Icon to view photos in full screen

“எது செய்தாலும் முழு முயற்சியுடன் முனைவாய்! மற்றவர் பின்பற்ற ஒரு பாதையை வகுத்துக் கொடு!”

42 வயதான அர்மன் அலி கடந்த இரண்டு மாதங்களாக டில்லியில் வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் கிடைத்த பாடில்லை. ஏன்? எந்த வீட்டிலும் சக்கர நாற்காலி பயன் படுத்த வழியே இல்லை. “வீட்டு தரகர்கள் யாருமே  இதைப் பற்றி யோசிப்பது கூட இல்லை. சலுகைகளும், செல்வாக்கும், உரிமைகளும் உள்ளவர்களுக்கே இந்த நிலை என்றால் பின் தங்கிய, சாதாரண, ஊனமுற்ற ஏழை மக்களின் கதி என்ன? சமூகத்தால் ஓரம் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்ட எந்த பிரிவினருக்குமே இதே கதிதான்!” என்று கூறுகிறார்.

நாட்டின் அனைத்து ஊனமுற்றோர்களின் நலனுக்கும், வேலை வாய்ப்புக;ளுக்கும் உரிமைகளுக்கும் நடத்தப்படும் நிறுவனமான the National Centre for Promotion of Employment for Disabled People (NCPEDP) யின் தலைவரான ஒருவரே  இதை கூறுகிறார் என்றால், அதில் எவ்வளவு உண்மை அடங்கி இருக்கும்! ஊனமுற்றோர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து, அவைகளை நிலை நாட்ட மிகவும் முக்கிய காரணமாக இருந்த மறைந்த ஜாவேத் அபிடி நிறுவிய இந்த இந்த நிறுவனம் இன்றும் ஊனமுற்றவர்களுக்காக மகத்தான சேவை புரிந்து வருகிறது!

“சில கட்டிட பொறியாளர்கள் ஊனமுற்றோர்களுக்கு ஏதுவாக இருக்கும் வழிகாட்டு முறைகளை பின்பற்ற மேலெழுந்த வாரியாக முயற்சி எடுக்கின்றன. ஆனாலும் இவை சக்கர நாற்காலியை கட்டிடத்திற்குள் தள்ள வழி வகுக்கும் சரிவு மேடையோடு நின்று விடுகின்றன. இந்த மேடைகளும் சரியான கோணத்தில் இல்லாததால், பயன் படுத்த முடியாமல் உள்ளன. மேலும் ஊனமுற்றோர்கள் என்றால் சக்கரநாற்காலியில் உள்ளார்கள்தானா? கண் தெரியாதவர்கள், மற்றும் மனவளம் குன்றியவர்களின் நிலை என்ன?” என்று இவர் கேட்கிறார்.

அர்மன் கௌஹாதி நகரில் cerebral palsy என்ற உபாதையுடன் பிறந்தார். அந்த ஊரில் ஊனமுற்றோர்களுக்கு ஏதுவாக எந்த பள்ளியும் இல்லை. இதனால் இவர் கல்விக்கு பற்பல முட்டுகட்டைகள் இருந்தன. உடல்நிலை மிக மோசமானதால் ஏழாம் வகுப்பிற்கு பிறகு பள்ளியில் தொடர முடியவில்லை. தனிமையிலும், மன உளைச்சலாலும் அவதி உற்றார். ஆனால் இவர் தந்தை அர்மானை திறந்த பள்ளிக்கூட முறையில் (NIOS programme of open schooling ) கல்வி கற்க வைத்தது மட்டுமின்றி, தன்னுடைய கட்டட தொழிலிலும் பயிற்சி அளித்தார். சிறு வயதிலேயே பணத்தை நன்கு கையாளுவது , நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கவனித்துக் கொள்வது , மக்களுடன் கலந்து தொடர்பு கொண்டு, கலந்து உறவாடுவது போன்ற வாழ்க்கைக்கு அத்தியாவசியமான திறமைகளை கற்றறிந்து தேர்ச்சியும் பெற்றார். பின்னர், தொலைதூர கல்வி மூலாமாக Manipal Academy for Higher Education கல்லூரியின் வாயிலாக தகவல் தொழில் நுட்ப துறையில் பட்டம் பெற்றார்.

“நான் என் வாழ்வில் ஒரு முறை கூட எந்த வேலைக்கும் விண்ணப்பம் செய்தது இல்லை” என்று பெருமிதத்துடன் கூறினார்! 19 வயதில் அபிடி அவர்களை சந்தித்தது இவர் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மைல்கல். அதுவரை, “ஊனம்” என்ற சொல்லிற்கும், தனக்கும் தொடர்பே இல்லை எனவே நினைத்திருந்தார். இதற்கு மூல காரணம் இவரின் குடும்பத்தினர் இவரை இவரின் சகோதரகளுடன் எந்த வேறுபாடோ பாரபட்சமோ இல்லாமல்தான் வளர்த்தார்கள். இதனால் “எனக்கு இருப்பது ஒரு சிறிய நோய்தான். இது குணப் படுத்திவிட்டால், நானும் எல்லோரைப்போல நடக்க முடியும்” என்றே நினைத்திருந்தார். தான் ஊனமுற்றவன் என்ற எண்ணம் அவருக்கு ஒரு புது உத்வேகத்தையும் இலக்கையும் கொடுத்தது.

அர்மன் ஊனமுற்றோர் துறை மேம்பாட்டிற்கு தன்னை முழுவது அற்பந்து கொண்டார். என்ற நிறுவனத்தில் பணி புரிந்து, பின்னர் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (executive director) பதவியையும் அடைந்தார். இன்போசிஸ் நிறுவனத்தின் BPO துறையில்  அனைவருக்கும் வேலையில் சம வாய்ப்பு அளிக்கும் முயற்சியில் முக்கிய பங்கு ஆற்றினார். அபிடி தொடங்கிய ஊனமுற்றோர் உரிமைக்கு குரல் கொடுக்கும் NCPEDP நிறுவனத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டு, 2016ம் ஆண்டு “Rights of PwD Bill “ சட்டமாக முக்கிய காரணமாக இருந்தார். அபிட் அவர்களின் அகால மரணத்திற்கு பிறகு 2018ம் ஆண்டு NCPEDP யின் நிர்வாக இயக்குனராக பதவி ஏற்றார்.

யாராவது இவரின் ஊனத்தின் காரணமாக பாகுபாடோ பாரபட்சமோ காண்பித்தால் சும்மா விடமாட்டார்! தன் சொந்த உரிமையகு போராடும்போது, அனைத்து ஊனமுற்றோர்களுக்கும் சலுகை கிடைக்க ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று இவர் நன்கு உணர்ந்திருக்கிறார். 2011 ம் ஆண்டு கௌஹாதி உயர் நீதி மன்றத்தில் ஒரு சரவதேச உடற்பயிற்சி கூடம், மற்றும், மாநில, மத்திய அரசுகள் மீது வழக்கு தொடுத்தார். காரணம்? அந்த கூடத்தில் அங்கத்தினர் ஆவதற்கு சமர்ப்பித்த விண்ணப்ப பத்திரிகை மீது ஒரு முடிவும் எடுக்காமல் இழுபறி செய்ததுதான்! “இதனால் நான் துவண்டு போய், இந்த விண்ணப்பதையே திரும்பி பெற்றுவிடுவேன் என்று நினைத்தார்களோ என்னவோ? அல்லது ஒரு வேளை என்னை பார்த்தால் மற்றவர்களுக்கு கசப்பாக இருக்கும் என்பதால்தானே என்னவோ!” என்று மனக்கசப்புடன் கூறுகிறார். 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு அர்மனுக்கு சாதகமாக விளங்கியது மட்டுமின்றி அந்த உடற்பயிற்சி கூடத்தின் மீதும், மாநில அரசாங்கத்தின் மீதும் அபராதமும் விதிக்கப் பட்டது.

2017ம் ஆண்டு ஆண்டு ஒரு திரை அரங்கத்தில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காததால் இவரை ஒரு பாகிஸ்தான் நாட்டவர் என்று சிலர் ஏசியபோது இதைப் பற்றி சமூக வலைதளங்களில் பிரகடனப் படுத்தினார். RPwDA Act என்னும் ஊனமுற்றோர் உரிமைகளை நிலைநாட்டும் சட்டத்தின்படி ஊனமற்றவர்களை துன்புறுத்தவோ அவமானப் படுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். 2019 ம் ஆண்டு விமான நிலையம் செல்ல ஊபர் டாக்ஸிக்கு பதிவு செய்தபோது, இரண்டு ஓட்டுனர்கள் இவரின் சக்கர நாற்காலியை எடுத்து செல்ல மறுத்து விட்டார்கள். இதனால் விமான பயணத்தையும் கைவிட வேண்டியதாயிற்று. இது குறித்து இவர் டில்லி ஊனமுற்றோர் ஆணையத்தின் தலைவரிடம் புகார் அளித்ததின் மேல், ஊபர் நிறுவனம் அபராதம் கட்ட நேர்ந்தது.

ஒளிவு மறைவோ, தாட்க்ஷன்யமோ இல்லாமல் இருக்கும் இவர், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் அல்ல! துப்பாக்கியில் இருந்து வரும் குண்டு போல குறி தவறாமல் இருக்கும்! இவர் விளையாட்டுகளிலும் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் பெற்றது மிகவும் பொருத்தம்தான் அல்லவா! அரசாங்கத்தின் மெத்தனத்தையும், அரசாங்க அதிகாரிகளின் அணுகுமுறைகளையும் கடுமையாக கண்டிக்கும் இவர், சராசரி மனிதனின் அலட்சிய மனப்பான்மையை அவர்களின் அறியாமை எனக் கூறி மன்னித்து விடுகிறார். “அவர்கள் ஊனமுற்றோர்களை வெறுக்கிறார்கள் என்பதில்லை. அவர்களின் இதைப்பற்றி விழிப்புணர்ச்சியே இல்லை” என கூறினார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்