Icon to view photos in full screen

"மதிய வேளைகளில் நான் ஒரு உணவகத்தில் வேலை செய்கிறேன். எனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு என் முதலாளி எனக்கு முழு மதிப்பெண்கள் கொடுக்கிறார்."

சந்தர்ப சூழ்நிலைகள் உங்களை மீண்டும் மீண்டும் தோற்கடித்தால் அவைகளை நீங்களே தோற்கடிக்க வேண்டும். ரேணு பண்டாரி 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான (\<https://sakshambhavansaashray.org/about-aashray.html>) தொழில் மற்றும் மறுவாழ்வு மையமான சாக்ஷத்தை நிறுவ மற்ற நான்கு பெண்களுடன் சேர்ந்தார்.
 
பண்டாரிகள் அமிர்தசரஸைச் சேர்ந்தவர்கள், அங்கு ரேணு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக பிபிகே டிஏவி கல்லூரியில் அரசியல் அறிவியல் பேராசிரியராக பணியாற்றினார். டாக்டர் ஏ.கே.பண்டாரி ஒரு ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணர், அங்கு ஒரு மருத்துவமனையை (\<http://bhandarienthospital.in/index.html>) நடத்தி வருகிறார்.
 
டாக்டர் பண்டாரி கூறுகையில், "பரத் (இப்போது 31 வயது) மூன்று மாத குழந்தையாக இருந்தபோது, அவர் கடுமையான பியோஜெனிக் (pyogenic meningitis) என்கிற மூளைக்காய்ச்சலால் தாக்கப் பட்டான். மிகவும் நோய்வாய்ப்பட்டு இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் இருந்தான்." இதையடுத்து, அவனுக்கு அறிவுத்திறன் குறைபாடு (intellectual disability) ஏற்பட்டது. இயல்பான உரையாடலை நடத்த முடிந்தாலும், ஆனால் அவனது வளர்ச்சி மைல்கற்கள் தாமதமாகின. "அவருக்கு அடிக்கடி வலிப்பு வரும். இது வேதனையாக இருந்தது, நாங்கள் அடிக்கடி அவனது பள்ளிக்கு விரைந்து செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஒன்பது வயதிற்குப் பிறகு அவை நின்றுவிட்டன."
 
ஆரம்பத்தில் பரத் பிரதான பள்ளிகளில் (mainstream schools) சேர்க்கப்பட்டார். ஆனால் இதை சமாளிக்க கடினமாக இருந்தது. ரேணு கூறுகையில், "நான் அவனது படிப்புக்கு உதவியாக இருந்தேன். 13 வயதில்தான் வார்த்தைகள் எழுதக் கற்றுக்கொண்டான். பின்னர் அவனை டெல்லிக்கு அனுப்பி என் சகோதரியின் வீட்டிற்கு அனுப்பி, குர்கானில் உள்ள பல்லவாஞ்சலி பள்ளி என்ற சிறப்புப் பள்ளியில் சேர்த்தோம். அங்கு அவனுக்கு கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்களையும் கற்றுக் கொடுத்தனர். இது அவனுக்கு பெரும் தன் நம்பிக்கையைக் கொடுத்தது மற்றும் தன்னைப் பற்றி நன்றாக உணர உதவியது. அங்குள்ள டிரைடண்ட் ஓட்டலில் அவர்களுக்கு திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
 
இருப்பினும், பண்டாரி தம்பதியினர் டெல்லியில் "அதிகப்படியான வெளிப்பாடு" குறித்து கவலையடைந்து அடுத்த ஆண்டு அவரை மீண்டும் அமிர்தசரஸுக்கு அழைத்து வந்தனர். பரத் அமிர்தசரஸில் உள்ள எம்.கே ஹோட்டல்களில் சேர்ந்தார், இது விமானங்களுக்கு சேவை செய்யும் இடமாகும், அங்கு அவர் ஐந்து ஆண்டுகள் சாண்ட்விச் தயாரிக்கவும் கட்டவும் உதவினார். ரேணு கூறுகையில், "அவரது அர்ப்பணிப்பு மற்றும் கவனச்சிதறல் இல்லாததால் அவரது முதலாளி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். பரத்துக்கும் இந்த இடம் பிடித்திருந்தது; அது அவனது தன்னம்பிக்கையை வளர்க்க உதவியது. ஆனால் அத்தகைய குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள். எளிதில் ஏமாற்றப் படுவார்கள். யாரோ அவனை போதைப்பொருள் குறித்து தவறாக வழிநடத்த முயன்றனர், ஆனால் அவன் எல்லாவற்றையும் என்னுடன் பகிர்ந்து கொண்டதால், நாங்கள் ஆபத்தை கண்டறிந்து அவனை அங்கிருந்து வெளியே எடுத்தோம்."
 
அடுத்ததாக ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு வருடம் வேலை பார்த்தார். "அவன் மீண்டும் மீண்டும் ஒரே செயலை செய்வதில் மிகவும் திறமையானவன்", என்று ரேணு கூறுகிறார். "அவன் பெரும்பாலும் சலவைத் துறையிலும், அவனால் முடிந்த மற்ற இடங்களிலும் உதவினான். அங்கு வேலை செய்ய அவன் மிகவும் ஆர்வமாக இருந்தான். முதலாளி காலை 6 மணிக்கு வரச் சொன்னால் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகத் தொடங்குவான். இருப்பினும், அவனது பலவீனம் காரணமாக, தவறான சூழ்நிலைகள் இருந்தன" என்று கூறினார்.
 
பண்டாரிகள் பரத்தை தங்கள் மருத்துவமனையில் உதவி செய்ய வைப்பதன் மூலம் அவரை வீட்டிற்கு நெருக்கமாக வைத்திருக்க முடிவு செய்தனர், அங்கு அவர் படுக்கைகள் மற்றும் பலவற்றைச் செய்ய உதவினார். கோவிட்-19 உலகை உலுக்கியபோது, முகக் கவசங்களை தயாரித்து பேக்கிங் செய்யும் பணி பரத் வசம் ஒப்படைக்கப்பட்டது. இது அவருக்கு ஒரு இலக்கையும், நோக்கத்தையும் கட்டமைப்பையும் கொடுத்தது.
 
"சாக்ஷம்" பற்றி யோசனை மார்ச் 2020 இல் தொடங்கி, நவம்பர் 2021 இல் முடிக்கப்பட்டு ஜனவரி 2022 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. "18 மாதங்கள் ஆகிவிட்டன, ஒவ்வொரு நாளும் ஒரு ஆசீர்வாதம் போல உள்ளது." இந்த பெண்களுக்கு பாரதிய வித்யா பவன் தலைவர் மஹேந்திரு உதவினார். "அவர் எங்கள் போராட்டங்களைப் பற்றி அறிந்திருந்தார், மையத்தை அமைப்பதற்கான இடத்தை எங்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்", என்று ரேணு கூறுகிறார். அந்தப் பெண்களிடம் பொறுப்பை ஒப்படைத்து, அவர்கள் விரும்பியபடி சக்ஷத்தை நடத்தச் சொன்னார். "தாய்மார்களுக்கு எப்போதுமே கடினமான நேரம் இருக்கும், அடுத்து என்ன செய்வது என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். இம்மையத்தில் மாற்றுத் திறனாளிகள் 22 பேருக்கு பயிலரங்குகள் (workshops) மற்றும் அமர்வுகள் (sessions) மூலம் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு பாரதிய வித்யா பவன் மூலம் நிதியளிக்கப்படுகிறது, மேலும் அன்றாட நிர்வாகத்தை எனது சகோதரி சமன் மெஹ்ரா நிர்வகிக்கிறார். சாக்ஷம் நமக்கு ஒரு தெய்வம்" என்றார்.
 
இப்போதெல்லாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அங்கு தனது நேரத்தை செலவிடும் பரத், அங்குள்ள குழந்தைகளுடன் நன்கு பழகுகிறார். "குழந்தைகள் விரும்பும் ஒரு நல்ல நடன இயக்குனரும் சமீபத்தில் எங்களுக்குக் கிடைத்தார்."
 
மதிய உணவுக்குப் பிறகு, அவர் ஊனமுற்ற மக்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற தன்னார்வு தொண்டு அமைப்பான மிட்டி கஃபே க்கு \<https://www.mitticafe.org/> வேலைக்குச் செல்கிறார். மாலை 3.45 மணி முதல் இரவு 7.30 மணி வரை அங்கு வேலை செய்கிறார். அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக அவரது முதலாளி அவருக்கு 10/10 கொடுக்கிறார்!"
 
சில ஆண்டுகளுக்கு முன்பு, ரேணுவும் பிற தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்காக ஒரு கலந்தாலோசிக்கும் குழுவை உருவாக்க முடிவு செய்து, அவர்கள் பிணைக்கும் வகையில் சந்திப்புகள், கதை சொல்லும் அமர்வுகள் மற்றும் விளையாடவும் ஏற்பாடு செய்யத் தொடங்கினர். அவர் குறிப்பிடுவது போல, "அவருக்கு அதிக நண்பர்கள் இல்லை, ஏனெனில் நண்பர்களும் உறவினர்களும் அத்தகைய குழந்தைகளை ஆதரிப்பதில்லை. அவன் இன்பமாக ஒரு குழந்தை, ஆனால் கட்டமைப்பு தேவை. கட்டமைக்கப்படாத சூழ்நிலைகளில் மட்டுமே அவனது நடத்தை பிரச்சினைகள் வெளிப்படுகின்றன."
 
பரத் பாடுவதை விரும்புகிறான். "தனது தந்தையை போல அவனும் நல்ல பாடகன். அவனுக்கு முறைப்படி பயிற்சி அளிக்க பல முறை முயற்சித்தோம், ஆனால் அவர் மேடையில் பாடியிருந்தாலும் வீட்டில் பயிற்சி செய்யவில்லை. அவனுக்கு மிகவும் பிடித்தது, 'கல் ஹோ நா ஹோ' பாடல்."
 
சல்மான் கான் ரசிகரான பரத், பிரபலமான எஸ்.கே பிரேஸ்லெட்டை அணிந்துள்ளார். சமீபத்தில் கஃபேயில், அவரது முதலாளி அவருக்காக ஒரு கேக்கை ஆர்டர் செய்தார், அதில் அவரது மற்றும் சல்மான் கானின் படம் இருந்தது. அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. எங்களுக்கு சமீபத்தில் லட்டு என்ற பிரெஞ்சு புல்டாக் (French bulldog) கிடைத்தது, அதனுடன் விளையாடுவதையும் அவர் விரும்புகிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்