Icon to view photos in full screen

“என்ன ஊனம் இருந்தாலும், மனம் மட்டும் வலிமையுடனும் உறுதியுடனும் இருந்தால் போதும் – நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.”

நிஜ வாழ்வில் ஊனமுற்றோர்களே ஏன் திரைப்படங்களில் ஊனமுற்ற கதா பாத்திரங்களில் நடிக்க கூடாது? இந்த கேள்வி உலகில் உள்ள பல்வேறு ஊனமுற்றோர்கள் மனதில் தேங்கி நிற்கிறது. கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் நகரில் உள்ள கிழக்கம்பலம் தொகுதியில் paraplegia பாதிப்பால் சக்கர நாற்காலியை சார்ந்து இருக்கும் 32 வயதான அஞ்சு ராணி ராய் இரண்டு வெற்றிகரமான மலையாள திரைப்படங்களில் ஊனமுற்ற கதா பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்!
 
அஞ்சு பிறவியிலேயே தண்டு வடம்,(spinal cord ) பாதிப்புடனும், உருக்குலைந்த பாதத்துடனும் பிறந்தார். 2019ம் வருடம் நவஜீவன் அறக்கட்டளை நிறுவனர் பீ. யூ. தாமஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “ஒரு நல்ல கோட்டயம்காரன்” என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அஞ்சு படத்தின் கதா நாயகனின் தத்து எடுக்கப் பட்ட மகளின் பாத்திரத்தில் நடித்தார். “படத்தின் இயக்குனர் திரு சைமன் குருவில்லாவும், மற்றும் படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருமே என்னிடம் மிக்க அன்போடும், ஆதரவோடும் நடந்து கொண்டார்கள். இதற்கு நான் என்றென்றும் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன்!” என்று கூறுகிறார் அஞ்சு. சிஜு விஜயன் இயக்கி 2021ல் வெளி வந்த “இன்ஷா” என்னும் படத்தில் அஞ்சு ஒரு கலை மாணவியின் பாத்திரத்தில் நடித்தார். இப்படத்தின் கதாநாயகி இன்ஷாவின் பாத்திரம் சக்கர நாற்காலியிலேயே இருந்து எங்கோ இருக்கும் கடலின் அழகை மனத்தால் ரசிக்கும் ஒரு 13 வயது பெண். இந்த படத்தின் இயக்குனர் சிஜி விஜயன் “spinal muscular atrophy” என்னும் முதுகெலும்பு தசைச் சிதைவால் தாக்கப்பட்டவர்.
  
“தனல்” என்ற பக்கவாதம் உள்ளவர்களுக்கு ஆதரவு அளிக்கும் சங்கத்தில் ஒரு அம்சமான “Freedom on Wheels” என்னும் நாடகக் குழுவின் அங்கத்தினராக அஞ்சு பங்கேற்றிருக்கிறார்.இதன் மூலம் “சாயா” என்ற ஒரு நாடகத்தில் பங்கேற்றார். இந்த நாடகத்தின் தனித்தன்மையான அம்சம் என்னவென்றால், இதில் நடிக்கும் அனைவருமே வாழ்க்கையில் சக்கர நாற்காலியை சார்ந்து இருப்பவர்கள்! வீ. டீ. ரதீஷ் இயக்கயுள்ள இந்த நாடகம், ஊனத்தைப் பற்றியே அல்ல! ஒரு ஓவியனின் வாழ்வில் நடக்கும் சுக துக்கங்களை நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தும் கதை இது!
அஞ்சு இரண்டு விநோதனமான கலைகளில் தேர்ச்சி பெற்று, தக்க சமயத்தில் அவரின் நாடக குழுவின் கலை நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெறுவார். இதி முதலாவது ஜாடியை அனாயாசமாக தூக்கி பிடிப்பது: இரண்டு 1.25  கிலோக்ராம் எடையுள்ள ஜாடிகளை  கட்டை விரல், ஆள் காட்டி விரல் இரு விரல்காளால் மட்டுமே தூக்கி அதை 75 வினாடிகள் அப்படியே அசையாமல், விழாமல் பிடித்து காட்டி உலக சாதனையை படைத்தார். இரண்டாவது “mirror-writing” எனப்படும் கலை: ஒவ்வொரு கையில் ஒரு பேனாவை பிடித்து, ஒரே சமயத்தில் கரும்பலகையில் இரண்டு பேனாக்களினாலும் எழுதி, வலது பக்கம் உள்ள எழுத்துக்களின் கண்ணாடி பிரதிபலிப்பாக இடது பக்கம் உள்ள எழுத்துக்கள் இருக்கும்படி செய்வார்! பார்ப்பவர்கள் அனைவரையுமே இந்த செயல்திறன்கள் வியப்பில் ஆழ்த்தும்! “இவைகளை நான் முதலில் தொலைகாட்சியில் கண்டேன். இவை சுவாரஸ்யமாக இருந்ததால் பழக்கி பார்த்து தேர்ச்சியும் அடைந்தேன்” என்று கூறுகிறார்.
 அவர் வளர்ந்த பொன்முடி கிராமம் மலை பிரதேசமானதால் மிக செங்குத்தான சரிவுகள் மிகுந்ததாக இருந்தது. இதனால் சக்கர நாற்காலியில் செல்வது மிக மிக கடினமாகவே இருந்தது. அதனால் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணி புரியும் அவர் தந்தை ஜீ, கே. ராய் ஆரம்பப் பள்ளி காலங்களில் அவரை பள்ளிக்கு தோள் மேல் தூக்கியே செல்வார். நான்காம் வகுப்புக்கு மேலே கற்றுக்கொடுக்கும் பள்ளி மிக தொலைவில் இருந்ததால், வீட்டில் இருந்தவாறே கல்வி கற்று, தொலைதூர கல்வி முறையிலேயே சமூகவியல் துறையில் பட்டமும் பெற்றார்.
சில காலம் “fashion model” ஆக பணி புரிந்து உள்ளார். இதைத்தவிர, “டெர்ரா கோடா”, “பேப்பர் மாஷ்” போன்ற நூதனமான பொருட்கள் கொண்டும், வண்ண வண்ண மணிகளை கொண்டும் மிக அழகான ஆபரண நகைகளை கலை நயத்துடன் செய்யும் திறமை பெற்றிருந்தார். “என்னுடைய அத்தனை சாதனைகளுக்கும் என் தந்தை ஜாய், தாய் ஜெஸ்ஸி, இளைய சகோதரிகள் ஆஷ்லி மற்றும் அமல் அவர்களின் திடமான அன்பும் ஆதரவும்தான் முக்கிய காரணம்!” என்று நன்றி உணர்வுடன் கூறுகிறார்!

புகைப்படங்கள்:

விக்கி ராய்