Icon to view photos in full screen

"எனக்கு நாட்டியம் மற்றும் அடுதல் (baking) மிகவும் பிடிக்கும். என் உறவினர் எனக்கு கிடார் வாசிக்க பயிற்சி அளிக்கிறார்"

13 வயது பெண்களை போல ஐஸ்வர்யா ரத்திற்கும் கடைகளுக்கும், வணிக வளாகங்களுக்கும் சென்று புதுப்புது ஆடைகளை வாங்கி அணிந்து கொள்ள மிகவும் பிடிக்கும். தனது நீண்ட கூந்தலின் மீது அலாதியான விருப்பம் கொண்டு, வெட்டாமல் பாதுகாக்கிறார். அதனை சீவி விட தன்னுடைய தாயுடன் சண்டையும் போடுகிறார். அலங்கார அணிவகுப்பில் பங்கேற்று இறுதி இடத்தை வென்ற 30 பேரில் ஒருவரான இவர் Star Icon பட்டத்தையும் ரூபாய் 25000 பரிசுத் தொகையையும் வென்றார்.

ஆனால் மற்ற 13 வயது பெண்களை காட்டிலும் ஒரு விஷயத்தில் இவர் வேறு பட்டவர். என்னவென்றால் இவர் Down Syndrome (DS) என்னும் பாதிப்பால் தாக்கப் பட்டவர். கொல்கத்தாவில் உள்ள Aims Media நிறுவனம் நடத்திய இவர் பங்கேற்ற அலங்கார அணிவகுப்பு ஊனமுற்றோர்களுக்காகவே பிரத்யேகமாக நடத்தப் பட்டது. ஆஷி என்று செல்லமாக அழைக்கப் படும் இவர், பற்பல விருதுகளையும், பரிசுகளையும் வென்று உள்ளார். கிட்டத்தட்ட இதனை வழக்கமாகவே கொண்டு விட்டார்! பள்ளிகளுக்கிடையே நடை பெரும் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் , ஸ்கேட்டிங், நாட்டியம் போன்ற பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இணைய தளங்கள் (online) மூலம் நடத்தப்படும் போட்டிகளும் வெற்றி வாகை சூடி உள்ளார். சென்ற வருடம், குடும்பத்தினர் யாரும் இல்லாமல் தனியாகவே குஜராத் சென்று அங்கு நடந்த ஸ்கேட்டிங் Special Olympics trials பங்கு கொண்டு 6 நாட்கள் தங்கி இருந்தார். ஆனால் Special Olympics போட்டியில் பங்கு பெற தேர்ச்சி கிடைக்கவில்லை.

ஆஷியின் மூத்த சகோதரியின் பெயர் அபீப்சா. செல்லமாக குஷி என்று அனைவராலும் அழைக்கப் படுகிறார். ஆஷி குஷியை விட ஆறு வயது சிறியவள். இவர்கள் தாயார் சுனந்தா, ஆஷி பிறக்கும்போதே ஏதோ சரியில்லை என உணர்ந்தார். இரண்டு மாதமே ஆன போது மருத்துவர்கள் karyotyping test என்னும் பரிசோதனையை செய்ய பரிந்துரைத்தனர். இந்த பரிசோதனை மூலம் Down Syndrome (DS) இருப்பது தெரிய வந்தது. இது மரபியல் சார்ந்து வரும் நோய். DNAவில் ஒரு chromosome அதிகமாக இருப்பதால் வரும் பாதிப்புதான் DS.

இதனால் மனமுடைந்து போன சுனந்தா மூன்று மாதங்களுக்கு மனச்சோர்வால் பாதிக்கப் பட்டார். ஆஷிக்கு இம்மாதிரி நோய் இருப்பதை ஒப்பு கொள்ளவே மூன்று மாதங்கள் ஆயின என்று ஆஷியின் தந்தை அனில் பிரசாத் கூறுகிறார். சுனந்தாவின் பரிதாபமான மன நிலையை கண்டு அவருக்கு உதவி செய்ய குடும்பத்தின் உதவியை நாடினார். சுனந்தாவின் சகோதரி அவருடன் இருந்து யதார்த்த நிலையை தைரியமாக சந்திக்க ஊக்குவித்தார். மற்ற குழந்தைகள் ஆஷியை வேறொரு கண்ணோத்துடன் பார்த்தாலும், அவளுக்கு இயல்பு வாழ்க்கை அளிக்க சுனந்தா உறுதி பூண்டார். மற்ற குழந்தைகளுடன் பழகவும், விளையாடவும் கற்றுக் கொடுத்தார். அந்த கால கட்டத்தில் இவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டியோகர் என்ற ஊரில் வாழ்ந்து வந்தார்கள். பின்னர் ஜோத்பூர் என்ற ஊருக்கு இடம் பெயர்ந்தனர். அங்கே Modern Public School என்ற பள்ளியில் ஆஷி சேர்க்க பட்டார். இந்த பள்ளி எல்லா குழந்தைகளுக்கும் பொதுவாக இருப்பினும், ஊனமுற்றவர்கள் தேவைகளை நன்கு புரிந்திருந்த ஆசிரியர்களை கொண்டிருந்தது.

இந்த நல்ல தொடக்கத்திற்கு பின்ப, ஆஷி பாட்னா நகற்றில் உள்ள Kangaroo School என்னும் பள்ளியில் சேர்ந்தார். அங்கு ஆஷிக்கு உதவி புரிந்த சிகிச்சையாளர் இவர்கள் நோய்டா நகருக்கு செல்லுமாறு பரிந்துரைத்தார். அங்கே ஆஷிக்கு சிறந்த உதவி கிடைக்கும் என்றும் கூறினார். தற்போது ஆஷி Nai Asha special school என்னும் சிறப்பு பள்ளி கூடத்தில் படிக்கிறார். குஷியும், அவர்கள் உறவினர் நிஷாந்தும் ஆஷிக்கு உறுதுணையாக இருந்தார். நிஷாந்த் இவர்களுடன் மூன்று ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். மற்றவர்களுடன் எப்படி நடந்து கொள்வது, அதிலும் ஆண் பிள்ளைகளுடன் எவ்விதம் நடந்து கொள்வது என்பதெல்லாம் நிஷாந்த் ஆஷிக்கு சொல்லி கொடுத்தார். DS உள்ள பெண் குழந்தைகள் மற்றவர்களை -- அதிலும் ஆண் குழந்தைகளை -- கட்டிப் பிடிக்கும் பழக்கம் உடையவர்கள். நிஷாந்த் ஆஷிக்கு கிடார் வாசிக்க கற்று கொடுத்து பள்ளியலேயே தன் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ள கார்த்திக்தான் சிறந்த நண்பன் என்று கூற கற்றுக் கொடுத்தார். 

ஆஷியின் முன்னேற்றத்திற்கு தன் கணவர் அனில் பிரசாத் அளித்த ஆதரவை சுனந்தா மிகவும் நினைவு கூர்ந்தார். இதனால்தான் தானும் ஆஷிக்கு முழு மூச்சுடன் உதவி புரிய முடிகிறது என்று கூறுகிறார். குடும்பத்தில் எல்லோரும் நகைச்சுவையுடன் கூறுவது: "அனில் செய்யும் ஒரே உதவி, அலுவலகத்திலிருந்து வரும்போது செர்லாக் எனப்படும் குழந்தை பால் பௌடரும், டயபர்களையும் வாங்கி வருவதே!" ஆனால் அவர் கூறுவதோவெனில் "எனக்கு குஷியை விட ஆஷியின் குழந்தை பருவம்தான் நினைவில் உள்ளது. எங்கள் வீட்டு தேவதையே ஆஷிதான். என்னுடைய மாமியார், மாமனார் மிகுந்த உதவி செய்தனர்” என்று சுனந்தா கூறுகிறார். தனக்கு தன் மாமனார் ஆஷியை பல இடங்களுக்கு அழைத்து செல்ல ஏதுவாக இருக்க ஒரு scooty பரிசளித்தார் என்றும் கூறினார்.

"நான் ஐஸ்வர்யாவின் தாய் என்றே அனைவரும் அறிவார்கள். என்னை நேர்காணல் செய்பவர்கள் எல்லாம் என்னால் எப்படி ஆஷியை வளர்க்க முடிந்தது என வியப்புடன் கேட்கிறார்கள்" என்று சுனந்தா கூறுகிறார். ஆஷியை பார்த்து கொள்வது முழு நேர வேலை. சுனந்தா சமையல் அறையில் புதிதாக ஏதாவது முயன்று சரியாக வரவில்லை என்றால் "முயற்சி செய்து கொண்டே இருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம்" என்று ஆஷி  ஊக்குவிப்பார்.

குஷியை பொறுத்தவரையில், தன்னுடைய சகோதரி மாறு பட்டிருக்கிறார் என்று உணர்ந்த பின்னர் தன் தங்கையை பிரிந்து ஒரு கணம் கூட இருக்கவில்லை. "இப்போதெல்லாம் என் நண்பர்கள் என்னை பார்த்தவுடன், என்னை பற்றி கேட்காமல் என் தங்கையை பற்றித்தான் முதலில் கேட்கிறார்கள்" என்று கூறுகிறார். "ஐஸ்வர்யாவின் அடுமனையிலிருந்து கேக் வாங்குவது என்பதே என் கனவு" என்றும் கூறுகிறார். அடுதல் (baking) ஆஷுவிற்கு மிகவும் விருப்பம் உள்ளது. வீட்டிலேயே ஆஷிக்கு மிகவும் பிடித்த இடம் சமையல் அறை! தன்னுடைய தாயின் உதவியுடன் ஸாண்டவிச் மற்றும் ரொட்டி செயகிறார். தனக்கு கணிதம், ஹிந்தி, பியானோ வாசிப்பது, ஓவியம் வரைவது, ஸ்கேட்டிங் போன்ற பலவற்றில் ஆஷி ஆர்வம் கொண்டுள்ளார். காலையில் 20 நிமிடம் யோகா பயிற்சியுடன் துவங்குகிறார். பேக்கரி நடத்துவதையே தொழிலாக நடத்தவேண்டும் என்று விழைகிறார். மேலும் ஒரு லேப்டாப் வைத்துக்கொண்டு பலருக்கு வேலை வாய்ப்பு விழைகிறார். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உதவி புரிய வேண்டும் என்ற இலக்கும் கொண்டுள்ளார்.

தற்போது சுனந்தாவின் பெரிய கவலை தனக்கும், தன கணவருக்கும் பிறகு, ஆஷி  என்ன .செய்வாள் என்பதே. ஆனால் குஷியும், நிஷாந்தும் ஆஷியை நன்கு பார்த்து கொள்வார்கள் என்ற திடமான நம்பிக்கையும் கொண்டுள்ளார். DS உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இவர் கூறும் அறிவுரை: "முயற்சியை கை விடாமல் செயல் படுங்கள். கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ உள்ளது."


புகைப்படங்கள்:

விக்கி ராய்