Icon to view photos in full screen

“எனக்கு வேலையில் அமர்ந்து பணி செய்ய மிக விருப்பம். நான் தையல் வேலை நன்கு செய்வேன்.”

தற்போது 32 வயதான சுபிதா ம்ரித்தா மேற்கு வங்காளத்தில் உள்ள தெற்கு பராக்நாஸ் மாகாணத்தை சேர்ந்தவர். இவர் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே தன் தந்தை சுந்தர் ம்ரித்தாவை இழந்தார். உயிரோடிருக்கும்வரை தந்தை தன் மகளை சுமந்துகொண்டு பள்ளிக்கு அழைத்து செல்வார். ஏனென்றால் சுபிதாவிற்கு மிகவும் கடுமையான locomotor disability எனப்படும் எலும்பு மற்றும் சதைகளை அசைக்க முடியாமல் போக வைக்கும் உபாதை இருந்தது. தந்தை மறைந்தவுடன் அவர் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டார். ஆனால் அவர் கல்வி பயணம் குடும்பத்தின் அடுத்த தலைமுறையினர் உதவியோடு தொடர்ந்தது.

கபிதா இப்போதும் தான் பிறந்த கோசபா தாலுக்கில் உள்ள பால்லி கிராமத்திலேயே வசிக்கிறார். கவிதாவின் சகோதரர் ரந்தீப் (40); அவருடைய மனைவியின் பெயர் ஷெபாலி(37).  இவர்களின் குழந்தைகள் ஜோய்தீப் (18)  மற்றும் ஜெயா (16) கவிதா இந்த இரண்டு குழந்தைகளை “பாய்போ” என்றும் “பாகனி” என்றும் செல்லமாக அழைக்கிறார். அவர்களின் உதவியை  நன்றி விசுவாசத்துடன் நினைவு கூர்ந்தார். அவ்விருவர் பள்ளி செல்ல தொடங்கிய போது கபிதாவிற்கு படிக்க, எழுத கற்று தந்தனர். இன்றும் கூட, கதை புத்தகம் படிக்கும்போது ஏதாவது புரியவில்லை என்றால் அவர்களின் உதவியையே நாடுகிறார். கபிதாவின் தாய் அமேலா ஏழு வருடங்களுக்கு முன் காலமானார். அதற்கு பின், சகோதர ரந்தீப்பே முழுவதும் உறுதுணையாக இருக்கிறார். அவர் தந்தையை போலவே ரந்தீப்பும் விவசாய தொழில் செய்பவர். தனக்கு சொந்தமான நிலத்தில் அரிசி, உருளை மற்றும் சில காய்களை பயிரிட்டு வாழ்க்கை நடத்துகிறார்.

கபிதா தன் பெற்றோர்களுடன் வாழ்ந்த நாட்களை நெகிழ்வுடன் நினைவு கூர்ந்தார்: “எனக்கு என்ன வேண்டுமானாலும் – அது துணிமணிகள் ஆகட்டும், தின்பண்டங்கள் ஆகட்டும், என்னவாக இருந்தாலும் – அதை உடனே வாங்கி கொடுத்து விடுவார்கள். துர்கா பூஜை நாட்களில் என்னை அழைத்து சென்று பற்பல பந்தல் அலங்காரங்களை காட்டுவார்கள்”. சுந்தர் இறந்தவுடன், அமேலா அவரை பராமரித்தார்.

ஷெபாலிக்கு வீட்டு வேளைகளில் உதவுதல், சுத்தம் செய்தல், துணி துவைத்தல், மாடுகளுக்கு தீனி ஊட்டுதல், வயலிலும், தோட்டத்திலும் முடிந்த வேலைகளை செய்தல் போன்ற பணிகளை கபிதா செய்து கொண்டு நாட்களை கழிக்கிறார். பாட்டு கேட்பது, அவ்வப்போது அருகில் உள்ளவர்கள் வீட்டில் தொலை காட்சி காணுதல் போண்டர்வைகலவர் பொழுதபோக்கு. நாங்கள் இவரை சந்தித்த போது, திருமணமான தன் மூத்த சகோதரி நமிதா மாலிக்கின் வீட்டில் சில நாட்கள் இருந்து திரும்பி வந்திருந்தார். .பங்கொன் நகரில் வசிக்கும் நமிதா கபிதாவை ஒரு மாற்றத்திற்காக தன் ஊருக்கு பேருந்தில் அழைத்து சென்று மறுபடியும் தன் சகோதரர் வீட்டில் கொண்டு வந்து விட்டிருந்தார்.கபிதா ஜயாவுடனும், ஜோய்தீப்புடனும் ஜோக்ஸ் சொல்லிக்கொண்டும், கிண்டல் செய்து கொண்டும் ஆனந்தமாக காலத்தை கழித்தார்.அவர்களுடன் சைக்கிளில் ஊர் சுற்றுவார்.

இத்தொடரின் எழுத்தாளரும், அவர் மனைவியும் கபிதாவிற்கு ஒரு மூன்று சக்கர சைக்கிளை அன்பளிப்பாக அளித்துள்ளனர். இது புத்தாண்டுக்கு ஓரிரு தினங்கள் முன்னால் கபிதாவை வந்து அடைந்தது. சுந்தர்பான் அறக்கட்டளை தலைவர் பிரசென்ஜித் மண்டல் இதை அவரிடம் சேர்ப்பித்தார். அவர் கபிதா தன் புது வாகனத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், விடியோவையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார். இவர்கள்தான் சோம்நாத் மண்டல் என்பவருக்கும் ஒரு மூன்று சக்கர சைக்கிள் அன்பளிப்பாக அளித்தனர். தன் மாமாவுடன் நல்ல பள்ளிக்கொடங்கள் உள்ள பாலி நகரில் வசிக்கும் வசிக்கும் 11 வயதான சோம்நாத்தை பற்றி EGS தொடரில் முன்னமேயே கண்டுள்ளோம்.

பணம் ஈட்ட வாய்ப்புள்ள வேலைகளை செய்ய கபிதா மிகவும் ஆர்வமாக உள்ளார். “எனக்கு தையல் நன்றாக தெரியும். தையல் தொழிலில் எல்லா விதமான வேலைகளையும் நான் செய்வேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்