Icon to view photos in full screen

“எனக்கு கல்வி கற்பிக்க மிகவும் பிடிக்கும். நீச்சல் பயிற்சி கற்று தரும் பணியை செய்ய விரும்பிகிறேன்.”

பூனா நகரில் உள்ள கௌரி கட்கில் இன்னும் சில நாட்களில் தன் 31 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அன்று பிறந்தநாள் கேக் வெட்டும் போது மெழுகுவர்த்திகளை ஊதினாலும் இனிப்பு பண்டங்களை அளவுக்கு மேல் உட்கொள்ள மாட்டார். அவர் மிகவும் ஒழுக்கம் மிக்கவர. அளவோடு சாப்பிட்டு, கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக  நிறுத்தி வைக்க பட்டிருந்த உடற்பயிற்சிகளை தவறாமல் செய்பவர். நீச்சல், நாட்டியம், போன்ற செயல்பாட்டுகளை மீண்டும் துவக்கி உள்ளார். சிறப்பு திறநாளிகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றவர் இம்மாதிரி ஆவல் கொண்டு இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை அல்லவா!
கௌரியின் பெற்றோர்கள்  சேகர் மற்றும் ஸ்னேஹா தம்பதிகளின். அவர்களுக்கு கௌரி முதல் குழந்தை. குழந்தை பிறந்த உடனேயே அக்குழந்தைக்கு Down Syndrome (DS) என்னும் பாதிப்பு இருப்பதாக மருத்துவர் மூலம் அறிந்தவுடன் ஸ்னேஹா தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை நினைவு கூர்ந்தார். அந்த மருத்துவர் இவருடைய குழம்பிய மன நிலையை உணர்ந்து, குழந்தையின் ஊனத்தை ஓரளவிற்காவது ஏற்றுக்கொண்டு, சற்று தெளிந்த மனப்பாங்கோடு ஒரு மாதம் கழித்து வருமாறு பரிந்துரைத்தார். அம்மாதிரி ஒரு மாதம் கழித்து ஸ்னேஹா வந்தபோது அந்த மருத்துவர் பற்றி ஒரு புத்தகத்தை அவருக்கு கொடுத்தார். இந்த புத்தகத்தில் Down Syndrome (DS) க்கு என்ன காரணம், எவ்வாறு மன வளர்ச்சி பாதிக்கப்படும், இதனால் குழந்தையின் வளர்ச்சி எவ்வாறு தாமதம் ஆகும், இம்மாதிரி குழந்தையை எப்படி வளர்ப்பது என பற்பல வியூகங்களுயும், தகவல்களும் அடங்கி இருந்தன. நமது ஒவ்வொரு உயிரணுவிலும் குரோமோசோம்களின் (chromosomes).இரண்டு பிரதிகள்  உள்ளன. ஆனால் கௌரிக்கு ஒரு மரபியல் முரண்பாடு காரணமாக, 21 வது குரோமோசோம் மூன்று பிரதிகளை கொண்டிருந்தது. இந்த அசாதராணமான நிலைக்கு பெயர் DS type was Trisomy 21.
ஸ்னேஹா தன் குழந்தையின் பேச்சு, மொழி மற்றும் இயக்கங்களை வளர்க்க மும்மரமாக செயல்பட தொடங்கினார். “நான் அவளுடன் அளவளாவிக் கொண்டே இருந்து, எழுத்துக்களை கற்றுக் கொடுத்து, மராத்தி வார்த்தைகளை அறிமுகப் படுத்தி, பொருட்களை காட்டி, அதன் பெயர்களை சலிக்காமல் கற்றுத் தருவேன்.” என்று நினைவு கூர்ந்தார்.  ஸ்னேஹா தன் குழந்தைக்கு உதவ முறையாக பேச்சுப் பயிற்சி (speech therapy ) கற்றார்., ஜல்கான் நகரில் வசித்து வந்த அவர்கள், காலையில் தன் குழந்தையை எல்லா குழந்தைகளும் செல்லும் மழலையர் பள்ளிக்கும் ((mainstream kindergarten மதியத்தில் சிறப்பு பள்ளிக்கும் (special school )அனுப்பி வைத்தார். கௌரிக்கு ஐந்து வயதானபோது, ஸ்னேஹா மீண்டும் கருவுற்றார். அப்போது அவர்கள் பூனா நகரில்  ஊனமுற்ற குழந்தைகளுக்கு கல்வி பயில வசதிகள் நிறைய இருப்பதால் அங்கு குடி பெயர்ந்தார்கள். .(அந்த இரண்டாவது  பெண் பல்லவி தற்போது அமெரிக்காவில் மேற்படிப்புக்காக சென்றுள்ளார்,)
முதலில் கௌரி எல்லாக் குழந்தைகளும் செல்லும் பள்ளிக்கே சென்றார். ஆனால் அங்கே மற்ற குழந்தைகள் அவரை கேலியும் கிண்டலும்  செய்து அவரை துன்புறுத்தினர். ஆனால் ஒரு சிறப்பு பள்ளியில் சேர்த்தவுடன் அவரின் நிலைமை முன்னேற தொடங்கியது. அவருக்கு பத்து வயது ஆகி இருந்தபோது, அவரின் அங்க அசைவுகளை மேம்படுத்த நீச்சல் மற்றும் நாட்டியம் கற்க பரிந்துரைத்தார். கௌரி இவ்விரண்டிலும் மிகவும் ஆர்வம் கொண்டார். தொடர்ந்து தினமும் பரத நாட்டியம் பயிற்சி செய்கிறார். 2019ம் ஆண்டு இவரே ஒரு தனி நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினார். நீச்சலில் பயற்சியாளர் ரிஷிகேஷ் தடுச்கர் இவர் மீது அதீதமான நம்பிக்கை கொண்டு ஊக்கமளித்தார். இதனால் கௌரி நீச்சலில் நன்கு தேர்ச்சி பெற்றார்.
கௌரி தன் பத்தாம் வகுப்பு பரிட்சையை national open schooling system NIOS மூலம் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 2013ம் வருடம் 12ம் வகுப்பை முடித்து கல்லூரியுலும் சேர்ந்தார். அப்போதே அவர் புகழ் பெற்ற நீச்சல் வீரராக மலர்ந்திருந்தார். 2003ம் வருடம் தேசிய ஊனமுற்றோர்களுக்கான போட்டியில் தங்க பதக்கத்தையும், 2008ம் ஆண்டு பெய்ஜிங் நகரில் வெள்ளி பதக்கமும், 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இரண்டு வெண்கல பதக்கங்களையும் வென்று பிரசித்தி பெற்று விளங்கினார். அப்போது திரைப்பட இயக்குனர் மகேஷ் லிமாயே மற்றும் தயாரிப்பாளர் உத்துங் ஹிதேன்ற தாகூர் ஊனமுற்ற குழந்தைகளை பற்றி ஒரு திரை படம் எடுக்க திட்டமிட்டு இருந்தனர். கௌரியின் சாதனைகளை பற்றி அறிந்து தடுச்கர்  மூலம் அவரை அணுகினர். அவர் கதையை திரைப் படமாக எடுக்க முயற்ச்சிகளை தொடங்கி அவரையே படத்தில் நடிக்க தேர்வும் செய்தனர்.
DS உள்ள நீச்சல் வீரராக “Yellow” படத்தில் கௌரி நடித்தார். 2014ம் ஆண்டு இப்படத்திற்கு சிறப்பு விருது கிடைத்தது.அதன் பிறகு இவர் தன் கல்லூரி மராத்தி மொழியில் பயற்சி அளிக்கும் படிப்பை மீண்டும் துவங்கி, அங்கே கலை பட்டம் பெற்றார். பின்னர் சமூகவியல் படிப்பில் பட்டமும் இந்த வருடம் ஜூலை மாதம் முடிக்க உள்ளார். “நான் நீச்சல் கற்றுத் தரும் பயிற்சியாளராக விரும்புகிறேன்” என்று எங்களுடன் மராத்தி மொழியில் பகிர்ந்து கொண்டார். இதற்கான தேர்வுகளையும் வெற்றிகரமாக முடித்து, ஏற்கனவே இரண்டு குழந்தைகல்லு நீச்சல் கற்று கொடுத்துள்ளார்.
Trisomy 21 என்ற பாதிப்பு கௌரிக்கு திரைப்படங்கள், நீச்சல், நாட்டியம் என்று மூன்றிலும் மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிக திறமையை கொடுத்து உள்ளது!

புகைப்படங்கள்:

விக்கி ராய்