Icon to view photos in full screen

"நான் மேல்கல்வி படிக்கவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும், என்னுடைய தற்போதைய வேலையை மிகவும் விரும்புகிறேன். இதனால் என் குடும்பத்தை பராமரிக்க முடிகிறது."

Dwarfism என்னும் பாதிப்பால் உடல் வளர்ச்சி குன்றி இருந்த தர்ஷனா ஷிண்டேயை பார்த்து "குள்ளி" என்று பலர் எள்ளி நகையாடினார்கள். ஆனால் தர்ஷனாவின் சாதனைகளை கண்டு அவர்கள் வாயடைத்துப் போயினர். கர்நாடகாவில் உள்ள பெலகாவி (முன்னாளில் பெல்காம்) என்ற மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு 26 வயதாகிறது. பெங்களூரில் தன்னுடைய பணியில் வரும் சம்பளத்தை கொண்டு தன் குடும்பத்தின் சிறிய ஒரு படுக்கை அறையும், சமையல் அறையும் இருக்கும் வீட்டை புதுப்பித்தார். மண் தரைக்கு பதிலாக ஓடுகள் போட்டு புதுப்பித்தார்.
 
தர்ஷனாவின் தந்தை மாருதி ஷிண்டே மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சதாரா நகரிலிருந்து மதபாவி என்னும் கிராமத்திற்கு குடி பெயர்ந்தார். தினக்கூலி வேலை செய்து சம்பாதித்த பணம் அனைத்தையும் குடிப் பழக்கத்தால் இழந்தார். அதனால் அவர் மனைவி (தர்ஷனாவின் தாய்) வித்தா பாய் குடும்ப பாரத்தை சுமந்து நான்கு குழந்தைகளையும் , தன்னையும், தன கணவரையும் பராமரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. விவசாய வேலை செய்யும் அவருக்கு, நாள் தோறும் 50 அல்லது நூறு ரூபாய்தான் கிடைக்கும். இதில் குழந்தைகளுக்கு சரியான உணவு அளிக்கவே திண்டாடுவார். "பல நாட்கள் நாங்கள் மோர் மட்டும் குடித்தே வாழ்ந்திருக்கிறோம்." என்று தர்ஷனா நினைவு கூர்ந்தார்.
 
தர்ஷனாவிற்கு 4 வயது ஆனபோது விடாமல் உடல் வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். இதனால், அவர் தாயார் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றார். அந்த மருத்துவர் "குழந்தைக்கு எலும்புகள் வலுவுடன் இல்லை என்பதால் வளர்ச்சி சரியாக இல்லை" என்று பரிந்துரைத்தார். முதலில் சம நிலையில் நிற்பது, மற்றும் பொருட்களை பிடித்துக்கொள்வது போன்ற செயல்பாடுகள் கடினமானாக இருந்தாலும், நாளடைவில் இவைகளை ஓரளவு செய்ய முடிந்தது. இதன் பின்னர் பள்ளிக்கு செல்லவும் தொடங்கினார்.
 
ஏழாம் வகுப்பு படிக்கும்போது பத்தாம் வகுப்பு முடித்திருந்த அவர் சகோதரி திருமணம் செய்து கொண்டு சாங்கிலி நகருக்கு சென்று விட்டார். தாயும் வேலைக்கு செல்வதால், தன்னைவிட 10 வயது இளையவளான தங்கையையும், 11 வயது சிரியவனான தம்பியையும் வீட்டில் பராமரிக்க வேண்டிய பொறுப்பு தர்ஷினிக்கு வந்தது. அனைவருக்கும் சமைத்து, மத்திய உணவுக்கு கொடுத்தனுப்புவது போன்ற வேலைகள், மற்றும் தந்தை குடித்து விட்டு செய்யும் கொடுமைகள் இவைகளால் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆயினும் பத்தாம் வகுப்பு பரிட்சையில் தேர்வு பெற்று கல்லூரியில் PUC படிக்க சேர்ந்தார். ஆனால் PUC பரீட்சை 2014ம் ஆண்டு தேர்ச்சி பெறவில்லை என்பதால் படிப்பு தொடர்வதில் ஆர்வம் இருக்கவில்லை.
 
2015ம் ஆண்டு யாரோ ஒருவர் சொன்னதால், பெங்களூருக்கு சென்று ஒரு வருட அலுவலுக நிர்வாக பயிற்சி (Office Management) பெற்றார். அங்கே கணினிகளை பயன் படுத்தவும் கற்றுக் கொண்டார். அங்கே இருந்த ரேகா என்னும் ஆசிரியர் உதவியுடன் BPO துறையில் இருக்கும் Vindhya E-Infomedia நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். 20 நாள் பயிற்சிக்கு பின், முழு நேர வேலையில் சேர்ந்தார். 2016ம் ஆண்டு ரூபாய் 6900 மாத சம்பளத்தில் சேர்ந்த அவர், தற்போது அதற்கு இரண்டு மடங்கு சம்பளத்தை பெறுகிறார்.
 
காலை 930க்கு பணி துவங்கி மாலை 730 மணி வரை வேலை செயகிறார். அலுவலகத்திற்கு அருகிலேயே, இருவருடன் ஓர் அறையில் வசிப்பதால், நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டியதில்லை. விந்தியாவினால்தான் தான் நன்கு மற்றவர்களுடன் பேசவும், பழகவும் கற்றுக் கொண்டு உள்ளதாக நன்றியுடன் கூறுகிறார். வாடிக்கையாளர்களுடன் பேசி, அவர்கள் DTH சந்தாவை செலுத்த வைப்பது மற்றும் கடன் தவணை செலுத்த நினைவு படுத்துவது போன்றவைகளை மிகவும் ஆர்வத்துடன் செயகிறார்.   ஞாயிறு அன்று பணிக்கு வரவும் அவர் தயங்குவதில்லை. அதற்கு பதிலாக மற்றொரு நாள் விடுமுறை கிடைக்கிறது.
 
மதபாவி கிராமத்தில் வாழ்க்கை ஒரே மாதிரி தொடர்கிறது. வித்தா பாய் இன்னும் வயல்களில் வேலை செய்து தன் கணவரையும், 10ம் வகுப்பு படிக்கும் மகனையும் பராமரித்து வருகிறார். தர்ஷனாவின் இளைய சகோதரி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவ்வப்போது தர்ஷனா தன் மூத்த சகோதரியை சாங்கிலி சென்று சந்திக்கிறார். "அந்த ஊரில் உள்ள vada paav எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று கூறுகிறார்! பிடித்த இனிப்பு பண்டம்? குலாப் ஜாமூன். பிடித்த பொழுதுபோக்கு? பாட்டு கேட்பது, பாடுவது. மேலும், ஒவ்வொரு நாளும் தூங்க செல்வது முன்னால் Crime Patrol என்னும் தொலைக்காட்சி தொடரை பார்ப்பது!

புகைப்படங்கள்:

விக்கி ராய்