Icon to view photos in full screen

“பெற்றோர்கள் தங்களின் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு வெளி உலகத்தை காட்டி பழக்க படுத்த வேண்டும். அவர்கள் சமூகத்தில் பழக கற்றுக் கொடுக்க வேண்டும்”

அரசாங்கத்தில் பணி புரியும் பலரும், தங்கள் முப்பது நாள் வருடாந்திர விடுமுறை நாட்களை குடும்பத்துடன் எதாவது ஊருக்கு செல்ல விழைவார்கள். ஆனால் அமீர் சித்திக் சற்று வித்தியாசமானவர்! டில்லியில் ஒரு அரசாங்க அலுவலகத்தில் கணினி அதிகாரியாக பணி ஆற்றும் இவர், ஊனமுற்றோர் பற்றி விழிப்புணர்வு ஏற்பட நாடெங்கும் பயணம் மேற்கொள்கிறார்! “Rider Ameer” என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படும் இவர் தன்னுடைய பழுது பார்த்து சரி செய்யப்பட ஸ்கூட்டரில் கிட்டத்தட்ட 53000 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார்! அவர் தனியாக பயணம் செல்லாத நேரங்களில், அவர் குழுவான Eagle Specially Abled Riders நண்பர்களுடன் சேர்ந்து பயணம் புரிகிறார்.

தன் வாழ்நாளில் பல வருடங்கள் ஜபல்பூரில் வாழ்ந்தார் அமீர். பதினெட்டு மாத குழந்தையாக இருக்கும்போது போலியோ நோய் அவரை தாக்கியது. அரசாங்கத்தின் BSNL நிறுவனத்தில் பணி ஆற்றினார் அவர் தந்தை. “எவ்வளவு பாசம் பொழியும் பெற்றோர்களாக இருப்பினும், தன் ஊனமுற்ற குழந்தையை அனைவர் முன்னும் கொண்டு செல்ல தயங்கத்தான் செய்வார்கள். எங்கே அனைவரும் அக்குழந்தையையும் தங்களையும் இகழ்வார்களோ என்கிற  அச்சம் எப்போதும் அவர்களுக்கு இருக்கும்”, என்கிறார் அமீர். ஆனால் அவர் பெற்றோர்கள் அவருக்கும் அவரின் நான்கு சகோதரர்களுக்கும் இடையே எந்த வித பாகுபாட்டையும் பாரபட்சத்தையும் காட்டவில்லை. முக்கியமாக, அவரின் நிலையை யோசித்து, இதற்கு கல்வி பெற்றாலே மற்றவர் தயவு இன்றி சுதந்திரமாக வாழ முடியும் என திடமாக நம்பினார்கள்.

அமீர் ஜபல்பூர் பல்கலை கழகத்திலிருந்து M Phil பட்டம் கணினிப் பாடப்படிப்பிலும், MCA (Master of Computer Applications) பட்டமும், மேலாண்மை நிர்வாக (Business Administration) பட்டமும் பெற்றார். இப்போது கணினி துறையில் முனைவர் பட்டத்திற்கும்,சமூக பணியில் முது நிலை பட்டமும் பெற முனைந்து கொண்டிருக்கிறார்! தன்னுடைய சாதனைகளிலே மயங்கி கிடைக்காமல், ஊனமுற்றோர் வாழ்வை மேம்படுத்தவும், இதைப்பற்றி விழிப்புணர்ச்சி அனைவருக்கும் ஏற்படுத்தவும் பெருமுயற்சி கொண்டுள்ளார்.

பழுது படுத்தப்பட்ட தன்னுடைய ஸ்கூட்டரை ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் ஜபல்பூரில் இருந்து வேலை தேடி டில்லி வந்தபோது வாங்கினார். வெகு விரைவில் தன்  விழிப்புணர்ச்சி பயணங்களை அதில் துவங்கினார். ஊனமுற்றோர்களுக்கு கல்வி அறிவு ஊட்டவேண்டும் என்ற விழிப்புணர்ச்சி அனைவருக்கும் ஏற்படுத்த, அவரும் அவரது 16 நண்பர்களும், 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் டில்லி முதல் பம்பாய் வரை கிட்டத்தட்ட 3500 கிலோமீட்டர் தூரம் பயணித்து, பதினான்கு நகரங்களில் இந்த விழுப்புணர்வுக்கு வித்திட்டார்கள். ஒவ்வொரு நகரத்திலும் அங்குள்ள ஊனமுற்றோர் சங்கத்துடன் தொடர்பு கொண்டு ஊனமுற்றோருடன் தன வாழ்க்கை பயணத்தையும், தங்களுக்கு உள்ள உரிமைகளை நிலை நாட்டவும் உரை ஆற்றினார்.

டில்லியில் உள்ள ஊனமுற்றோர்களுக்கு ஊனமுற்றோர் சான்றிதழ்கள் வாங்கி தர உதவி செய்தார். கொரோனா தொற்று காலங்களில் தேவையானவர்களுக்கு உணவு, பணம், முகக்கவசம், மருந்துகள், போன்ற பலவற்றை இலவசமாக விநியோகித்தார்.

2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் “Rape Free India” என்னும் இலக்குக்காக, மூன்றாயிரம் கிலோ மீட்டர் தனியே தன்னுடைய ஸ்கூட்டரில் சென்று புதிய சாதனை படைத்தார். இந்த வருடம் நேபால், பூட்டான் முதலிய இடங்களுக்கும் செண்டு சுமார் 4500 கிலோமீட்டர் பயணித்து கண் தானம் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். “கண் தானமே மிக சிறந்த தானம்” (“Netra Daan Maha Daan”) என்ற தலைப்பில் இதனை மேற்கொள்ள உள்ளார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்