Icon to view photos in full screen

“நல்ல வேலையில் இருந்து நிறைய சம்பாதிப்பதே என் கனவு!”

18 வயதான இஸ்ரானா தொலை காட்சியில் பார்த்த பாலிவூட் படங்களின் நடன காட்சிகளை நடிகைகள் செய்வது போலவே செய்து காட்டுவார். இடது காது முற்றிலும் கேட்காமலும், வலது காது சற்றே கேட்குமாரும் இருந்தாலும், தன் சகோதரி சுசி தாஸ்மானா பாட்டுக்கு கை தட்டுவதை உன்னிப்பாக கவனித்து நடனத்துக்கு ஏற்ப அசைய கற்றுக் கொண்டார். ராதிகா மதன் “English Medium” படத்தில் வரும் “நாசான் நு ஜீ கர்தா” என்னும் பாடலுக்கு எப்படி நாட்டியம் ஆடுகிறாரோ, அதே போல ஒரு வளைவு, குதித்தல், திரும்புதல் கூட விடாமல் செய்து காட்டுகிறார். அவருடைய இணை பிரியா தோழியான ஷன்பம் அருகில் இருந்து இவரை ஊக்குவித்துக் கொண்டே இருப்பார்.

“நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்?” என்ற எங்கள் கேள்விக்கு “எனக்கென்று ஒரு  வீடு கூட கிடையாது!” என்று தன் மொழிபெயர்ப்பாளர் ஷுச்சி மூலம் அவர் தெரிவித்தார். ஷுச்சி புது டில்லியில் உள்ள Udaan Rose Home for Girls of the Salaam Baalak Trust (SBT) என்னும் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர். “இங்கே உள்ள இல்லமே எனக்கு சொந்த வீடு போல!” என்று இஸ்ரானா கூறுகிறார். மூன்று வருடங்களுக்கு முன்னால் இவர் குர்காமில் உள்ள வாஜிராபாத் என்ற இடத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் அனாதை போல அலைந்து கொண்டிருந்த இவரை காவல் துறையினர் SBT இடம் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி கொண்டு வந்து சேர்த்தனர். தன்னுடைய பெயரை “இஸ்ரானா” என்றும், தந்தையின் பெயரை “பாலே” என்றும் எழுதி காண்பித்தார். இதைத் தவிர, தன்னுடைய பிறந்த நாளோ, மற்ற தகவல்களோ இவரால் சொல்ல முடியவில்லை. பின்னர், சைகை மொழி மூலம் தன் வீட்டில் வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்டார் என்று தெரிய வந்தது. இதனால் இவர் எங்கிருந்து வந்தாரோ, அங்கே திரும்பி செல்ல விரும்பவில்லை. 

 அவரின் குடும்ப விவரங்களை கெட்ட போது தனக்கு நினைவு இல்லை என பதில் அளித்தார். யார் அவரை பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்தார்கள் என்று கேட்க “பேருந்து ஓட்டுனர்” என பதில் அளித்தார். என்ன படித்திருக்கிறாய் என்ற கேள்விக்கு ஒன்றாம் வகுப்பு வரை என்றார். ஆனால் பள்ளியின் பெயர் சொல்ல தெரியவில்லை. தன்னுடைய கடந்த கால நினைவுகள் அனைத்துயுமே உதறத்தள்ளி முழுவதும்  மறக்க முயற்சிப்பதாக தோன்றியது. “ஒரு நாள் காலை ஐந்து மணிக்கு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு கிளம்பி, டில்லி செல்லும் ஒரு பேருந்தில் அமர்ந்து பயணித்தார்.
 
இந்திய சைகை மொழியில் இஸ்ரானா இன்னமும் தேர்ச்சி பெறவில்லை. 2018 ம் ஆண்டு நடுவில்   SBT அவரை நோய்டாவில் உள்ள காது கேளாதோருக்கான பள்ளியில் சேர்த்தனர். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக 2020ம் ஆண்டு பள்ளி மூடப்பட்டு 2021ம் வருடம் ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டு, மீண்டும் மே மாதம் மூடப் பட்டு  விட்டது. அவருக்கு . SBT உண்முற்றோர் சான்றிதழை பெற்றுத் தர முயன்று கொண்டிருக்கிறது. இது கிடைத்தால் அரசாங்க சலுகைகளை பெற்று, திறந்த பள்ளிகூடத்தில் (open schooling) சேர்ந்து கல்வி கற்க வாய்ப்பு உள்ளது. “இஸ்ரானா மிகவும் புத்திசாலி! எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து தன் அறிவை பெருக்கி கொள்கிறார்” என்று ஷுச்சி கூறுகிறார்.  

காது கேளாதவர்கான பள்ளி மூடி இருப்பதால் இஸ்ரானா தொலை காட்சி பார்ப்பது, அதில் வரும் நகைச்சுவை காட்சிகளை ரசிப்பது மற்றும் பாடல்களை headphones மூலம் கேட்பது போன்ற செயல்களில் தன் நேரத்தை கழிக்கிறார். வேறு என்ன பொழுதுபோக்கு என கேட்டால். “சாப்பிடுவது!” என்று நகைச்சுவை ததும்ப கூறுகிறார். எல்லாமே சாப்பிடப் பிடிக்கும் எனவும் கூறினார்! SBT அவர் சார்பாக பல வீட்டு பராமரிப்பு வேலைகளுக்காக மனு போட்டுள்ளனர். இந்திய சைகை மொழியில் தேர்ச்சி பெற்றால், நன்கு கல்வி கற்று அவர் வாழ்க்கையில் நன்கு முன்னேற முடியும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
 
இஸ்ரானாவின் வாழ்வு ஒரு தொடர்கதை!

புகைப்படங்கள்:

விக்கி ராய்