Icon to view photos in full screen

“நீங்கள் எங்களை உங்களுக்கு சமமாக பார்க்காததே உண்மையான ஊனம்!”

34 வயதான கிலுமோ எசுங் அவருடைய பழைய கருப்பு நிற மோட்டார்சைக்கிளில் நாகாலாந்து மாநிலத்தின் கோஹிமா நகரின் கூட்டம் மிக்க சாலைகளில் செல்லும்போது தன் பின்னால் வரும் வண்டிகளை காண்பதற்காக உள்ள கண்ணாடி சரியாக இருக்குமாறு உறுதி செய்து கொள்வார். ஏனென்றால் பின்னால் வந்து அவசர அவசரமாக முன்னால் செல்ல முயற்சிக்கும் வண்டிகளின் பொறுமை இல்லாமல் ஹார்ன் அடிப்பது அவருக்கு காதில் விழாது! 
கால்பந்தும், (மோட்டார்)சைக்கிள் ஓட்டுவதும் இவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. இந்தியாவில் உபயோகிக்கப் படும் சைகை மொழியில் (Indian Sign Language - ISL) பயிற்சி அளிப்பவராக அரசாங்கத்தின் “Sarva Shiksha Abhiyan” திட்டத்தின் கீழ் பணி புரிகிறார். நாகாலாண்டில் முதலில் ISL சான்றிதழ் பெற்ற ருவோகொக்ரீனோ விசோதா என்பவர் நாங்கள் பேசுவதை சைகை மொழியில் செய்து காட்டி அவருக்கு புரிய வைத்தார். முன்னாள் அமைச்சரும், சட்ட பேரவை உறுப்பினருமான டாக்டர் டீ. எம். லோதாவுக்கும், “Charity Club Multipurpose Society” என்னும் தன்னார்வு தொண்டு நிறுவனத்தில் பணி புரியும் மாலோ எசுங் என்பவருக்கும் பிறந்த ஏழு குழந்தைகளில் ஐந்தாவதாக பிறந்தவர் கிலுமோ. இவருக்கு ஒரு வயது இருக்கும்போதே, காதில் ஒரு புண் வந்து, அது உடைந்ததால் காது கேளாமல் போயிற்று. இவருக்கு மூன்று வயது ஆனபோது, பெற்றோர்கள் டாக்டர் .NN தத்தா என்னும் காது-மூக்கு-தொண்டை நிபுணரை கவுஹாத்தி நகரில் சந்தித்தனர். அவரிடம்  சிகிச்சை பெற, கவுஹாத்தி நகரில் ஒரு இல்லத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஐவரும் இவர் தாயும் இரண்டு வருடங்கள் தங்கினார்கள்.

கிலுமோ தன் தாய்மொழியில் பேச தெரிந்திருந்தாலும், பெரும்பாலும் சைகை மொழியையே உபயோகித்தார். இதை டிமாபூர் நகரில் உள்ள Deaf Biblical Ministry என்ற இடத்தில் பயின்றார். இவருடைய இரண்டு இளைய சகோதரர்களும் இதில் பயிற்சி பெற்றனர். ஷில்லாங் நகரில் உள்ள தொழில்முறைகளை கற்று தரும் (Vocational Institute and Training Centre) பள்ளியில் உயர் நிலை பள்ளியை முடித்தார். இதன் பின்னர், Ferrando Speech and Hearing Centre என்னும் மையத்தில் தான் கற்றதை காது கேளாத மற்றவர்களுக்கு கற்பித்தார். இதன் பிறகு ISL மற்றவர்களுக்கு கற்று தருவதற்கான இரண்டு வருட டிப்ளோமாவையும் (DTISL) Indore Deaf Bilingual Academy என்னும் நிறுவனத்தில் முடித்தார்.
காற்பந்து ஆட்டத்தின் மேல் இவருக்கு அதீதமான பற்று! 16 வயது இருக்கும்போது தொலைகாட்சியில் காற்பந்து ஆட்டத்தை கண்டு, அதில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். மேன்செச்ட்டர் யூனைடெட் குழுவே இவருக்கு  மிகவும் பிடித்த குழு. அதிலும் க்ரிச்டினோ ரொனால்டோ என்னும் வீரர் இவருக்கு ஒரு பெரிய ஹீரோ! இவருக்கு மறக்க முடியாத நினைவுகளில் சில: பிரபலமான கோல் கீபர் சுப்ரதோ பாலுடன் ஓர் ஆட்டத்தில் இணைந்து விளையாடியது. நான்கு காது கேளாதவர்களும், இந்தியாவுக்கு FIFA Global Unified Cup 2013 போட்டியில் பாங்காக் நகரில் ஆடிய ஏழு காது கேட்பவர்களும் ஒரு குழுவில் சேர்ந்து ஆடிய சிறப்பு திறநாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி ஒன்றில் இது நடந்தது. இன்னொரு மலரும் நினவு ஆஸ்திரேலியாவில் காது கேட்காதவர்களுக்காக நடத்தப் பட்ட உலகளாவிய போட்டியில் பங்கேற்றது.

2020ம் ஆண்டு மார்ச் மாதம் தன்னுடைய தந்தையை இழந்தது இவரை ஒரு பேரிடி போல தாக்கியது. இதன் பிறகு கோவிட் 19 காரணமாக ஊரடங்கு வந்ததில் மனம் நொந்து போனார். வெளி உலகில் மற்றவர்களை சந்தித்து குதூகலமாக அளவாளவுவதை மிகவும் விரும்பும் இவருக்கு இது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதற்கு முன்பாக காது கேளாதவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், சிறப்பு பயிற்சியாளர்களுக்கும் ISL பயற்சி அளித்தார். ஆனால் ஊரடங்கு வந்தவுடன், Zoom மூலம் “ஆன் லைனில்” கற்றுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதும், இந்த பயிற்சிகளை நிறுத்தினார். ISLஇல் கை சைகையில் ஒரு சிறிய மாற்றம் இருந்தாலும், வார்த்தையின் பொருளே மாறி விடும் என்பதால் ஆன்லைனில் இதை கற்று கொடுக்க அவர் விரும்பவில்லை.

கிலுமோ தன்னுடைய மோட்டார் சைக்கிளில் பற்பல நூதனமான மாற்றங்களை செய்ய வெகு ஆவலுடன் முயன்றார். ஒகா கிராமத்தில் உள்ள டோயாங் நதியில் மீன் பிடிக்கவும் மிக ஆவல்! அங்கே கிடைக்கும் மிகப் பெரிய அளவு மீன்கள் இவரை மிகவும் கவர்ந்தன. தன் நண்பர்களுடன் புது இடங்களுக்கு பிரயாணம் செய்வதில் இவருக்கு அலாதியான ஆசை. ஐரோப்பாவிற்கு சென்று ஜுவேண்டஸ், செல்சீ, ரியல் மாட்ரிட் போன்ற கால்பந்து குழுக்கள் ஆடுவதை நேரில் சென்று காண வேண்டும் என்பது இவருடைய நீண்ட நாள் கனவு!


புகைப்படங்கள்:

விக்கி ராய்