Icon to view photos in full screen

"சமூகம் நம் திறமைகளை குறைவாக வரையறுத்து மதிப்பிடுகிறது. நாமே மேலும் முன்னேறாவிட்டால் எவ்வாறு நாம் சுதந்திரமாக இருக்க முடியும்?"

பெங்களூரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள சிக்பெல்லாபூர் நகரை அடைந்தால் அங்கு ஒரு இளம் பெண் காவ்யா நாயக் நிர்வாகிக்கும் K.K. Stationery and Fancy Store என்னும் ஒரு கடையை பார்க்கலாம். K.K. என்பது அவர் பெயரையும், 35 வயதான அவர் கணவர் கிரண் B நாயக்கையும் குறிக்கிறது. இவர்களுக்கு நான்கு வயதான அனன்யா சாய் என்ற மகளும் இருக்கிறாள். இதில் ஒரு நூதனமான தகவல் என்னவென்றால் கிரண் பெண்ணாக பிறந்து பின்னர் ஆணாக மாறியவர் என்பதே!
 
நாங்கள் இவர்களை சந்திக்க சென்ற போது, காவ்யா தன் தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் கிரண் spondylosis மற்றும் rheumatoid arthritis நோய்களால் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தாலும் தன வழக்கமான உற்சாகத்துடன் எங்களிடம் அளவளாவினார். Steroids என்னும் தீவிரமான மருந்துகளை பல காலம் பயன் படுத்தியதால், அவர் உடல் உள் உறுப்புக்கள் கடுமையாக பாதிக்க பட்டிருந்தாலும், சற்றும் மனம் தளராது இருந்தார்.
 
கிரண் ஊர் ஊராக பயணிக்கும் லம்பானி வர்கத்தை சேர்ந்தவர். ஆந்திராவில் வாரங்கல் மாவட்டத்தில் நசரம்பெட் என்ற இடத்தில இருக்கும் ஆதி வாசிகள் வாழும் ஹனுமான் தண்டா என்னும் காட்டு பிரதேசத்தில் வளர்ந்தார். மூன்று வயதான போது போலியோ நோயால் தாக்கப் பட்டார். இதனால் அந்த கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள, ஒரே ஆசிரியரால் நடத்தப்படும் தொடக்க பள்ளிக்கு செல்ல முடியாமல் போயிற்று. "கிருஷ்ணமூர்த்தி சார்" என்று அன்பாக அழைக்கப் படும் ஒருவர் அந்த கிராமத்தில் பயணிக்கும்போது, இந்த 8 வயதான இளம் பெண்ணை கண்டு, "இவள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை?" என வினவினார். அன்று முதல், அவரே கிரணை பள்ளிக்கு அழைத்து செல்ல தொடங்கினார்.
 
பள்ளி ஆசிரியரின் உதவியோடு, கிரண் கல்வி கற்பதில் பெரும் ஆர்வம் பெற்றார். பள்ளி முடித்துவிட்டு நஸ்ராம்பேட்டில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். தன உடல் உபாதையால் கல்லூரியில் நடக்க மிகவும் கஷ்டப் பட்டார். மேலும், மகளிர் விடுதியில் மற்ற பெண்களுடன் சேர்ந்து இருக்க மிகவும் கூச்சப்ப பட்டார். அங்கே படிக்கும் சரிதா என்னும் ஊனமுற்ற பெண் இவருக்கு நெருங்கிய தோழி ஆனார். World Disabled Day என்னும் உலகளாவிய ஊனமுற்றோர் தினத்தை விமரிசையாக கொண்டாட மேலும் ஆறு ஊனமுற்ற நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டார். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட 1000 ஊனமுற்றோர்களின் முகவரிகளை கண்டுபிடித்து, அவர்களை ஒரு மைதானத்தில் குழும விண்ணப்பித்தார். இதுவே ஊனமுற்றோர் உரிமைகளுக்கு கிரண் எழுப்பிய முதல் குரல்!
 
டிசம்பர் 3 (World Disabled Day) கிட்டத்தட்ட 700 ஊனமுற்றோர்கள் அவர்கள் குடும்பத்துடன் அங்கு திரண்டனர்! தங்களுக்கு ஊனமுற்றோர் சான்றிதழ் கிடைக்கும்வரை அங்கிருந்து நகர வேண்டாம் என்று கிரண் பரிந்துரைத்தார். அந்த ஊரில் இருந்த அதிகாரிகள் இம்மாதிரி கூட்டத்தை பார்த்தது இல்லை. இக்கூட்டத்தை சமாளிக்க திணறினார்கள். அந்த ஊர் MLA அவ்விடத்திற்கு விரைந்து, மருத்துவர்களை அழைத்து, அந்த ஊனமுற்றவர்களை பரிசோதித்து, சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்தார். இதன் பின்னர், ஆந்திராவின் 23 மாவட்டங்களில்  உள்ள ஊனமுற்றோர்களை ஒருங்கிணைக்கும் Prajwala Disability Rights Foundation என்னும் நிறுவனத்தை கிரண் நிறுவினார்.
 
இந்த முயற்சி கிரணின் அரசியல் மற்றும் சொந்த வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சரிதாவின் சகோதரி கிரணை காதலிப்பதாகவும்,அவரையே மணக்க போவதாகவும் கூறினார். இதற்கு அவர் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் கவிதாவும், கிரணும் திருப்பதிக்கு ஓடி சென்று 2008ம் ஆண்டு மார்ச் 9ம் நாள் அங்கே ஒரு சமூக கூட்டு கல்யாணத்தில் திருமணம் செய்து கொண்டனர். கவிதாவின் பெற்றோர்கள் இதனால் வெகுண்டு, கிரண் மீது கவிதாவை கடத்தியதாக போலீசில் புகார் செய்தனர். இதனாலும், இதன் பின்னர் ஊடங்கள் இதற்கு கொடுத்த விளம்பரத்தாலும் கிரணும், கவிதாவும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கே தள்ளப் பட்டனர். தக்க சமயத்தில் சங்கமா என்னும் திருநங்கையர் உரிமைகளுக்கு போராடும் நிறுவனத்தின் உதவியுடன் அவர்களை காப்பாற்றி, கவிதாவும், கிரணும் தங்கள் மண வாழ்க்கையை பெங்களூரில் துவங்கினர், 2010ம் ஆண்டு கிரண் திருநங்கையர் வாழ்க்கைக்காக பாடுபடும் அனேகா என்ற நிறுவனத்தில் பணி புரிய சிக்பெல்லாபூர் ஊருக்கு குடி பெயர்ந்தார். அன்று முதல் இருவரும் இங்கேயே வாழ்ந்து வருகிறார்கள்.
 
திருநங்கையர் மற்றும் ஊனமுற்றோர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது இவரின் முக்கிய குறிக்கோள். அந்த ஊரில் உள்ள மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவைகளுக்கு ஒரு தீர்வு காண அரசு அதிகாரிகளுடன் வாதாடுவர், போராடுவார். முதலில் போராடினாலும், பின்னர் அவர்களுடனேயே நட்பு கொள்ளவும் செய்தார். அவருடைய சாமர்த்தியமான அணுகுமுறையால் போலிஸ், நீதித்துறை மற்றும் ஏனைய அரசு துறை அதிகாரிகளுடன் நல்ல நட்பும் மதிப்பும் பெற்றிருந்தார். அவருடைய விடா முயற்சியால் பல அரசு அலுவலகங்கள் lifts, மக்கள் பயன் படுத்த சக்கர நாற்காலிகள், அந்த சக்கர நாற்காலி செல்ல ஏதுவான சரிவு பாதைகள், கழிப்பறைகள் போன்ற பல வசதிகளுடன் கட்டப் பட்டன.
 
இம்மாதிரி பலருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு, பலரின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து, அவற்றை தீர்த்து வைக்கும் திறமையினால் அந்நகர மக்களின் அன்பிற்கும், மதிப்புக்கும் உரியவர் ஆனார். இதனால் அவர் பாலின அடையாளங்களை அம்மக்கள் புரிந்து கொண்டு, மதித்தனர். 2010ம் ஆண்டு நிதி வசதி இல்லாதவர்கள், மற்றும் தாழ்த்தப் பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் போன்ற 15 பேர்களுடன் சேர்ந்து Karnataka Vikalachetanara Sanghatane (KVS) என்ற நிறுவனத்தை நிறுவினார். இதனால் ஊனமுற்றோர், மற்றும் சமூக ஒருங்கிணைப்பு போன்றவைகளை பறை சாற்றுகிறார். இதில் கர்நாடகாவில் 12000 அங்கத்தினர்கள் உள்ளார்கள். இவர்களுக்கு சான்றிதர்கள் வாங்கி கொடுப்பது, அரசு மானியங்களை பெற்று கொடுப்பது போன்ற பல சேவைகளை இந்த நிறுவனம் செய்து கொடுக்கிறது. கொரோனா தொற்றின்போது இந்நிறுவனம் நடத்தும் கணினி வகுப்புகள் நின்று விட்டன.
 
2011ம் ஆண்டு கிரண் திருநங்கைகள் உரிமைக்காகவே நிசர்கா என்னும் நிறுவனத்தை தொடங்கினார். இதற்காக சமூக ஆர்வலர் விருதையும் பெற்றார். இந்நிறுவனத்தை செவ்வனே செயல் படுத்த பலருக்கும் பயிற்சி அளித்ததால், இந்நிறுவனம் நன்கு செயல் பட்டு வருகிறது. இவர் இதில் தன்னார்வு தொண்டராக பிமட்டும் செயல் படுகிறார். 2019ம் ஆண்டு ஹைதராபாத் நகரில் Society for Transmen Action and Rights (STAR) என்னும் நிறுவனத்தை தொடங்கினார். இது திருநம்பிகள் (பெண்ணாக பிறந்து, பின்னர் ஆணாக மாறியவர்கள்) உரிமைகளுக்காக உழைக்கிறது. "இவர்களை அரசாங்கம் ஒரு தனி வகையினராக அங்கீகரிக்க வேண்டும்" என்று குரல் எழுப்பினார். தற்போது ஆதார் அட்டையில், ஆண் / பெண் / திருநங்கை என்ற மூன்று பிரிவுகளே உள்ளன. மூன்றாம் பிரி வை தேர்நதெடுத்தால் ஹிர்ஜா சமூகத்தை சேர்ந்த திருநங்கை என்றே முடிவு எடுக்கப் படுகிறது. திருநம்பி என்று குறிப்பிட ஒரு வழியும் இல்லை.
 
கிரணை பொறுத்தவரையில், ஆதிவாசி, ஊனமுற்றோர், திருநம்பி போன்ற பற்பல அடையாளங்கள் உள்ளன. இதனால் இவர் தனித்தன்மையுடன் ஒளிர்கிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்