Icon to view photos in full screen

“உலகம் முழுவதும் பயணித்து, இவ்வுலகில் உள்ள அனைத்து நாடுகளையும் காண விரும்புகிறேன்”

சென்னையில் வாழும் சொக்கலிங்கம் நான்கு வயதான தன் பேத்திக்கு மஹாகவி சுப்பிரமணிய பாரதியார், மற்றும் பாரதிதாசன் கவிதைகளை பாடியும், தமிழ் மறையாம் திருக்குறளை படித்தும் காட்டுவார். அப்போதே  அந்த சிறு குழந்தை சமையல் அறையில் உள்ள ஒரு பாத்திரத்தை வைத்து கொண்டு பாட்டுக்கேற்ப தாளம் போட்டு மழலை குரலில் பாடவும் முயன்றது  அவரை மிகவும் வியப்படைய செய்தது. விழிப்புணர்வும், நாட்டமும் கொண்டு குழந்தையின் சிறு வயதிலேயே இசையில் உள்ள நாட்டத்தை கண்டறிந்த அந்த பாட்டனார் . 2017ம் வருடம் காலமானார். ஆனால் அதற்கு முன்பே அந்த பெண் பின்னணி பாடகியாக மலர்ந்ததை பார்க்க முடிந்தது.
சென்னையை சேர்ந்த 21 வயதான ஜ்யோதி பிறக்கும்போதே கண் பார்வை இல்லாமல் பிறந்தார். நான்காம் வயதில் அவருக்கு  “autism spectrum disorder” இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. தன் குழந்தைக்கு இம்மாதிரி ஊனங்கள் இருப்பதை அறிந்த அவர் தந்தை விவாக ரத்து கோரினார். குழந்தைக்கு ஊனம் என்று தெரிந்தவுடன் குடும்பத்தை கை விட்டு விடுவது என்பது இந்தியாவில் சகஜமே. ஜ்யோதியின் முழு  பெயரில் குடும்பப் பெயரின் முதல் எழுத்து ‘K’. இது அவர் தாய்  கலைசெல்வியின் முதல் எழுத்து. 47 வயதான கலைச்செல்வி ஜ்யோதியின் வாழ்வில் அச்சாணி போல உறுதுணையாக இருக்கிறார். கலை தன் பெற்றோர்களான சொக்கலிங்கம், சாந்தா அவர்கள் பணத்துடனும், ஊக்குவிப்பதிலும் பேருதவி புரிவதையும்  நன்றியுடன் நினைவு கூறுகிறார். கலை எப்போதாவது மனமுடைந்து இருக்கும்போது அவர் தந்தை “நீ ஜ்யோதிக்கு முழு நேரமும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதை மறந்து விடாதே! தைர்யமுடன் செயல்பாடு!” என்று கூறி ஊக்குவிப்பார். 
ஜ்யோதியின் நடத்தை வித்தியாசமாக இருந்ததால் அவரை எல்லோரும் செல்லும் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. பருவமடைந்ததும், இந்த நடத்தை மேலும் பிரச்சனையாக உருவெடுத்து, மனக்க்லேசத்தை அதிகரித்தது. ஆனால், இசை அவரை அமைதி படுத்துவதை கலை உணர்ந்தார். அரசு கலைகல்லூரி ஒன்றில் முறையாக  இசை கற்க சேர்ந்தவுடன், ஜ்யோதியின் அதிசயிக்கதத்தக்க இசை திறமை நன்கு மலர தொடங்கியது. ஒரு தனிப்பட்ட ஆசிரியர் கொடுத்த பயற்சி மூலம் ஜ்யோதி தன் 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பிறகு இசையிலேயே தன் முழு நேரத்தையும் கவனத்தையும் செலுத்தி இசையில் மூன்று வயது டிப்ளோமா, வயோலின் வாசிப்பதில் BA பட்டம், விசைப்பலகை வாசிப்பது முதலியவற்றில் தேர்ச்சி பெற்றார். மேலும் இசை ஆசிரியர்கள் பயிற்சிக்காக டிப்லோமாவில் (Diploma in Music Teachers Training (DMT) )மிக உன்னதமான மதிப்பெண்களை பெற்று சோபித்தார். தற்போது  மதராஸ் பல்கலைகழகத்தில் இசை துறையில் MA பட்டத்துக்கு படித்து கொண்டிருக்கிறார்.
ஜ்யோதி படிப்படியாக இசையில் முன்னேறி, இசையையே தொழிலாக செயல்பட தொடங்கினார். கச்சேரிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவைகளில் பங்கேற்றார். இதை தவிர கர்நாடக சங்கீத வித்வான்களின் கச்சேரிகளில் வயோலின் வாசிக்கவும் தொடங்கினார்.  அவர்  2017ம் ஆண்டு “ரேகா” தமிழ் படத்தில் “கண்ணம்மா” என்னும் பாட்டை மேடையில் பாடி, புகழ் ஏணியின் சிகரத்தை எட்டினார். அந்த வீடியோ இணையதளங்களில் ஆயிரக்கணக்காணவர்கள் ரசித்து பாராட்டினர். தமிழ் இசை அமைப்பாளர் GV பிரகாஷ்  இதனை Twitter ல் கண்டு, ரசித்து, தன் “அடங்காதே” படத்தில் “நிலவின் நிறமும்” என்ற பாட்டை பின்னணி  பாடகியாக பாட வாய்ப்பை அளித்தார். அந்த பாட்டு வெளியாகி ஒரு வாரத்தில் ஜ்யோதியின் பாட்டனார் காலமானார். 2019ம் ஆண்டு ஜ்யோதி புதிய பாடகிக்கான “கலாட்டா நக்ஷத்ர” சிறப்பு விருதினை வென்றார்.
இதனை தொடர்ந்து அபு தாபி, ஸ்காட்லான்ட், மலேஷியா, இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற  பற்பல வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அங்குள்ள விமனான நிலையங்கள், விண்ணளாவ உயர்ந்து நிற்கும் அடுக்கு மாடி கட்டிடங்கள், கலகலவென்று பேசி ஓடியாடும் மக்கள் என்று இவை அனைத்தும் அவரை மிகவும் கவர்ந்தன. இசையில் தன்னுடைய DMT படிப்பை முன்னிறுத்தி, இணையதளம் வாயிலாக இசை மற்றும் வயோலின் வகுப்புகளை நடத்த விளம்பரம் செய்தார். இன்று, லண்டன், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள மாணவர்கள் இவரிடம் பாடம் கற்கிறார்கள்.
இந்திய ஜனாதிபதி, பிரதம மந்திரி முன்னிலையில் “திவ்ய கலா சக்தி” என்னும் கலை நிகழ்ச்சியில் ராஷ்ட்ரபதி பவனில் 2019ம் ஆண்டு பங்கேற்றதில் இவருக்கு மிகவும் பெருமிதம்! 2021ம் ஆண்டு சர்வ தேச ஊனமுற்றோர் தினமான டிசம்பர் 3ம் நாள் தேசிய “ஊனமுற்றோர்களில் முன்னுதாரணம்” (Role Model award for Persons with Disabilities ) ஜனாதிபதியினிடம் இருந்து என்ற புது டில்லியில் உள்ள விக்யான் பவனில் பெற்றார்.
இப்போதெல்லாம் ஜ்யோதி இசை படிப்பு, இணையதளம் வகுப்புகள், கச்சேரிகள், இசைப்பதிவு செய்வது என்று பலவிதமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை தவிர, நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன் தாய்க்கு சமையல் அறையில் உதவுகிறார். இதனால் யாரையும் சார்ந்து இருக்காமல் இருக்கவும் பயிற்சி பெற்றுள்ளார். இவருடைய தற்போதைய சாதனை குறள்களையும் மூன்று மணி நேரம், வினாடிகளில் ஒப்புவித்தார்! இது India Book of Records] (https://indiabookofrecords.in/india-book-of-records-achiever-wins-national-accolade-from-the-president-of-india/) என்னும் இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. விண்ணுலகத்தில் அவர் பாட்டனார் புன்முறுவல் பூத்து வாழ்த்துக் கொண்டிருப்பார்!

புகைப்படங்கள்:

விக்கி ராய்