 13ம் தேதி. பள்ளியில் சேருவதற்காக இதை செப்டம்பர் 13ம் தேதி என்று அவர் பெற்றோர்கள் மாற்றினார்கள். ஆனால் அவர் இன்னொரு பிறந்த நாளையும் கொண்டாடுகிறார் – ஜூலை 15ம் தேதி! ஏனென்றால் கார்கில் போரில் ஒரு வெடிகுண்டு விபத்தில் சிக்கி, மீண்டு,  அவருக்கு ஒரு புது வாழ்வு மலர்ந்த நாள் அது! அவரை பரிசோதித்த ராணுவ மருத்துவர் அவர் இறந்து விட்டார் என அறிவித்துவிட்டார்! ஆனால் மற்றொருவர் மிகவும் முயன்று அவரை உயிர்பிக்க செய்தார். பல கூர்மையான துண்டுகள் அவர் உடம்பின் உள்ளுருப்புகளில் ஆழமாக பதிந்து விட்டன. இதனால், அவரின் வலது கால் முட்டிக்கு கீழே வெட்ட வேண்டியிருந்தது. சற்றும் மனம் தளராமல் 10 வருடங்கள் விடா முயற்சி செய்து, அவர் நடக்க மட்டுமில்லை, ஓடவும் துவங்கினார்!

2009ம் ஆண்டு கால் துண்டிக்கப்பட்டவர்களில் முதலாவதாக ஒரு half marathon போட்டியில் பங்கேற்றார். முதலில் தன் இடது காலில் நொண்டி, தன் (வெட்டப்பட்ட) வலது காலை இழுத்து இழுத்து நடந்தார். 2011ம் ஆண்டு காலில் “blade” எனப்படும் இரும்பு தகடு கால் பொருத்தப்பட்ட பின்னர், ஓடவும் தொடங்கினார். அந்த வருடம் “The Challenging Ones (TCO)” என்ற தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதன் மூலம் காலிழந்த பலரை தன்னோடு ஓட ஊக்குவித்தார். இன்று வரை இந்த நிறுவனம் 1,600க்கும் மேம்பட்ட ஊனமுற்றோர்கள் பங்கேற்கிறார்கள். இவரே 26 half marathon போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இவருடைய சக ராணுவ வீரர்கள் இவருக்கு விளையாட்டாக “drill purpose” என்ற புனைபெயர் இட்டுள்ளனர். இதன் பொருள் வேலை செய்யாத துப்பாக்கி! வெறுமனே பயிற்சிக்கு மட்டும் பயன் படுத்தப்படும் துப்பாக்கி. ஆனால் DP தான் வெறும் வெது துப்பாக்கி அல்ல, நிஜ வாழ்க்கையில் சாதனைகள் புரியும் உன்னத துப்பாக்கி போல சக்தி உள்ளவர் என்று நிரூபித்து இருக்கிறார். இவருடைய சாதனைகள் இவருக்கு பல விருதுகளையும் பதக்கங்களையும் வென்று தந்துள்ளன. ஆனால் இவரின் முக்கிய லட்சியம் விருதுகளோ புகழாரமோ அல்ல. எல்லோருக்கும் நம்பிக்கையையும், நேர்மறை எண்ணங்களையும் ஊட்டி ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும்  என்பதே இவரின் முக்கிய குறிக்கோள். மிக பிரபலமான ஊக்கமூட்டும் பேச்சாளரான இவர் பல முறை, சீக்கிய புனித நூலான “குர்பானி”யில் இருந்து ஒரு பொன்மொழியை மேற்கோள் காட்டுகிறார். இதன் பொருள் “மனதை வெற்றி கொள், உலகத்தையே வெற்றி கொள்வாய்!”

புகைப்படங்கள்:

விக்கி ராய்