Icon to view photos in full screen

"என் ஆடைகளில் அழுக்கு படிவது எனக்கு பிடிக்கவே பிடிக்காது. எனக்கு முதல் முதலில் கிடைத்த சிவப்பு டீ ஷர்ட் எனக்கு மிகவும் பிடிக்கும். அது மிருதுவாகவும், வெல்வெட் போலவும் உள்ளது."

சூரஜ், அனிதா தம்பதிகளுக்கு ஐந்தாவது (கடைசி) குழந்தை பிறந்த போது, பெயர் வைக்க பஞ்சாங்கத்தை பார்த்தார்கள். அதில், குழந்தையின் பெயர் "ல" என்ற எழுத்தில் தொடங்க வேண்டும் என்று எழுதி பரிந்துரைக்க பட்டிருந்தது. அதனால்தான் லவ் பானெர்ஜீ என்ற தனித்துவமான பெயர் குழந்தைக்கு வைக்கப் பட்டது. குழந்தை பிறந்து சில நாட்களிலேயே, அது பெயரில் மட்டுமல்ல, மற்ற பல விதங்களில் தனித்துவமானது என்று பெற்றோர்கள் உணர்ந்தனர்.
 
சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள அமேரி கிராமத்தில் வசித்து வந்த அவர்கள், குழந்தைக்கு ஆறு மாதம் ஆனபோது, அவன் சுவாசிக்கவும், பால் குடிக்கவும் கஷ்டப் படுவதால் அவனை டில்லியில் உள்ள All India Institute of Medical Sciences (AIIMS) மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். குழந்தைக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப் பட்டன. ஒன்று, அதன் இருதயத்தில் உள்ள ஓட்டையை சரி செய்ய, இன்னொன்று தொண்டை குழாய் சுருங்காமல் இருப்பதற்கு. மேலும் குழந்தையின் கண் பார்வையும் பாதிக்கப் பட்டிருந்ததையும் அறிந்தனர். இவை எல்லாவற்றைவிட குழந்தையின் மனநிலைதான் குடும்பத்தினருக்கு மிகவும் கவலையை அளித்தது. குழந்தைக்கு வயதாக ஆக, அதன் நடத்தைகள் மோசமாயின. தற்போது 15 வயதாகி உள்ள அவனுடைய அறிவாற்றலும், உடல் அசைவுகளும் சற்று குறைந்தே உள்ளன.
 
பாதிப்பு என்ன என்று முறையே கண்டறிதல், அதற்கு சரியான சிகிச்சை அளித்தல் போன்றவைகளுக்கு கிராம புறங்களில் வசதிகள் அவ்வளவாக இல்லை. தந்தை மற்றும் சகோதரி கூறியதை வைத்து, லவ்விற்கு "developmental disability", அதாவது வளர்ச்சி குன்றி இருப்பதை நாங்கள் யூகித்தோம். குழந்தையாக இருக்கும்போது, மற்ற குழந்தைகளுடன் விளையாட மாட்டான்; தன்னை சுற்றி நடப்பவை எல்லாம் அவனுக்கு தாக்கம் ஏற்படுத்தாது. இன்று வரை, தன் எதிரில் உள்ளவர்களுடன் கண்ணுடன் கண் நோக்கி பேசுவதில்லை. முழு வாக்யங்கள் பேச முடிவதில்லை. ஓரிரு வார்த்தைகளே பேச முடிகிறது.
 
"fine motor skills" எனப்படும், நுண்ணிய அசைவுகள் அவனுக்கு வருமா என்று எங்களுக்கு ஐயம் உள்ளது. தானே உடை அணிந்து கொள்வதற்கோ, குளிக்கவோ, கழிவறை செல்லவோ அவனால் முடியாது. சாப்பிடும் பொது அரிசியை ஒவ்வொரு பருக்கையாக எடுத்து உண்கிறான். ஸ்பூன் உபயோகிக்க முடியவில்லை. சாவி கொடுத்து நகர செய்யும் எந்த பொம்மையுடனும் விளையாட முடிவதில்லை. பந்துடன் மட்டுமே விளையாட முடிகிறது. எப்போதுமே அந்த பந்துடனேயே இருக்கிறான்.
 
இவனுக்கு புலன் உணர்ச்சிகளில் ஏதாவது பிரச்சனை உள்ளதா என்றும் எங்களுக்கு ஐயம் வந்தது. சூரஜ், லவ்வின் சிவப்பு டீ ஷர்ட் பற்றி கூறினார்: அது மிருதுவாகவும் வெல்வெட் போல வழவழவென்று இருப்பதால் எப்போதும் அதையே அணிய வேண்டும் என்று விரும்புவான். துவைத்தால் கூட அது காயும்வரை காத்திருப்பான் என்று கூறினார்! பாதங்களில் தூசு படித்தாலும் பிடிக்காது; உடையில் அழுக்கோ சேறோ படிந்தால் அதை உடனே அகற்ற வேண்டும்! கூட்டங்கள் அவனுக்கு சற்றும் பிடிக்காது. ஒரு முறை அவனை ஒரு கல்யாணத்திற்கு அழைத்து சென்றபோது அங்கே இருக்க பிடிக்காமல் உடனே வீடு திரும்ப வேண்டும் என அவன் அடம் பிடித்ததாக ப்ரதிக்ஷயா கூறினார்.
 
அவனுக்கு பாட்டுக்கள் மிகவும் பிடிக்கும். பாட்டின் வார்த்தைகளை நன்கு நினைவு வைத்துக் கொள்கிறான். அவனை சமாளிப்பது கடினம் என்பதால் எல்லோரும் சேர்ந்து எங்கேயும் அவ்வளவாக செல்வதில்லை. ஆனால் காரில் செல்லும்போதெல்லாம் அவன் மிகவும் உற்சாகமாக இருப்பான் என்று ப்ரதிக்ஷயா கூறினார். குடும்பத்தினர் என்ன பேசுகிறார்களோ, அதையே அவன் மீண்டும் மீண்டும் கூறுகிறான்.
 
Jan Vikas Parishad Evam Anusandhan Sansthan (JVPAS) இயக்குனர் மனோஜ் ஜாங்கிடே எங்கள் புகைப்படக்காரர் விக்கி ராய் அவர்களை கொட்டும் மழையில் இரு சக்கர வண்டியில் பானெர்ஜீ குடும்பத்தினர் மற்றும் சில மாற்று திறனாளிகள் குடும்பங்களையும் சந்திக்க அழைத்து சென்றார். சட்டிஸ்கர் மாநிலத்தில் போலீஸ் துறையில் பணி புரியும் சூரஜ் தற்போது ராய்ப்பூர் நகரில் பணி புரிகிறார். அவர் எப்போதாவதுதான் வீட்டிற்கு வர முடிகிறது. இவர்களின் மூத்த மகன் கபில் (25) படிப்பில் ஆர்வம் இல்லாமல் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டார். ஆனால் இளைய சகோதரிகள் ப்ரதிக்ஷயா(23) MBA படிப்பு படித்து கொண்டிருக்கிறார். க்ரிதி (22), ஊர்வசி (19) BA படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
லவ் மாற்று திறனாளிகளுக்கு வசதிகள் உள்ள வீட்டிற்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்தான். அவனுக்கு இருக்கும் பல விதமான பிரச்சனைகளால் வீட்டில் இருந்தே படிக்க அனுமதி அளித்தனர். ஒவ்வொரு வாரமும் பள்ளி ஆசிரியரே வீட்டிற்கு வந்து அவனுக்கு வேண்டியதை பரிந்துரைக்கின்றனர். எழுத்தர் தேர்வுகளை எழுத, 6ம் வகுப்பு வரை முடித்திருக்கிறான். உயர் நிலை பள்ளி சற்று தொலைவில் உள்ளது. அவனாலும், குடும்பத்தினராலும் இதை சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை.
 
JVPAS அதிகாரிகள் குடும்பத்தினருடன் பேசுவது மற்றும் பொம்மைகள் கொடுப்பது போன்ற ஆதரவுகளை அளித்து வருகிறார்கள். தன்னுடைய சொந்த தேவைகளையே லவ் பார்த்துக்கோலா முடியாததால், அவனின் எதிர் காலம் கேள்விக்குறியாகவே உள்ளது என்று சூரஜ் கூறினார். மக்களின் கருணை அற்ற அணுகுமுறை அனிதாவிற்கு மிகவும் மனஉளைச்சல் அளிக்கிறது. லவ்வை கேவலமாக பார்த்து, அவனை "mental" என்று சொல்லி கேவலப் படுத்திகின்றனர். தன் இளைய சகோதரனை பற்றி ப்ரதிக்ஷயா மிகவும் கவலை படுகிறார். தானும், தன் சகோதரிகளும் திருமணம் செய்து கொண்டு சென்ற பின்பு, வீட்டிற்கு வரும் மருமகள் அவனை அன்புடன் பார்த்து கொள்வாளா என்ற பயம் இருக்கிறது.
 
"Love makes the world go round" (அன்பே உலகை சுற்ற வைக்கிறது) என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. ஆனால் இந்த பையன் லவ்வை பொறுத்த வரையில், அன்பு மட்டும் இவனுக்கு போதாது.

புகைப்படங்கள்:

விக்கி ராய்