Icon to view photos in full screen

"ஊனமுற்ற குழந்தைகளின் வாழ்வை மறுமலர்ச்சி செய்ய நானும் ஒரு காரணமாக இருக்கிறேன் என்பதற்காக நான் கடவுளிடம் மிக்க நன்றி உள்ளவனாக இருக்கிறேன்."

பிறக்கும்போதே கண் தெரியாமலோ, காது கேளாமலோ, உடல் ஊனம் உடையவர்களாகவோ இருப்பவர்களை விட, வாழ்க்கையில் சில காலம் கடந்து இம்மாதிரி ஊனங்களை பெற்றவர்கள் இன்னும் சிரமப்படுவார்கள். திடீர் என்று தங்கள் புலன்களை இழந்தவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி கஷ்டப்படுவார்கள். 39 வயதான ஐபோக்கிலோங் சோத்துன் வாழ்க்கையில் இதுதான் நடந்தது. இப்போது இவருக்கு கண் பார்வையும் இல்லை, காதும் கேட்காது. ஆனால் பிறக்கும் போது இவை எல்லாம் சரியாகத்தான் இருந்தன.
 
ஐபோக்கிலோங் சோத்துன் லைட்கர் ரிங்கி என்ற ஊரில் பிறந்தவர். இவரின் பெற்றோர்கள் டாம் தபா, ட்ரோலியன் சோத்துன் ஆவார்கள். டாம் கட்டிட வேலை செய்து தினக் கூலி பெறுபவர். இவர்களுக்கு ஐபோக்கிலோங் பிறகு தற்போது 26 வயதான வெரசுக் என்ற பெண்ணும், 24 வயதான கிராபோக் என்று மகனும் உள்ளனர். எங்கெங்கு கூலி வேலை கிடைக்கிறதோ அங்கெல்லாம் இந்த குடும்பம் இடம் பெயர வேண்டி இருந்தது. எப்படியோ சமாளித்து, லைட்கர் ரிங்கி ஊரில் நிலம் வாங்கி தங்கள் வயதான காலத்திற்காக சிறு வீடும் கட்டிக் கொண்டார்.
 
தன்னுடைய இளம் வயதின் பசுமை நிறைந்த நாட்களை பற்றி நினைவு கூர்ந்தார். "எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். நான் எப்போதும் அவர்களுடன் விளையாடிக் கொண்டே இருப்பேன்.அந்த நாட்கள் திரும்பி வராதா என்று நான் அவ்வப்போது ஏங்குவதும் உண்டு." 9ம் வகுப்பு பொது கண் பார்வை குன்ற தொடங்கியது. cerebral malaria என்ற நோயின் தாக்கத்தால் 12ம் வகுப்பு படிக்கும் போது , காதும் கேளாமல் போயிற்று. optical dystrophy என்ற நோயின் தாக்குதலால் காலப் போக்கில் கண் பார்வை இன்னும் மோசமடையும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்" என்று கூறினார். காதும் கேளாமல், கண்ணும் தெரியாமல் போனதால் இவர் மிகவும் மனமுடைந்து போனார். நம்பிக்கை இழந்து, விரக்தி கொள்ள தொடங்கினார். "இம்மாதிரி வாழ்ந்து என்ன பயன்? உயிரை விட்டு விடுவதே மேல்" என்று எண்ண தொடங்கினார்.
 
 தகுந்த காலத்தில் ஊக்கமும் ஆதரவும் கிடைத்திருக்க விட்டால் ஐபோக்கிலோங் வாழ்க்கை எப்படி தடம் மாறி சென்றிருக்கும் என நமக்கு தெரியாது! நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு தகுந்த ஆதரவும், ஊக்கமும் அளித்ததால் தன் நம்பிக்கை பெற்று "நடந்தது நடந்து விட்டது. இதனால் சோகமுற்று துவண்டு போய் ஒன்றும் பயன் இல்லை" என்று மனதை திடப் படுத்திக்க கொண்டு நேர்மறை எண்ணங்களுடனேயே வாழ்க்கையில் சோதனைகளை சந்தித்தார். கல்வியில் வெற்றி பெற்றார். Shillong Commerce College என்னும் கல்லூரியில் B.Com பட்டமும், North Eastern Hill University பல்கலைக்கழகத்திலிருந்து M.Com பட்டமும் பெற்றார்.
 
"எனக்கு ஊனம் இல்லாமலோ அல்லது இன்னும் கல்வி அறிவு பெற்றிருந்தாலோ, என் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை கண்டிருப்பேன். என் நண்பர்களை போல நானும் அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரிந்திருப்பேன்." என்று ஏக்கத்துடன் கூறினார். ஆனாலும் என்றும் இவர் சுய பச்சாதாபத்தில் துவண்டு போனதில்லை. இன்னும் சொல்லப் போனால்,தன்னுடைய பணி ஊனமுற்ற குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதால் பயனுற்றதாக உள்ளது என்று கூறுகிறார். தற்போது இவர் Bethany Society  நடத்தும் Jyoti Sroat Inclusive School என்னும் பள்ளியில் உதவி ஆசிரியராக பணி புரிந்து, பொருளாதார பாடத்தை 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும், 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொருளாதாரம், கணிதம் முதலியவற்றையும் கற்று தருகிறார். இந்த பள்ளியில் நிதி வசதியிலும் தாழ்த்தப்பட்டவர்கள், மற்றும் பல வித ஊனங்கள் உள்ளவர்களும், ஊனமே இல்லாதவர்களும் படிக்கிறார்கள்.   
 
 B.Ed Special Education தொலை தூரக் கல்வி படிக்கும் போது Jyoti Sroat பள்ளியின் தங்கும் விடுதியில் பணி புரியும் பிளின்டா க்லைன் என்பவரை சந்தித்தார். தற்போது இவர்களுக்கு திருமணமாகி 5ம் வகுப்பு படிக்கும் மகன் பங்கிடலாங் காஸ்ரோக்லேங் என்கிற 9 வயது மகனும், 1ம் வகுப்பு படிக்கும் பண்றோயலங் காஸ்ரோக்லேங் என்னும் 7 வயது பெண்ணும் இருக்கிறார்கள். 75 மற்றும் 65 வயதான இவர் பெற்றோர்கள் லைட்க்கோர் ஊரில் தங்கள் வீட்டில் வருகிறார்கள்.
 
 இவர் ஊனமுற்றோர் பற்றிய பல குழுமங்களிலும், நிறுவனங்களிலும் தொடர்பு கொண்டுள்ளார். இவருடைய பொழுது போக்கு சதுரங்கம் ஆடுவது, தோட்ட கலை, இசை கேட்டு ரசிப்பது போன்றவை. மிகவும் நூதனமாக பழைய பாட்டில்களை சேகரித்து, சிலவற்றை மறுசுழற்சி செய்யவும், சிலதில் தக்காளி செடிகளை வளர்க்கவும் பயன் படுத்துகிறார்.

புகைப்படங்கள்:

விக்கி ராய்