Icon to view photos in full screen

"நான் வித விதமான ஓசைகள், வாசனைகள், தொடு உணர்ச்சி போன்றவைகளால் அதிகமாக உணர்வுகளை நுகர்வானதால் மிக அழகான உலகத்தை உணர்கிறேன்!"

25 வயதான லுடி சச்சை, C பேய்சா, ஜே ங்கோவா இவர்களின் நான்காவது குழந்தை. இவர்கள் மிசோரம் மாநிலத்தில் லூங்பன் கிராமத்தில் பண்ணையில் வாழ்ந்து வந்தார்கள். குக்கி சின் என்னும் மொழியிலிருந்து மருவி வந்த மறா என்னும் மொழி பேசுபவர்கள். பண்ணையில் காய்கறிகள் விற்பது, அருகில் இருக்கும் ஏரியில் இருந்து மீன் பிடித்து அவற்றை விற்பது போன்றவைகளிலிருந்து வருமானம் ஈட்டி வாழ்க்கையை நடத்தி வந்து கொண்டிருந்தனர். குடும்பத்தில் இவர்களை தவிர, லுடியின் மூத்த சகோதரி ரோஸ்மேரி, மூத்த சகோதரர்கள் ஆல்பர்ட், டேவிட், மற்றும் இளைய சகோதரி ரோஸெலின் இருக்கின்றனர்.
 
லுடி மூன்று வயதான போது அவருக்கு கண்ணில் புற்றுநோய் கண்டு பிடிக்கப் பட்டது. இரண்டு விழிக்கோளங்களும் எடுக்கப் பட்டன. பேய்சாவும் ங்கோவாவும் துயரத்தில் துவண்டு போனார்கள். சகஜ நிலைக்கு திரும்ப நீண்ட காலம் ஆயிற்று. தேவாலயம் கூட செல்லவில்லை. "எனக்கு நிகழ்ந்த இந்த துரதிருஷ்ட வசமான நடப்பின் காரணமாக வந்த சோகத்தில் இருந்து இன்னும் மீளவே இல்லை" என்று நாங்கள் சந்தித்த போது கூறினார். ஆனால் லுடி தன்னுடைய மற்ற உணர்ச்சிகளின் மூலம் வாழ பழக்க படுத்து கொண்டு விட்டார். பல வருடங்கள் கழிந்த பின் கண்ணில் செயற்கை விழிக்கோளங்கள் பொருத்தப் பட்டுள்ளன.
 
லுடிக்கு ஆறு வயதான போது ஐஸ்வால் நகரில் உள்ள குருடர்களுக்கான சிறப்பு பள்ளிக்கூடத்தில் சேர்க்க பட்டார். அங்கேயே தங்கி படித்தார். பலர் ங்கோவாவிடம் "இந்த குருட்டு குழந்தையை பள்ளியில் சேர்த்து என்ன சாதிக்க போகிறீர்கள்? இவளை கை கழுவி விட்டு விடுங்கள்" என்று ஏசினார்கள். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் லுடிக்கு கல்வி றைவு புகட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். பள்ளியில் லுடி மறா பேசுவதாலும், மற்றவர்கள் மிஸோ மொழி பேசுவதாலும் எள்ளி நகையாடினார்கள். இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மிஸோ மொழியை நன்கு கற்றறிந்தார். இதனால் அந்த மாணவர்களின் ஒப்புதலையும், நட்பையும் வென்றார். "எங்கள் கல்லூரி முதல்வர், மற்றும் என் பள்ளி ஆசிரியை இருவரும், எனக்கு தாய் தகப்பனை போல !" என்று நன்றியுடன் நினைவு கூறுகிறார்.
 
2008ம் ஆண்டு இந்த குடும்பம் சியாஹா மாவட்டத்திற்கு குடி புகுந்தனர். இங்கு மறா மொழி அதிகமாக பேசப்படுவதால் இதற்கு Maraland என்றும் ஒரு பெயர் உண்டு. அங்கே ஒரு சிறிய கடை நிறுவி, துணி, மற்றும் உள்ளூர் ஆடைகள் விற்றனர். லுடி கல்வியில் சிறந்து விளங்கினார். ஒவ்வொரு பாடத்திலும் முதல் மாணவியாக மிளிர்ந்தார். Braille முறை பயின்று அதன் உதவியால் கதைகளையும் எழுத தொடங்கினார். ஆனால் 13 வயதான போது ‘terrible teens’ என்கிற அந்த இள வயதிற்கான உணர்ச்சிகளால் மன சோர்வு அடைந்து வீட்டிலேயே ஒரு வருடம் இருக்க வேண்டியானது. தனக்கு ஏன் இம்மாதிரி நிலைமை என்று இறைவனிடமே புகார் செய்தார். அப்போது தன் நிலைமையை ஒப்புக் கொண்டு வாழ்க்கை பயணத்தில் முன்னேற உறுதி பூண்டார். "நம்முடைய நிலைமையை உணர்ந்து, சலித்துக் கொள்ளாமல் ஒப்புக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற முதல் படி" என்று மன உறுதியுடன் கூறுகிறார். "இடுக்கண் வருங்கால் நகுக" என்பதற்கு ஏற்ப, கண் தெரியாததை பற்றி நகைச் சுவையுடனேயே கூறுகிறார். இதை அவர் குடும்பத்தினர் ரசிக்கவே இல்லை!
 
9ம் வகுப்பிற்கு லுடி பள்ளியில் மீண்டும் சேர்ந்தார். குருடர்களுக்கான விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டு அம்ரித்சர் நகரில் நடந்த long jump, javelin throw போட்டிகளில் பங்கேற்று பின்னர் 100 மீ மற்றும் 200 மீ ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று பதக்கங்களையும் வென்றார். 2014ம் ஆண்டு 10ம் வகுப்பு முடித்து பின்னர் 12ம் ஆண்டும் Durtlang Higher Secondary School என்னும் பொது பள்ளிக்கு கூடத்திலிருந்து முடித்தார். 2016ம் ஆண்டு Indian Blind Sports Association டில்லியில் நடத்திய வைளயாட்டு போட்டியில் பங்கேற்றார். பின்னர் Government Hrangbana College என்னும் கல்லூரியில் படித்தார். 2019ம் ஆண்டு கல்லூரி பத்திரிகைக்கு ஒரு கட்டுரை எழுதினர். 2019ம் ஆண்டு B.A. Honours பட்டம் பெற்றார். 2022ம் ஆண்டு ஜூன் மாதம் State Centre for Educational Research and Training என்னும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமத்திலிருந்து கண் தெரியாதவர்களுக்காக கல்வி (B.Ed with a specialisation in visual impairment)கற்பிப்பதில் பட்டமும் பெற்றார்.
 
இசையில் லுடிக்கு மிகவும் நாட்டம் உண்டு. கிடார் மற்றும் keyboard நன்கு வாசிப்பார். இசை போட்டியில் மூன்றாம் பரிசையும் வென்றிருக்கிறார். தனக்கு நன்றாக பொருந்தும் நாகரீக ஆடைகளை அணிகிறார். நல்ல துணியை தேர்ந்தெடுத்து, தன் நண்பர்களிடம் இருந்து வண்ணங்களை அறிந்து தானே ஆடைகளை வடிவமைக்கிறார். Princess India Mizoram 202 என்னும் கண் தெரியாதவர்களுக்காக ஆன்லைன் அழகிகள் போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தை வென்றார்.
 
யார் உதவியையும் நாடாமல் தானே வாழ நன்கு பயின்றுள்ளார். சமையல் செய்வதும் -- அதிலும் vegan முறையை பின்பற்ற -- மிகவும் ஆர்வம் உண்டு. அமெரிக்காவில் உள்ள Washington Adventist University பல்கலை கழகத்தில் Masters in Psychology and Counselling (மனோதத்துவம் மற்றும் ஆலோசனை சொல்வது என்னும் துறைகளில் முதுநிலை பட்டம்) கற்க தயாராகி கொண்டு இருக்கிறார். கண் தெரியாத குழந்தைகளுக்கு கல்வி கற்பதே இவருக்கு குறிக்கோளாக இருக்கிறது. குடும்பத்தின் நிதி நிலைமை சற்று முன்னேறி உள்ளது. ரோஸ்மேரி மற்றும் ஆல்பர்ட் திருமணமாகி சுகமாக இருக்கிறார்கள். ரோஸெலின் துபாய் நகரில் பனி புரிந்து கொண்டிருக்கிறார். டேவிட் பொருளாதாரத்தில் ICFAI University பல்கலை கழகத்திலிருந்து முதுநிலை பட்டம் பெற்றிருக்கிறார். அஸ்வால் வாங்கி துறையில் பணி புரிய விழைகிறார்.
 
டின்டின் என்னும் தன் கருப்பு பூனையை அன்புடன் வளர்க்கிறார். "நான் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து வந்து தன்னுடைய வித விதமான ஓசைகள் மூலம் என்னிடம் பேசுவது போலவே இருக்கிறது! இந்த பூனையின் பந்தம் என் வாழ்வில் மிக முக்கியமானது!" என்று கூறுகிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்