Icon to view photos in full screen

"பொறுமை, மற்றும் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளும் தன்மை இவ்விரண்டும்தான் உலகத்தில் அனைவரும் பழக்கப் படுத்திக்க கொள்ள வேண்டும்."

ஊனமுற்ற குழந்தை பிறந்ததை 55 வயதான ஷாலினி சரண் குப்தா நினைவு கூறுவதை போல யாரும் செய்ய முடியாது. "எங்கள் அருமை மகள் காயத்ரி பிறந்த உடனேயே இவளுக்கு Down Syndrome என கூறி விட்டார்கள். ஷாலினி, ஷைலேந்திரா தம்பதிக்கு ஏற்கனவே அத்விகா என்னும் மகள் இருந்தால். அத்விகாவிற்கு எந்த நரம்பியல் பாதிப்பும் இல்லாமல் இருந்தது. எனினும், இனி தங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கப் போவதை அவர்கள் நன்கு உணர்ந்தார்கள்.
 
அப்போது அவர்கள் டெல்லியில் வசித்து வந்தார்கள். தங்கள் மகளின் உபாதைக்கு எங்கு சரியான சிகிச்சை கிடைக்கும் என்று நாடெங்கும் தேடினார்கள். கடைசியில் சென்னையில் உள்ள Down Syndrome Federation of India நிறுவனத்தின் நிறுவனர் ரேகா ராமசந்திரன் என்பவருடன் தொடர்பு கொண்டார்கள். மிக்க மன உளைச்சலுடன் ரேகாவுடன் தொலை பேசியில் தொடர்பு கொள்ள, அவர் உடனே டில்லிக்கு விமானத்தில் வர சம்மதித்தார். "ரேகா அவர்களும், மற்றும் பல சிகிச்சையாளர்களும் வீட்டிற்கே வந்து உதவியது எங்களுக்கு மிகவும் மன ஆறுதலை அளித்தது. அந்த கடினமான காலகட்டத்தில் எங்களுக்கு அவர்கள் அளித்த பேராதரவுக்கு நாங்கள் அவர்களுக்கு மிகவும் கடமை பட்டிருக்கிறோம்", என்று நன்றி உணர்வோடு ஷாலினி கூறுகிறார்.
 
 Down Syndrome மட்டுமின்றி,காயத்ரியின் இதயத்தில் ஓட்டைகளும் இருந்தன. அவை வருடா வருடம் ஒவ்வொன்றாக குணமாயின. நுரையீரல் பாதிக்கப் பட்டிருந்ததால் காயத்ரி நோய் நுண்மங்கள் ஒழிக்கப் பட்ட சூழலில் தங்க வேண்டி இருந்தது. இதை தவிர, கண், காதுகளில் அறுவை சிகிச்சையும் செய்து கொள்ள வேண்டி இருந்தது. Down Syndrome  தாக்குததால் என்னென்ன பாதிப்பு இருக்குமோ அவை அனைத்தையும் இலை வயதிலேயே சிகிச்சை கொடுக்க பெற்றோர் பெரும் பாடு பட்டனர்.
 
அந்த குடும்பம் அமெரிக்கா சென்று, பற்பல இடங்களில் பயணம் செய்து, பல தீவிரமான சிகிச்சைகளையும், பயிற்சிகளையும் கண்டறிந்தனர். இவற்றில் சிலவற்றை பதிவும் செய்தனர். பெற்றோர்களின் விடா முயற்சியின் பயனாக காயத்ரி அந்தந்த வயதில் செய்ய வேண்டியவை எல்லாம் நன்கு செய்து, 21 மாதத்திலே துள்ளி ஓடவும் தொடங்கினாள். ஷாலினியின் பெற்றோர்கள் அமெரிக்காவில் காலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள Jeena என்னும் நிறுவனத்தைப் பற்றி கண்டறிந்தனர். மாற்று திறனாளிகள் குழந்தைகள் குடும்பத்திற்கு ஆதரவு அளிக்கும் அந்நிறுவனத்துடன் ஷாலினி தொடர்பு கொண்டார். அங்கே இருந்த ஒரு மாற்று திறனாளி குழந்தையின் பெற்றவரான வித்யா குகன் என்பவர் மூலம் National Academy for Child Development (NACD) என்னும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டார். இந்நிறுவனம், சிறப்பு திறனாளிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பயிற்சி அளித்தது. மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும், அதன் தேவைக்கு ஏற்ப தனித்தனி முறையில் அனைத்தும் கற்பித்தனர். ஷாலினி இந்த நிறுவனத்துடன் பேசி, டெல்லியில் ஒரு கிளை துவங்க ஏற்பாடு செய்தார். காயத்ரி இவர்கள் மூலம் 5 வருடம் பற்பல பாடங்கள் கற்று, பின்னர் அனைவரும் செல்லும் பள்ளிக்கு சென்றார். "இந்த இடத்தில் எங்களுக்கு கிடைத்த நன்மைகள் சொல்லில் அடங்காது" என்று ஷாலினி கூறுகிறார்.
 
டில்லியில் உள்ள ஊனமுற்றோர்களை ஒருங்கிணைத்து நடத்தும் Vasant Valley School என்னும் பள்ளியில் காயத்ரி சேர்ந்தார். இங்கு மாற்று திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு ஆசிரியரும் இருந்தார். 7 வயதான காயத்ரி Rheumatoid arthritis பாதிப்பால் தாக்கப் பட்டிருந்தாலும், இதனால் தளர்ந்து போகாமல் துணிவுடன் போராடினார். பள்ளி பத்திரிகையில் அத்விகா எழுதியது போல "ஒவ்வொரு நாளும் என் தங்கை காயத்ரிக்கு உடலை வருடி விட்டால்தான் எழுந்திருக்கவே முடியும். இல்லை என்றால் அவள் சதைகள் எல்லாம் அசையவே அசையாது. ஆனாலும், என்னை விட அவள்தான் பள்ளிக்கு மிகுந்த ஆர்வத்துடன் வருவாள்."
 
2015ம் ஆண்டு காயத்ரி 7ம் வகுப்பு படிக்கும்போது ஷைலேந்திரா தன் சொந்த நிறுவனத்தை பெங்களூரில் நிறுவி, மாதம் அங்கு 15 நாட்கள், டில்லியில் 15 நாட்கள் இருக்க திட்டமிட்டார். ஆனால் காயத்ரி பெங்களூரிலியே வாழ வேண்டும் என்று திட்டவட்டமாக விரும்பியதால், அந்த குடும்பமே பெங்களூருக்கு குடி பெயர்ந்தது. அதே போல், காயத்ரி இனி பள்ளிக்கு செல்லப் போவதில்லை என்று மிக திடமாக இருந்தார். கணினி பயன் படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், Project Prayas என்னும் ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களுக்கான கணினி பயிற்சியில் சேர்ந்தார். இந்த பயிற்சியை முடித்த Down Syndrome இருந்த முதல் பெண் என்பது குறிப்பிட தக்கது. அதன் பிறகு Arena Multimedia என்னும் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து கணினியை செயல்படுத்தும் coding கற்றுக்கொண்டார். ஓரி ஊனமும் இல்லாதவர்களோடு சேர்ந்து படித்த இந்த பயிற்சியில் இறுதி பரிட்சையில் தன்னுடைய இணைய தளத்தையும் உருவாக்கினார். Arena Multimedia பிராந்திய தலைவர்கள் மாநாடு ஒன்றில் அந்த தலைவர்கள் coding பற்றி சரமாரியாக கேள்விகளை பொழிந்தாலும், அந்த கேள்விகளுக்கு மிக சிறப்பாக பதில் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
 
காயத்ரியின் ஆக்க பூர்வமான திறமைகள் நன்கு மிளிர தொடங்கின. அவர் குடும்ப நண்பர் ஒருவர், புகைப்படம் எடுப்பதை பற்றி காயத்ரிக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதில் மிகவும் ஆர்வம் கொண்டு, மேலும் கணினியில் ஓவியம் தீட்டுவது(digital art), canvas மீது வரைவது, acrylic art போன்ற பல கலை துறைகளில் ஆர்வம் கொண்டார். இயற்கை எழில்கள், உணவு பொருட்கள், கலை நிகழ்ச்சிகள் போன்ற பலவற்றில் புகைப்படங்கள் எடுத்தார். இவைகளில், மக்களை புகைப்படம் எடுப்பது அவருக்கு மிகவும் பிடித்தது. காயத்ரியும், ஷாலினியும் சேர்ந்து gluten மற்றும் casein போன்றவை இல்லாமல் சமைப்பது எப்படி பற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளனர். இதில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் காயத்ரி எடுத்ததே.
 
India Inclusion Foundation நடத்தும் Art for Inclusion Fellowship 2022 போட்டியில் மான்யம் வென்ற காயத்ரி மென்மேலும் தன் கலைத்திறனை நன்கு வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.


புகைப்படங்கள்:

விக்கி ராய்