Icon to view photos in full screen

"எங்கள் குழந்தைகள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்களா அல்லது எங்கள் பெற்றோர்களை போல எங்களை கை விட்டு விடுவார்களா என்று எங்களுக்கு தெரியாது!"

அஸ்ஸாம் மாநிலத்தின் தேநீர் தோட்டங்கள் தன்னை சூழ்ந்து இருப்பது மட்டுமே ஆனந்தின் பசுமையான நினைவு. அங்கேதான் அவர் பெற்றோர்கள் பணி புரிந்து கொண்டிருந்தனர். கண் பார்வை மங்கலாக இருந்ததால் இந்த நினைவுகளும் மங்கலாகவே உள்ளன. நான்காம் வகுப்பு படிக்கும்போது வறுமையாலும், சத்துணவு இல்லாததாலும் கண் பார்வையை முழுவதும் இழந்தார். படிப்பு நிறுத்தப் பட்டது. அவர் பெற்றோர்கள் ராய்ப்பூர் நகருக்கு வேலை தேடி குடி பெயர்ந்தனர்.
 
தற்போது 43 வயதாகும் இவரை குடும்பத்தை பற்றியும், இளம் வயதை பற்றியும் கேட்ட போது "எனக்கு மூன்று மூத்த சகோதரிகளும், நான்கு இளைய சகோதரர்களும் உள்ளனர். அவர்கள் எல்லோரும் நல்ல நிலைமையில் இருப்பதாக கேள்வி பட்டேன். ஆனால் யாரும் என்னுடன் தொடர்பு கொள்வதே இல்லை. என்னை ஆதரிக்க முன் வருவதுவுமில்லை. " அவருக்கு தெரிந்ததெல்லாம் தன தந்தை இறந்த பின்பு, உடல் நிலை சரியாக இல்லாத தாய் அவள் மகன் ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்பது மட்டுமே.
 
கல்வி நிறுத்தியபின் வாழ்க்கையில் ஒன்றும் செய்யாமல் விளையாட்டிலேயே நேரத்தை கழித்தார். 23 வயதான போது அவர் தாய் "நீ திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாயா" என்று கேட்டார். மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் நகரத்தை சேர்ந்த அவள், தன மகனுக்கு தகுந்த ஒரு வாழ்க்கை துணையை தேடினார். மகனுக்கு 25 வயது ஆன போது நண்பர் ஒருவர் மூலமாக, கண் பார்வை மங்கிய ஒரு பெண்ணின் பெற்றோர்களின் தொடர்பு கிடைத்தத்து. இரு தாய்களும் ஆலோசித்த பின்பு ஆனந்திடம் "உனக்கு இந்த திருமணத்திற்கு சம்மதமா" என்று கேட்க, ஆனந்தும் "அவள் எனக்கு சமைத்து உணவளிக்கிறாள் என்றால் சம்மதிக்கிறேன்." என்று கூறினார். தற்போது 41 வயதான அஞ்சலி என்கிற அந்த பெண்மணிக்கும் ஆனந்திற்கும் திருமணம் நடந்து இன்று வரை இணை பிரியாது அன்யோன்யமாக வாழ்ந்து வருகிறார்கள்.
 
சிறு வயதில் ஆனந்த் கற்றுக்கொண்ட சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் பின்னர் அவர் வாழ்வில் பேருதவி புரிந்தது. சிறு வயதில், வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய சைக்கிள் கடையில் இதை கற்றுக் கொண்டு அங்கு பணி புரிந்து அதில் வரும் வருமானம் வீட்டிற்கு உபயோகமாக இருந்தது. இப்போது இதில் தேர்ச்சி பெற்று, ஒரு சைக்கிள் கொடுத்தால் அதில் என்ன குறைபாடு உள்ளது என்பதை துல்லியமாக அறிய முடிகிறது என்று கூறினார். இதில் ஈட்டும் வருமானம், மற்றும் ஊனமுற்றோர்களுக்கான மானியமான ரூபாய் 500ம் வைத்து கொண்டு, தன் மனைவி அஞ்சலி, குழந்தைகள் அனுஷ்கா, வினீத் இவர்களையும் பராமரிக்கிறார்.
 
அந்த சைக்கிள் கடையில் பணி புரியும் நண்பர் ஒருவர் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உதவினார். இரு குழந்தைகளும் ஆறாம் வகுப்பில் படிக்கின்றனர். வினித் அனுஷ்காவை விட ஒரு வயது சிறியவனாக இருந்தாலும், நேரே ஒன்றாம் வகுப்பில் சேர்ந்ததால், இருவரும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். "அவர்கள் பள்ளியில் சேர்ந்த பின், நாங்கள் ஒரு முறை கூட பள்ளிக்கு சென்றதில்லை. அவர்களுக்கு இலவச சீருடை, இலவச உணவு கிடைக்கிறது." என்று அஞ்சலி கூறினார். இதை தவிர அருகில் உள்ள ஒரு இளம் மாணவி நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த இருவருக்கும் பாடம் கற்றுக் கொடுக்கிறார்.
 
12 வயதான அனுஷ்கா துறுதுறுவென்று இருக்கிறார். ஆங்கிலம், ஹிந்தி சுலபமாக இருப்பதால் இவ்விரண்டும் அனுஷ்காவிற்கு மிகவும் பிடிக்கும். விஞ்ஞானம் சற்று கடினமாக இருக்கிறது. ஆனால் மருத்துவம் படிக்க வேண்டும் என்று விழைவதால் விஞ்ஞானம் நன்கு கற்க, பயிற்சி வேண்டும். நாங்கள் ஆகஸ்ட் 15 அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தோம். வினீத் பள்ளியில் கொடியேற்றத்தில் பங்கேற்று திரும்பி வந்தான். "என் தாய் பள்ளிக்கே போனதில்லை" என்று அப்பாவித்தனமாக கூறினான்.
 
அஞ்சலி தன் பெற்றோர்களிடம் தொடர்பில் இல்லை. "மேற்கு வங்காளம் சென்று அவர்களை சந்திக்க எங்களிடம் பண வசதி இல்லை. அவர்கள் ஒரு உறவினர் வீட்டில் வாடகை தராமல் தங்கி இருக்கிறார்கள். இது எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என சொல்ல முடியாது." என்று கூறினார். நாங்கள் பார்த்த மட்டும், அஞ்சலியும், ஆனந்தும் உறவினர் ஆதரவு ஏதும் இல்லாமல், தங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள். மிகுந்த ஆதங்கத்துடன்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். தங்கள் குழந்தைகள் படிப்பில் நல்ல திறமை உள்ளவர்களாக இருப்பதால், யாராவது அவர்களின் படிப்புக்கு உதவுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். "எங்கள் பெற்றோர்கள் எங்களை கை விட்டு விட்டார்கள். அதை போலவே எங்கள் குழந்தைகளும் எங்களை புறக்கணித்து கை விட்டு விடுவார்களோ" என்று அஞ்சுகிறார்கள்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்