Icon to view photos in full screen

"மனதில் உறுதி இருந்தால் சாதிக்க முடியாதது ஏதும் இல்லை"

துவாரிகா பிரசாத் ஜங்டே (35) நீச்சல் வீராங்கனை மற்றும் fencing ஆவார். பொதுக் குளத்தில் குளிக்கும் கிராமத்தில் வளர்ந்த அவருக்கு நீச்சல் இயல்பாகவே வந்தது. ஆனால் அவர் விருதுகளை வென்ற fencing விளையாட்டு பின்னாளில் கற்றார். துவாரிகா ஒரு சக்கர நாற்காலியில் சென்றே விளையாட்டுகளில் பங்கேற்கிறார். ஏனெனில் அவருக்கு உடல் அங்கங்களை நகர்த்துவதில் குறைபாடு (locomotor disability) உள்ளது.
 
சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் உள்ள ஹரிஹர்பூரைச் சேர்ந்த ஒரு சாதாரணமான விவசாயியின் மகனுக்கு இது ஒரு அசாதாரணமான பயணமாக இருந்தது. பானுபிரதாப் ஜங்டே மற்றும் குந்தி பாய் ஆகியோருக்கு மேலும் நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகள் மூன்றாவது குழந்தையான துவாரிகா நடக்கவே இல்லை. அவரது இயலாமை அவரை சரியான நேரத்தில் பள்ளியில் சேர்ப்பதைத் தடுத்தது. சொல்லப் போனால் ஹரிஹர்பூரில் அவரது ஊனம் இல்லாத மூத்த சகோதரர்களான ராஜேந்திரா மற்றும் பதும் செல்லக்கூட எந்த பள்ளியும் இல்லை. அதனால் அவர்கள் தங்கள் தந்தையுடன் விவசாயம் செய்யத் தொடங்கினர். இறுதியாக கிராமத்தில் ஒரு பிரத்மிக் வித்யாலயா (ஆரம்பப் பள்ளி) திறக்கப்பட்டபோது, துவாரிகா தனது தம்பி ராஜு பள்ளிக்குச் செல்லும் வயது வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ராஜூதான் அவரை முதுகில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்குச் சென்றான். சிறுவயதிலேயே தனது இயலாமையை உணர்ந்து கொண்டதால் பள்ளியில் எந்த சவால்களையும் எதிர்கொள்ளவில்லை என்று துவாரிகா கூறுகிறார்: இம்மாதிரி யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருந்ததால் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை என்று கூறினார். அவர் 5-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஆசிரியர் கிராமத்தில் வரவிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் பற்றிச் சொன்னார். இதனால் அவருக்கு சமூக நலத்துறை சார்பில் முச்சக்கரவண்டி கிடைத்தது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை முங்கேலி, ஃபாஸ்டர்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் ராஜுவுடன் விடுதியில் தங்கியிருந்து படித்தார். ஆனால் அந்த முக்கியமான ஆண்டில் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்றதால் அவர் விடுதியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, மேலும் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் தனது கல்வியை மீண்டும் தொடங்க மூன்று ஆண்டுகள் ஆயின. இது பிலாஸ்பூரில் உள்ள பல்நோக்கு பள்ளியில் (Multipurpose School) 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளையும், பின்னர் அங்குள்ள ஜமுனா பிரசாத் வர்மா கல்லூரியில் பி.ஏ.வையும் முடிக்க உத்வேகம் அளித்தது.
 
அஷ்ரயதத் கர்மசாலா தொழிற்கல்விக் கல்லூரியில் ( Ashraydatt Karmashala Vocational College), சேர்ந்தபோது துவாரிகாவின் வாழ்க்கை ஒரு நல்ல திருப்புமுனை ஏற்பட்டது. அங்கு அவர் மோட்டார் கம்பிகளை முறுக்குவது மற்றும் அச்சு இயந்திர வேலை போன்ற தொழில்களைக் கற்றுக்கொண்டார். தனது தொழிற்பயிற்சியின் போது, பிலாஸ்பூரில் உள்ள பொது நீச்சல் குளமான சஞ்சய் தரன் புஷ்கரில் சேர்ந்தார், ஏனெனில் இது ஊனமுற்றவர்களுக்கு இலவசம். அவருக்கு ஏற்கனவே நீச்சல் தெரிந்திருந்தாலும், இங்கு அவர் அனைத்து உடல் அசைவுகள் பற்றி நுணுக்கங்களை நன்கு கற்றுக்கொண்டார், பல உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வென்றார். சக்கர நாற்காலி fencing பற்றி கண்டறிந்த போது பிலாஸ்பூர் அவருக்கு புதிய வழிகளைத் திறந்து காட்டியது.
 
அவர் சக்கர நாற்காலி வாள்வீச்சைத் (fencing) தொடங்கியபோது, அது ஒரு புதிய விளையாட்டாக இருந்தது, அவர் 2014 ஆம் ஆண்டில் மேஜர் தயான்சந்த் புரஸ்கார் விருதை வென்றார், பின்னர் கனடாவில் நடந்த பாராலிம்பிக்கில் (ஊனமுற்றோர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டு) பங்கேற்றார். அங்கு அவர் எந்த பதக்கங்களையும் வெல்லவில்லை, ஆனால் சத்தீஸ்கரின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறையின் மதிப்புமிக்க ஷாஹீத் ராஜீவ் பாண்டே புரஸ்கார் விருதைப் பெற்றார். பாராலிம்பிக்கில் இருந்து திரும்பிய அவரை ஜன் விகாஸ் பரிஷத் ஏவம் அனுசந்தன் சன்ஸ்தான் Jan Vikas Parishad Evam Anusandhan Sansthan (JVPAS) (ஜே.வி.பி.ஏ.எஸ்) பாராட்டி கௌரவித்தது, ஜே.வி.பி.ஏ.எஸ் இயக்குநர் மனோஜ் ஜங்டே மிகவும் ஆதரவாக இருந்தார். அப்போதிருந்து அவர் அமைப்பில் ஈடுபட்டுள்ளார், அவர்களின் கூட்டங்களுக்குச் செல்வது மற்றும் தேவைப்படும்போது ஆட்டோரிக்ஷா சேவைகளை வழங்குவது போன்றவற்றில் ஈடுபட்டார்.
 
 
ஆட்டோ ஓட்டுவது துவாரகையின் முக்கிய வாழ்வாதாரம். சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு முன்பு தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்தார். அவர் எப்போதும் சுதந்திரமாக இருக்க விரும்புவதாகக் கூறுகிறார். இப்போது பிலாஸ்பூரில் வசிக்கும் அவர் தனது மனைவி நமீதா, அவர்களின் இரண்டு சிறிய குழந்தைகள், டோலி மற்றும் ஆதர்ஷ் மற்றும் அவரது தாயை ஆதரிக்கிறார். இவரது தந்தையும் மூத்த சகோதரர்களும் ஹரிஹர்பூரில் விவசாயத்தைத் தொடர்கிறார்கள்; படிப்பை நிறுத்திய அவரது சகோதரி சரோஜ் அவர்களுடன் தங்குகிறார்.
 
இடது காலில் லேசான ஊனமுற்ற நமீதாவை அவர் திருமணம் செய்த விதம் ஒரு சுவாரஸ்யமான கதை. ஒரே வயதான இந்த இருவரும் கல்லூரியில் சந்தித்தனர். இவரது தந்தை ஒரு தலைமை ஆசிரியராக இருந்தார், மேலும் இவர் மூன்று சகோதரிகளில் இளையவர். 2014 ஆம் ஆண்டில், அவர் தனது பி.ஏ இறுதி ஆண்டில் இருந்தபோது, அவரும் வாள்வீச்சு (fencing) கற்க தொடங்கினார், அப்போதுதான் அவர் துவாரிகாவை நன்கு அறிந்தார். "அவரது புத்திசாலித்தனம், அவரது நடத்தை, அவரது விளையாட்டு மற்றும் அவரது தைரியம் ஆகியவற்றால் நான் ஈர்க்கப்பட்டேன்" என்று அவர் கூறுகிறார். "நாங்கள் ஒன்றாக பல போட்டிகளில் பங்கேற்றோம்."
 
இவர்களின் இந்த உறவை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. எனவே, 2020 ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கின் போது, அவர் தனது பெற்றோரிடம் சொல்லாமல் தான் மட்டும் அவரது வீட்டிற்கு வந்து திருமணம் செய்து கொண்டார். ஊரடங்கு காரணமாக, அவரது பெற்றோரால் அவளைத் தேட முடியவில்லை! அவரது பெற்றோர் அவளுடன் பேசுவதையும் தொடர்பு கொள்வதையும் நிறுத்தினர், ஆனால் அவர் முதல் குழந்தையாழ் கர்ப்பமாகியபோது, அனைத்தும் மன்னிக்கப்பட்டன, அவர்களின் உறவு இப்போது மீண்டும் சுமுகமான பாதைக்கு திரும்பியுள்ளது.
 
துவாரிகாவும் அவரது ஆதரவான குடும்பத்தினரும் இருப்பது தனது அதிர்ஷ்டம் என்று நமீதா கூறுகிறார். அவர் அடிக்கடி ஹரிஹர்பூருக்கு வருகை தருகிறார் (அதனால்தான் விக்கியின் போட்டோ ஷூட்டின் போது துவாரிகா தனியாக இருந்தார்). தான் அங்கு செல்லும்போது, தனது அண்ணிகள் தன்னை சமைக்க அனுமதிப்பதில்லை என்றும், படிக்க ஊக்குவிப்பதாகவும், "என் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வீட்டில் 20 பேர் இருக்கிறார்கள்" என்றும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்